இயற்கை வேளாண்மை / விவசாயம் பற்றிய கேள்வியும் பதிலும்
இயற்கை வேளாண்மை , ஆடுவளர்ப்பு , தீவன செலவுகள் , இயற்கை அங்காடிகள் ,நாட்டு மாடுகளின் அவசியம் ,தற்சார்பு விவசாயம்/வாழ்வியல் ,குழந்தைகளின் படிப்பு அல்லது வீட்டுகல்வி முறை என்று கோமணம் வரைக்கும் இது தேவையா இல்லையா என்று ஒரு மிகபெரும் விவாதத்தின் முடிவில் இந்த பதிவு. அனைவருக்கும் நிச்சயம் பயன் படும்
ஆர்கானிக் உண்மையா?
உண்மை தான் .ஆனால் உண்மைத்தன்மை எப்படி என்று என்னிடம் கதைக்க வேண்டாம்.இயற்கை விவசாயம் பற்றிய தொகுப்பே இன்று இப்படி அழைக்க படுகிறது
ஆர்கானிக் என்றால் என்ன?
ஒரு வகையான விவசாய முறை. ரசாயனம் என்று ஒரு விவசாய முறை உள்ளது .ஆனால் இது அஅதற்க்கு நேர் எதிரானது.இவர்கள் ஏற்பதை அங்கு ஏற்று கொள்வது இல்லை . இவர்கள் சொல்வது அங்கு ஏற்று கொள்வது இல்லை .
எது உண்மையான ஆர்கானிக்?
ஒருவகையான இயற்கையோட இயைந்து தேவைக்கு மனசாட்சியுடன் அதன் போக்கில் இருப்பதே என்று கருதுகிறேன்.
ஆர்கானிக் வணிகம் சரியா?
வணிகம் என்று வந்து விட்டதால் எல்லாம் சரியே அவரவர் பார்வையில் .
ஆர்க்கானிக் என்ற வார்த்தை சரியா?
ஆங்கில வார்த்தை ஆங்கில புலவர்களிடம் மட்டுமே இந்த வார்த்தை பற்றி கேட்டு அறியவேண்டும்.
நம்மாழ்வார் படத்தை ஆர்கானிக் கடைகார் வைக்கலாமா?
தனிப்பட்ட மனிதர்களின் விருப்பதை நாம் எப்படி சரி தவறு என்று கூற முடியும்
அமிர்த கரைசல் தேவையா?
தேவை இருக்கும் இடத்தில தேவை தான்
எது உண்மையான அமிர்த கரைசல் ?
அமித கரைசல் தரரிபது பற்றி படித்து விட்டால் விடை கிடைத்து விடும்.பயன்படுத்தினால் பலனும் கிடைத்து விடும்.
நாட்டு மாடு அவசியமா?
அவசியம்
மாடு அவசியமா?
அவசியம்
தற்சார்பு அவசியமா? முடியுமா? செல்போன், டிராக்டர் உபயோகப்படுத்தலா?
அவசியம் .முடியும் ,நிச்சயம் பயன் படுத்தலாம் .
உடைஉடுத்தலாமா இயற்கை விவசாயி?
வேற வழி அனைவரும் உடுத்த தானே வேண்டும். கோவணம் மட்டும் உள்ளது அதையும் புடுங்கி விடும் எண்ணம் வேண்டாம் .
வேஸ்ட் டீ கம்போசர் உபயோகப்படுத்தலாமா?
தேவை உள்ளோர் பயன் படுத்தி பயன் பெறலாம்
மாட்டுப்பால் தேவையா?
ஆம்
மாட்டுப்பால் A2 or A1ஆ…? எது சிறந்தது?
பெரும் அறிவியல் அந்த ஆளவு அறிவு இல்லை எனக்கு .ஆனால் காய்ச்சிய பால் எனக்கு பிடிக்கும் .
பால் குடிக்கலாமா?
தவறேதும் இல்லை
பள்ளியில் குழந்தையை சேர்க்கலாமா?
நிச்சயம்
அறுவடை செய்ததை விற்கலாமா?
தேவைக்கு அதிகம் இருப்பதாய் விற்கலாம்
மதிப்பு கூட்டலாமா?
நிச்சயம் செய்யலாம் .
வேலையாளை வைத்து விவசாயம் செய்யலாமா?
லாம்
கார்ப்பரேடில் வேலை செய்து விவசாயம் செய்யலாமா?
லாம்
பணக்காரன் விவசாயம் செய்யலாமா?
லாம்
ஈடுபொருட்களை வெளியிலிருந்து காசுகொடுத்து வாங்கலாமா?
லாம்
ஈடுபொருள் போடலாமா?
லாம்
மண்புழு உரம் நல்லதா?
நல்லது
மண்புழு உரம் வாங்கலாமா?
லாம்
மண்புழு ஆப்பிக்க காலியா?
புரியவில்லை
மரம் நடவேண்டுமா?
வேண்டும்
திசு, மரபணுமாற்று மரங்கள் ஹைபிரீட் மரங்கள் வளர்த்தால் இயற்கை என்ற வட்டத்திற்குள் வர தகுதி உண்டா?
மரம் தானே அது வளர்ப்போம். சிறு வருமானம் வரும்படி .
எந்தெந்த மரங்கள் வளர்க்கலாம் என்பதை விட எது வளர்த்தால் எது வளர்க்காவிட்டால் நீங்கள் இயற்கை விவசாயி என கோரமுடியாது.
சத்தியமா அறியவில்லை .மரம் அதில் பழம் ,பலன் கொடுக்கும் மரம் மட்டுமே அறிவேன்
ஆடு, கோழிகளில் வளர்ப்புக்கு மரபு இனங்கள் இல்லாதது குறையா?
அது ஆடும் கோழியும் தானே .இதில் மரபு என்று சரியான தெளிவு இல்லை. கடைசியில் உணவுக்கு பயன் படுத்துகிறேன்.
உருளை, தக்காளி, வெங்காயம் தமிழர் உணவா?பெயர் தமிழ் பெயரா?
பசிக்கு உணவு .அப்படித்தான் எண்ணுகிறேன்
மரபு காய்கறிகள் இல்லாதவை உண்ணத்தக்கதா?
மரபு காய்கறிகள் என்று தனி வகைகள் கேள்வி பட்டது இல்லை .
வருமானம் வருமா?
நிச்சயம் உண்டு
தற்சார்பு சாத்தியமா?
சாத்தியமே
“கோவணம் !” …இருப்பதிலேயே டாப் பதில்…
கேட்ட பாரியை பாராட்டுவதா…பதில் சொன்ன உங்களை பாராட்டுவதா…