கழிவுநீர் தொட்டியில் ஹைட்ரஜன் சல்ஃபைடு, மீத்தேன், கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேறும் .இது ஆங்கிலத்தில் sewer gas என்று அழைக்க படுகிறது
- ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயு மட்டும் இருந்தால் அழுகிய முட்டை போன்று நாற்றமடிக்கும்.
- கண்களில் எரிச்சல் உண்டாகும். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.
- பதற்றம்,தலைவலி போன்றவையும் உண்டாகும்.
இந்த ஹைட்ரஜன் சல்ஃபைடுடன் கார்பன் மோனாக்சஸடும் மீத்தேனும் சேரும்போது மனிதர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.
கழிவுநீர்த் தொட்டி, பாதாளச் சாக்கடை போன்றவற்றைச் சுத்தம் செய்யும்போது, மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்தக் கூடாது என்றும் இயந்திரங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் 2014-ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டம் இருந்தாலும் நடைமுறைப்படுத்துவதில் கூடுதல் அக்கறை இல்லாத்தே இந்தத் துயங்களுக்குக் காரணம். அரசாங்கம் முயற்சி செய்தால் மனிதர்கள் பலியாவதைத் தடுக்க முடியும்.