இயற்கை வேளாண்மை கட்டுரை தொகுப்பு
கோ-நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வேளாண்மை / விவசாயம் கற்றல் :
இயற்கை வேளாண்மை கட்டுரை தமிழகத்தில் பல லட்சக் கணக்கான மக்களின் மனதில் இயற்கை விவசாயம் , இயற்கை வேளாண்மை என்று மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் .கரூர் வானகத்தின் வாயிலாக பலருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்தவர் திரு கோ. நம்மாழ்வார் அவர்கள் . இவர் இயற்கை விவசாயம்பற்றிக் அதிகம் களம் இறங்கி கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டு என்ற ஒரு வெளிநாட்டு இயற்கை விவசாயி அவர்களிடம் தான் . நம்மாழ்வார் அவர்களுக்கு உலக விவசாயம் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அதிகம் பயன் படுத்தும் விவசாய முறைகள்மற்றும் அது பற்றிய அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே.
Image Source : ashishkothari51
பாரம்பரிய விதைகள் மேலான காதல்:
இந்திய பாரம்பரியமான அனைத்து விதை ரகங்களை மிக அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். பாரம்பரிய விதிகம் பற்றிய பேச்சு வரும் நேரம் அல்லது பழ நேரங்களில் மத்திய அரசின் கட்டுபாட்டில் இருந்த மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த திரு .ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவை எப்பொழுதும் குறிப்பிட்டுப் பேசுவார். ரிச்சார்யா அவர்கள் இந்தியாவின் 22,972 பாரம்பரியமான நமது நிலதிருக்கேஉரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் சென்று விடமால் பாதுகாத்தவர். இவரு முட்டுகட்டைகள் ஏற்படுத்தியவர் என்பதால் தனது மத்திய அரசு பணியையும் இழந்தவர். ரிச்சார்யா மற்றும் இந்தியாவின் பல இயற்கை விவசாய / விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனதின் கையில் 2003-ல் மத்திய அரசு ஒப்படைத்தது.
இதனை அறிந்த நம்மாழ்வார் அவர்கள் மிக மன வேதனை அடைந்து இந்தியாவின் ஆகா சிறந்த பாரம்பரிய விதைகள் நம்மை விட்டு சென்று விட்டது என மனம் வருந்தி கண்ணீர்விட்டு அழுதார் .
இயற்கை வேளாண்மை பற்றிய கொள்கைகள் :
கோ.நம்மாழ்வார் அவர்களை அதிகம் ஈர்த்தவை ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகள் தான் J.C .KUmarappa அவர்கள் இந்தியாவில் இயந்திரத்தின் பயன்பாடுகளை அறிமிகம் செய்த பொழுது ‘‘ இயந்திர டிராக்டர் மிக நல்லாத்தான் உழும்; ஆனால் இயற்கை முறையில் விவசாயம் செய்ய சாணி போடாதே’’ என்று சொன்னதை மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார்.
மேலும் விவசாயிகளிடம் சென்று பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்றவை பயிரிடுங்கள்.ஏன்னா ,, ‘‘ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச் சாப்பிடப்போறீங்க?’’ என்று நமது நாட்டின் பாரம்பரியப் பழங்களையே வலியுறுத்துவார். மிக முக்கியமாய் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதையும் இயன்றவரை தவிர்த்தே வந்தார்.
நைட்ரஜன் சத்து குறைபாடு :
இரசாயன உரங்களை கொண்டு நிலத்தில் ஏற்படும் நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற இரசாயன வேளாண்மை உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று படித்த பலரும் வாதிட்டபோது, பழ தலைமுறைகளாக நாம் செய்து வரும் பாரம்பரிய உழவு/ வேளாண்மை முறையான பயிர் சுழற்சி மற்றும் உழவு மூலம் இயல்பாகவே காற்றில் இருந்து கிடைக்கும் நைட்ரஜன் சத்து நமது மண்ணில் வளம் மற்றும் நைட்ரஜன் சத்து அளவை இயற்கையான முறையில் எந்த ரசாயனமும் இல்லாமல் அதிகரிக்கிறது என்று முதன்முதலாக பலருக்கு எடுத்துகாட்டி அனைவருக்கும் நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார்.
இந்தியாவில் பசுமைப் புரட்சியின் காரணமாக மத்திய மாநில அரசு உரங்களை பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவித்துக்கொண்டிருந்த நேரத்தில் , நம்மாழ்வார் தமிழகத்தின் பல கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்து , இரசாயன உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை எவ்வாறு கூடும், அப்படி கூடும் பொழுது அது அளவுக்கு அதிகமான தண்ணீரை எப்படி உறிஞ்சுகிறது என்பதை விவசாயிகள் புரியும் படி சிறிய செயல்விளக்கம் மூலம் நிரூபித்துக்காட்டுவார் .
இன்றைக்கு இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாயம்பற்றிய ( பஞ்சகாவியம் , பீஜமிர்தம் , அமிர்தகரைசல் )விழிப்புணர்வு தமிழகத்தில் அதிக அளவு புரிதல் இருபதற்கு அதற்கு நம்மாழ்வாரின் மிக முக்கிய பழ செயல்பாடுகளே காரணம்.
மண்டல வேளாண்மை ஆராய்ச்சி பணி :
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் , ஊரெங்கும் பசுமைப் புரட்சி பற்றிய கருத்துக்கள் அதி தீவிரமாகப் பரவிய காலகட்டத்தில், நம்மாழ்வார் அவர்கள் இயற்கை விவசாயதிற்கான தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார். அதே நேரம் இந்த வாழ்வியல் பயணதிருக்கு தான் பார்த்துவந்த அரசு பணியான “ மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்” இருந்த தனது மத்திய அரசு பணியையும் உதறினார்.
இயற்கை வேளாண்மை கட்டுரை ஒட்டுரகவிதைகள் பற்றிய வழிகாட்டல் :
நம்மில் பலரும் நினைத்து கொண்டு இருபது போல நம்மாழ்வார் இன்றைய கால நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல.அவர் பயோடெக்னாலஜியின் அத்தனை விதமான பரிமாணங்களையும் எப்பொழுதும் மிகவும் ஆழமான விடயங்கள் தெரிந்து வைத்திருப்பார் .
அவரின் நேரடி வானகம் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்கு நன்கு தெரியும்.இருப்பினும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் கிடைக்கும் பயிர்களால் மண்ணுக்கு, மனிதனுக்கு அதிகமான கேடு ஏற்படும் என்ற காரணத்தை அறிந்து கொண்டு நம்மாழ்வார் அதனை எதிர்த்தார். நமது பாரம்பரிய விதைகளை கொண்டு உருவாக்கிய ஒட்டுரகங்களை ஆதரித்தார்.
இவரது வழிகாட்டுதலில் மூலம் ஒரு புதிய ஒட்டு எலுமிச்சை ரகத்தையே உருவாக்கினார் புளியங்குடி விவசாயி திரு .அந்தோணிசாமி அவர்கள். அதில் மிக பெரும் வெற்றியும் பெற்றுள்ளார் .இன்றும் இந்த எலுமிச்சை மிகவும் விரும்பி வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
பி.டி ( Genetically Modified) கத்திரியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் எண்ணத்தில் அன்றைய மத்திய அரசின் சுற்றுச்சூழல்அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டங்களில் , நம்மாழ்வார் தனது பிரதிநிதிகளை அனுப்பி பி.டி-க்கு எதிராகப் பேச செய்தார். அதேபோல் நம்மாழ்வாரின் நண்பர்களான அரச்சலூர் செல்வம், டாக்டர் சிவராமன் ஆகியோர் அன்றைய நமது மாநில முதல்வராக இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் BT கத்தரிக்கு தடை உத்தரவும் பெற்றனர்.
60 மற்றும் 70-களில் கலப்பின ரகங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ பெரும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது இந்தவகையான கலப்பினங்களைப் பற்றிப் படித்தவர்கள், அனுபவம் வாய்ந்தவர்களிடம் ( சிறு ,குறு மற்றும் பேரு விவசாயிகள் ) கூடப் பெரிதாக விழிப்புணர்வு இல்லை. அந்த கால கட்டடத்தில் “கலப்பினம் மற்றும் வீரிய ரகங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் உற்பத்தியைப் பெருக்குவதற்காகன தோ அல்லது விவசாயிகளுக்கு பயன் தர கூடியதோ அல்ல.இவைகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் ரசாயன உரங்களை விற்பனை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான உணவு அரசியலே,இதனை அரசு பசுமைப் புரட்சி பெயரில் கலப்பின ஊக்குவிப்பு” என்றார் .
இயற்கை வேளாண்மையில் ஒற்றை நெல் நாற்று நடவு :
ஆப்பிரிக்காவின் நாட்டின் மடகாஸ்கர் நெல் நடவு என்பது உலக அளவில் மிகப்பிரபலமானது. ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி என்றழைக்கப்படும். இந்த மடகாஸ்கர் நெல் நடவு பற்றிய பயன்கள் மற்றும் விளைச்சல் பற்றி 1960-களில் வெளியே தெரிந்தது. இந்த முறையில் விதை, நீர், நேரம் அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுத்த ஒற்றை நாற்றுநடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது நமது முன்னோடி தமிழர்கள்தான் என்ற உண்மையை தக்க ஆதாரங்களுடன் உலகிற்கு எடுத்து கூறி நிருபித்தார் .இன்றைக்குத் நமது தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு பிரபலமாகி, ஏக்கருக்கு 27 மூட்டைகள் வரை நெல் மகசூல் ஈட்ட முடிகிறது .இந்த பெருமையும் இவரையே சேரும் .
ஊடக விளம்பரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்சாரங்கள் எனத் துரித உணவுக் கலாச்சாரம் இந்தியாவை மென்று தின்றுகொண்டிருந்தத காலத்தில் இத்தாலி நாட்டில் நடந்த அவசர ( Fast Food ) உணவுக்கு எதிரான ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பிய நம்மாழ்வார் அவர்களால் இங்கு ஆரம்பித்து வைக்க பட்டது தான் இன்றைய ‘ஸ்லோ ஃபுட் மூவ்மெண்ட்’. இன்றைக்கு பல இடங்களில் கெலாக்ஸ்களுடன் நமது பாரம்பரியமான சிறுதானிய சாமையும் கம்பு உணவுகள் போட்டிபோட முடிகிறது .
சுற்றுசுழல் ஆர்வம் , தாய்மொழி பற்று மற்றும் வயலில் பாடுதல் :
நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல. மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளர் . மேற்குத்தொடர்ச்சி மலையில் இருக்கும் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். அதற்கான காரணமாக அவர் கூறியவை சோலைக்காடுகள் இல்லை எனில், ஆறுகள் உற்பத்தி கிடையாது, மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார். அனைத்து கலந்துரையாடல்களிலும் , அனைத்து கருத்தரங்குகளிலும் “ நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு “ இந்த வசனத்தைப் பேசத்தவறியதே இல்லை நம்மாழ்வார்.
தமிழ் பெரும்பாலும் பாமரத் தமிழ்தான் இருக்கும் .இருப்பினும் , தமிழ் ,ஆங்கில இலக்கியம் வரை அவருக்குப் பரிச்சயம். பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் அறிந்தவர். ஒரு பாமரனுக்கு தமிழில் சொன்னால்தானே ஏழை விவசாயிக்குப் புரியும் அவனிடம் ஆங்கிலத்தில் சொன்னால் என்ன புரியும் என்பார்.
இயற்கை வாழ்வியல் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் மிக அதிகமான ஈடுபாடு கொண்டவர் .கடந்த மூன்று ஆண்டுகளாக அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஆர்வம்காட்டினார். அதில் நிறையக் கற்றுக்கொள்ள மிகுந்த ஈடுபாடு காரணமாக கற்று கொண்டும் இருந்தார் .
திரு.நம்மாழ்வார் அவர்களுக்கு மிக நல்ல குரல் வளம். வயலில் விவசாய வேலைக்கு என்று இறங்கிவிட்டால் பாட்டு தானாக வந்துவிடும். அதிலும் பட்டுக்கோட்டையாரின் தத்துவப் பாடல்கள், பாரதியின் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?’ போன்ற பாடல்கள் மிக அதிகமுறை ராகமிட்டுப் பாடும் பாடல்கள் ஆகும் .
இயற்கை இயைந்த வாழ்க்கை முறை :
நம்மாழ்வார் அவர்கள் பகலில் பெரும்பாலும் உறங்குவது இல்லை. அவர் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து விடும் வழக்கம் கொண்டவர். மேலும் அவர் துயில் எழுந்தால் அது அதிகாலை சரியாய் 4.30 மணி ஆகிவிட்டது என்று உறுதியாகச் சொல்லலாம்.காலையில் எழுந்ததும் வேப்ப மரகுச்சியில் பல் துலக்கிவிட்டு,யோகாசனம் செய்யும் வழக்கம் உண்டு .இதில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்வார். பிறகு, மூச்சுப் பயிற்சி என்று தனது உடல் நலனில் அக்கறை கொண்டவர்.இதன் காரணமாக தனது உடலுக்கான கால அட்டவணையை பின்பற்றும் வழக்கம் கொண்டவர் . இவை அனைத்தும் தினமும் நடக்கும் அதன் பின்தான் தனது வழக்கமான அலுவல்களை ( பயிற்சி வகுப்புகள் , பயணம் போன்று ) தொடர்வார் .
தனது மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது சட்டை அணிய கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர், அதிகமான பனிக்காலத்திலும்கூட சட்டை அணியவில்லை .
தனது பொதுவாழ்க்கையில் பெரும்பாலான நாட்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செலவிட்டார். வாழ்நாளின் எங்கு சென்றாலும் பொதுப் போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்தினார். தன்னை சுற்றிஇருந்த மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார். அவரது பல நண்பர்கள், நலம்விரும்பிகள் அவருக்கு கார் வாங்கித் தர முயன்ற பொழுது அவர் கூறிய பதில் “என்னால முடிஞ்சவரைக்கும் சூழல் கேட்டைக் குறைச்சுக்குறேனே” என்று மறுத்து விட்டார் .
தனது வாழ்க்கைத்துணை சாவித்திரியை 50 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஒருமையில் அழைத்தது கிடையாது. எப்பொழுதும் முகுந்த மரியாதையுடன் “வாங்க… போங்க” என்று தான் அழைப்பார்.
வாழ்நாளின் கடைசி வரை இளைஞர்களை அதிகம் நம்பினார் .கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம் இயற்கை வேளாண் ஆராய்ச்சி பண்ணையில் சுமார் 5,000 அதிகமான இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியை நேரடியாக அவரிடம் முடித்திருக்கிறார்கள்.அந்த பணி இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது .
இயற்கை வேளாண்மை வித்தகரின் பிறப்பும் இறப்பும்
தமிழகத்தில் நெல் களஞ்சியமாம் தஞ்சாவூர் மாவட்டம் , திருக்காட்டுப்பள்ளி , இளங்காடு என்னும் சிறிய கிராமத்தில் 6 April 1938 அன்று பிறந்தார் .
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் பேரழிவுத் திட்டத்துக்கு எதிராக கிராமம் கிராமமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போதே “30 December 2013” அன்று இயற்கை எய்திநார். தனது வாழ்நாளின் இறுதிவரையில் இயற்கையை மீட்க போராடிக்கொண்டே இருந்தார்.
கோ .நம்மாழ்வார் Books in Tamil
கோ.நம்மாழ்வார் படைப்புகள் மற்றும் அவரை பற்றிய படைப்புகள் :
- தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்
- உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்) விகடன் வெளியீடு
- தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
- நெல்லைக் காப்போம்
- வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு
- இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு
- நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
- எந்நாடுடையே இயற்கையே போற்றி, விகடன் வெளியீடு
- பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு
- நோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
- மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு
- களை எடு கிழக்கு பதிப்பகம்
நான் நம்மாழ்வார் பேசுகிறேன் – Naan Nammalvar Pesugiraen by Savithri Nammazhvar (Author)
இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவிட்டவர். இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர். இயற்கை விவசாய வரலாறை ஆவணப்படுத்த வேண்டும் என்றால், அது நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு மூலமே பூர்த்தி அடையும். இதனால்தான் பசுமை விகடன் இதழில் ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ என்ற தொடரை எழுதினார். 39 பாகம் வரை எழுதிய நிலையில், மீத்தேன் எதிர்ப்புப் பணிகளுக்காக டெல்டா மாவட்டத்தில் ஓயாத சுற்றுப்பயணத்தில் இருந்தவரை ஓய்வு கொள்ள இயற்கை அழைத்துக் கொண்டது. இதனால், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலரிடம் இருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக தொகுத்திருக்கிறார் ‘பசுமை விகடன்’ இதழின் பொறுப்பாசிரியர் பொன்.செந்தில்குமார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் மலேசியா போன்ற சில நாடுகளுக்கும் இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் முன்னெடுத்துச் சென்றிருப்பது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து, அவர் உருவாக்கி வைத்துள்ள இயற்கை வழி விவசாயிகளின் எண்ணிக்கை, அமுதக் கரைசலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்கி பெருகுவது போல பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் அழைத்துச் சென்ற நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு நல்ல நம்பிக்கை விதைக்கும் தன்னம்பிக்கை நூல். நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு ‘பசுமை விகடன்’ இதழில் தொடராக வரும்போதே, ‘எப்போது புத்தகமாக வரும்?’ என்று வாசகர்களிடம் ஏக்கத்தையும், தாக்கத்தையும் உருவாக்கியது. இப்போது புத்தக வடிவில் உங்கள் கைகளில்.
உழவுக்கும் உண்டு வரலாறு -Uzhavukkum Undu Varalaru – by Nammazhwar (Author) 2008
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, தமிழக வேளாண் துறையில் பணியில் சேர்ந்தவர் நம்மாழ்வார். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் ஆகியவற்றால் வேளாண்மை முழுக்க நஞ்சாகி விட்டதைக் கண்டு கொதித்து, பணியிலிருந்து வெளியேறியவர். நிலங்களில் விதைப்பது வாடிக்கை… இவரோ நிலங்களையே விதைகளாக்கியிருக்கிறார். ஆம். இயற்கை வேளாண்மைக்கான விதையை தமிழகம் முழுக்கப் பல்வேறு இடங்களில் விதைத்து, இன்றைக்கு அவையெல்லாம் இயற்கை வேளாண்மைக்கான பயிற்சிப் பட்டறைகளாக மிளிர்வதுதான் இவரது வாழ்க்கை அர்ப்பணிப்புக்குக் கிடைத்துள்ள வெற்றி! இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் இவரது பேச்சு மற்றும் எழுத்தில் சமூகம், இயற்கை, கலாசாரம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், மருத்துவம், விளையாட்டு, சுற்றுச்சூழல் என்று பூமிப்பந்திலிருக்கும் அனைத்தும் அடங்கியிருக்கும்.
——
களை எடு – Kalai Edu! (Tamil) Paperback – Dec 2008 – by K. Nammazhwar (Author)
( Ko. Nammalvar – kindle edition free book)
‘அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்” ‘அடப்பாவி மகனே! இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன்! இந்தத் தொழில் என்னோட போகட்டும்டா. டவுனுக்குப் போயி ஏதாவது ஒரு ஃபேக்டரியில சேர்ந்து மாசம் முவாயிரம் ரூபா நீ சம்பாதிச்சாகூட போதும்பா. விவசாயத்தை நம்பி இனியும் பொழைக்க முடியாதுப்பா” இதுதான் இன்றைக்கு ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் நாம் கேட்கும் டயலாக். வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற கதையாகத்தான் ஆகிவிட்டது இன்றைய விவசாயம். விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவு எக்கச்சக்கம். இவ்வளவு கஷ்டப்பட்டு உற்பத்தி செய்தும் விளைபொருள்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. தவிர, செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் நலகம் பாழாகிறது. இதற்கெல்லாம் என்ன தீர்வு? செலவில்லாமல் விவசாயம் செய்ய முடியுமா? லாபம் சம்பாதிக்க முடியுமா? முடியும். பல்லாயிரம் வருடப் பழைமையான நம் விவசாயமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் தவறவிட்டதன் விளைவுதான், நாம் இன்று அனுபவிக்கும் கஷ்டங்கள் என்று ஆதாரபூர்வமாக அடித்துச் சொல்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். விவசாயத்தில் மீண்டும் லாபம் சம்பாதிக்கும் அத்தனை வழிகளையும் சொல்லித் தருகிறார். இந்தப் புத்தகம் விவசாயம் பற்றி உங்களுக்கு இருக்கும் பல தவறான அபிப்ராயங்களை மாற்றும். புதிய தரிசனத்தைக் கொடுக்கும்.
Nammalvar High definition Images :
நன்றி – ஓவியர் -ஜீவா
நன்றி – ஓவியர் -தமிழ்
No Responses