நம்மாழ்வாரின் நிரந்தர வேளாண்மையும் & இயற்கை உணவு தயாரிப்பு பயிற்சி

சிவகாசியில் நம்மாழ்வாரின் நிரந்தர வேளாண்மையும் ( Permacultre ) &  இயற்கை உணவு தயாரிப்பு பயிற்சி முகாம் ( வீட்டிலே சுகப் பிரசவம் உட்பட )

பயிற்சி நாள் :
ஆகஸ்ட் 09-08-2013 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல்  11-08-2013 ஞாயிறு மாலை 5 மணி வரை

இடம் : ஜேசுதாஸ் இயற்கை விவசாயப் பண்ணை, நடுவப்பட்டி விளக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு, சிவகாசி. விருதுநகர் மாவட்டம்.

நிரந்தர வேளாண்மை :
————————————————–

வேளாண்மை என்பது என்றைக்கும் நிரந்தரமானது. அதில் பண்ணை வடிவமைப்பு உட்பட அனைத்துமே நிரந்தரமாக இருக்க வேண்டும். மேலும் இயற்கையில் உள்ள நிரந்தர நிரந்தரமற்ற சுழற்சிகளை பயன்படுத்துவதும் மிக முக்கியமானது.
இவையனைத்துமே செலவில்லாதவையாகவும் (கழிவுகளால் மட்டுமே செய்யக் கூடியவை ) இருக்க வேண்டும். இதில் உழவு வேண்டியதில்லை, களையெடுக்க வேண்டியதில்லை, விதைகள் வெளியில் வாங்கக் கூடாது. குறைந்த இடமே போதும்.

இந்த நிரந்தர வேளாண்மை பற்றி “ திரு. கோ. நம்மாழ்வார் “ அவர்கள் அனைவருக்கும் கற்றுத்தர உள்ளார். இது நேரடி களப் பயிற்சி.

வீட்டிலே சுகப் பிரசவம் உட்பட :
————————————————————-
நமது நம்மாழ்வார் ஐயாவின் முதன்மை மாணவனான ” திரு. லெ.ஏங்கல்ஸ் ராஜா “ அவர்கள் இயற்கை வேளாண்மையில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர் மட்டுமல்ல…

தற்போது சென்னையில் பிரபல தொடுசிகிச்சை மையமும் நடத்தி வரும் அவர் ” மருந்தில்லா மருத்துவத்தை “ ( எல்லா நோய்களுக்கும்) தமிழ் நாடு முழுவதிலும் செய்து வருகிறார்.

இவர் பல சிறப்புகளுக்கு உரியவர். அதில் குறிப்பிட்த்தக்கவை, தன்னுடைய இரண்டு குழந்தைகளை அவரே தன் வீட்டிலே பிரசவம் பார்த்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் இன்று வரை அந்த குழந்தையின் கையில் தடுப்பூசி உட்பட எந்த ஆங்கில மருந்துகளையும் அளித்ததில்லை.

இவர் அனைவருக்கும் ” மருந்தில்லா மருத்துவத்தை “ ( எல்லா நோய்களுக்கும்) கற்றுத்தரவிருக்கிறார்.

இயற்கை உணவு தயாரிப்பு பயிற்சி : (உணவே மருந்து )
—————————————————————-
சிவகாசியில் பிரபல இயற்கை உணவகம் நட்த்தி வருபவர் ” திரு. மாறன்.ஜி “ அவர்கள். மேலும் இவர் தொலைபேசி வாயிலாகவும், நேரில் வருபவர்களுக்கும் இலவசமாக இயற்கை வைத்தியத்தை குணப் படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதைக் கற்றும் கொடுக்கிறார்.

அவர் தன்னுடைய உணவகம் போல உலகமெங்கிலும் வர வேண்டும் என்கிற நோக்கில் தன்னைத் தேடி வரும் வேலையில்லா இளைஞர்களுக்கு “ இயற்கை உணவகம் “ அமைப்பது பற்றிய பயிற்சியை அளித்து வருகிறார்.

யோகா, மண் குளியல், வாழைக் குளியல் :
————————————————
கும்பகோணத்தை சேர்ந்த “ ஆ.ச.ரமேஷ் “ அவர்கள் இயற்கை வாழ்வியல் கலையை யோகாவுடன் கற்றுக்கொடுக்க உள்ளார். மேலும் இவரும் சிறந்த இயற்கை உணவு தயாரிப்பாளர்.

லாஃபிங் தெரபி :
——————–
வேலுரை சேர்ந்த “ முகேஷ் “ அவர்கள் சிறந்த சிரிப்பு மருத்துவ நிபுணர். இவரும் கலந்து கொண்டு அனைவரின் மன அழுத்த்தைக் குறைக்க உள்ளார்.

இயற்கை சூழலில் இயற்கை உணவு :
——————————————-
மூன்று நாளுமே இயற்கையான சூழலில் இயற்கை உணவுகளை அனைவருமே தயாரித்து உண்ண ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. எல்லா வேளைகளிலும் பழ உணவுகள், காய்கறி சாலட், மூலிகை சூப், ஜீஸ்கள் ஆகியவை வழங்கப் படும்.

மேலும் செயற்கையான அருவி குளியலும், மண் , மூலிகை & வாழை குளியலும் உண்டு.

தின்னைப் பேச்சு :
——————–
இரவு நேரங்கலில் நமது பாரம்பரிய தின்னைப் பேச்சும், சுற்றுப்புறசூழல் பற்றிய விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப் படும்.

இந்த சுயசார்பு பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைய…

முன்பதிவு அவசியம் : 94435 75431 , 99947 56330.

பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :
J.karuppasamy
A/c No. : 008501000030808
Banka name : Indian Overseas Bank , Sivakasi.
IFSC Code : IOBA0000085

பயிற்சி ஏற்பாடுகளை சிவகாசி வானகம் ஒருங்கினைப்புக் குழுவினரும் , இயற்கை மூலிகை உணவகத்தினரும் செய்கிறார்கள்.

No Responses

  1. Pingback: Nakkeran 12/04/2021

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline