இயற்கை வழி உழவில்லா வேளாண்மை – காண்பீர்!

இயற்கை வழி உழவில்லா வேளாண்மை – காண்பீர்!

ஒருவர்க்கு நிலம் எத்தனை ஏக்கர் இருப்பினும் சுற்றிலும் அதற்கு வரப்பிட்டு வரப்பிலிருந்து 4 அடி உள் பக்கம் தள்ளி பனங்கொட்டையை வேலி போல் 4 அடிக்கு ஒன்று வீதம் நட வேண்டும். இது காலத்தின் கட்டாயம் நிலத்தின் உள்ளே நீர் சேமிப்பின் ஊற்றுக் கண். பனை மர வட்ட வரிசையை அடுத்து மேலும் உட்புறமாக அதேவட்ட வரிசையில் 6 அடி தள்ளி ரோஸ்வும் மரக்கன்றுகள் அல்லது உழவன் விரும்பும் காட்டு ரக மரங்கள் எதையேனும் ஒன்றினை 15 அடிக்கு ஒன்று என நடவேண்டும். இஃது நீண்ட நாள் சுமார் 25 ஆண்டுகளில் வருவாய் தரும். அடுத்து மேலும் உட்புற வட்ட வரிசையில் 15 அடி தள்ளி 15 அடிக்கு ஒன்று வீதம் வடுமாங்காய் (உயர்தர ஊறுகாய்க்கு மட்டும்) கன்றுகள் நடலாம். இவை 7 முதல் 10 ஆண்டுகளில் நல்ல வருவாய் தரும். நான்காவது உட்புற வட்ட வரிசையில் 15 அடி தள்ளி இடைவெளி 10 அடி வீதம் அகர்வும் எனும் (ஊறுவத்தி தயாரிப்புக்குரிய மூல பொருள்) மரக்கன்றுகள் நடலாம்.

10599244_720479834655039_6865054303809208384_n


அகர்வும் நடுவதற்கு முன்னதாக கன்று ஒன்றுக்கு மேற்கு திசையில் 5 அடி தள்ளி வாழை நட்டு வளர்த்து பின்னர் நடவு செய்தால் அகர்கன்றுகள் பழுதின்றி வளரும். குளிர்ச்சியான சூழல் அகர்வுக்கு மிகவும் அவசியம். பத்து ஆண்டுக்கு ஒரு முறை என மூன்று அறுவடை செய்யலாம். 30 ஆண்டுகள் 1 தலைமுறைகடந்த பின், முன்னதாக இரு மரங்கட்கு இடையில் அதே அகர் மரக்கன்றுகள் நட்டு பயனை அடுத்த தலைமுறைக்கும் கொடுக்கலாம். ஊறுகாய் மாங்காய் தொடர்ந்து 35 ஆண்டுகள் பலன் தரும். அகர் போல் முன்னதாகவே இரு மரங்கட்கு இடையில் புதிய வடுமாங்காய் கன்றுகள் நட்டு பயனை அடுத்து வாரிசிடம் ஒப்படைக்கலாம்.

மேற்கண்ட மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக சிறு தானியங்களை விதைத்து அறுவடை செய்யலாம். பசுமையான மூடாக்கு எப்போதும் தரலாம். நம் பராம்பரியம் / பண்டைய வேளாண்மையையும் பின்பற்றுவது இனிவரும் காலத்தின் கட்டாயம். இன்றைய வேதனையுற்ற உழவன் இயற்கை விவசாயத்தில் நெல், சிறு தானியங்கள், காய்கறிகள், கீரைவகைகள், கிழங்குவகைகள் இன்னோரன்ன எதையும் செய்யலம். ஊக்கமது கைவிடோல் – என்ற ஒளவை வாக்கு இன்றும் பொருந்தும். சிந்தையில் இருத்த வேண்டியதை இனி காண்போம்: ஒன்றும் செய்யாத விவசாயம் – ம்லி ஹிலிமிஜுஷ்ஐஆ மிழிஸதுஷ்ஐஆ என்று சொல்லப்பட்ட ஒன்றை வைக்கோல் புரட்சி பற்றி தெளிவாக அறிதல் நன்று. இதை செய்வித்தவர் ஐப்பான் நாட்டு ஓர் ஆராய்ச்சியாளர் திரு.மாசாழைஃபுக்குவோக்கா – என்பவர் ஆவார். அவர் பாரம்பரிய நெல் 6 மாத வயதுடையதையும், அந்நாட்டுக்குரிய பார்லியையும் விளைவித்து அறுவடை செய்திட்டார் எப்படி? பருவத்தில் முதலில் நெல்லை தூவி விடுவார் பூமியின் மேல் மானாவாரியில் இப்படி செய்தலால் மழையே விளைச்சலுக்கு ஆதாரம்.


நெல் விளைந்து அறுவடைக்கு சற்று முன்னதாக அதே நிலத்தில் பார்லி என்ற தானியத்தை விதைப்பார். எப்போதும் நிலத்தில் ஈரமிருந்து வருவதால் பார்லியும் முளைக்கும். நெல் கதிர்களை மட்டும் அறுத்து எடுத்து அதன் தாளை (வைக்கோல்) நிலத்தில் அப்படியே விட்டுவிடுவார். ஓர் ஆண்டு முடியும். மீண்டும் நெல்லை தூவுவார். சுழற்சி முறையில் தாள்கள் மட்டும் அப்படியே இருந்தன. நுண்ணுயிர்கள் தானே வளர்ந்து பெருகின. அதனால் பயிர் நன்கு வளர்ந்தது. அமோக விளைச்சல் தந்தது. பெங்களூர் வாழ் திரு.நாராயண ரெட்டி சொன்னார் – நிலம் நமது தாய். அவளை ஆடையில்லாமல் (மூடாக்குப் போடாமல்) நிர்வாணமாக வைக்கலாமா – என்று இதை அறிந்த ஜப்பானின்ஃபுக்குவோகா பெங்களூர் வந்து நாராயண ரெட்டியாரைச் சந்தித்தார். கட்டிப்பிடித்து பாராட்டினார்.

வேண்டியதை எடுத்துக் கொண்டு மீதி எல்லாவற்றையும் நிலத்துக்குக் கொடு. நிலத்தை மூடிவை. ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் நுண்ணுயிரிகள் தானே தோன்றி தானே வேலை செய்யும் (செலவின்றி) நிலம் நமக்கு வாரி வழங்கும். இதையே வேலியோடு, (நீ கால் வைக்காதே) வெளியில் இரு என்றார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஸ்ரீபாததபோல்கர் என்னும் ஆராய்ச்சியாளரின் செயல்பாட்டின் மூலம் வெளிப்படுத்தியதில் – எந்த ஒரு பயிர் செய்தாலும் தானியம் போக மீதியை நிலத்திற்கே கொடுத்துவிட்டவர். கரும்பு சோலைகளை அதை வெட்டிய வயலிலேயே போடு. வாழை மரத்தை வெட்டினால் அதையே சிறு சிறு துண்டுகளாக்கி போட்டுவிடு. தென்னை மரத்துக் கழிவுகளை வெட்டி சிதைத்து அடி மரத்தை சுற்றிலும் போடு.


இப்படி எல்லா பயிரிலும் வேண்டியதை எடுத்து கொண்டு மீதி எல்லாவற்றையும் விளையும் நிலத்திலேயே போடு/கொடு. இதனால் பயன் – வெற்றி விளையும் என்றார். உயிர்கள் அனைத்து வளர்ச்சிக்கும் சூரிய ஒளிதான் முதன்மையானது. பூமியிலிருந்து தாவாரம் தன் வளர்ச்சிக்கு 5ஆம் /விழுக்காடுதான் பயிர் எடுத்துக் கொள்கிறது. மீது 95% எல்லாவற்றையும் பிரபஞ்சத்தில் இருந்துதான் பெறுகிறது. திரு.தபோல்கர் சோதனை மூலம் இதை நிரூபித்துக் காட்டினார். கணிதப் பேராசிரியரான தபோல்கர் கால்காணி 33 செண்ட் நிலம் போதும் ஒரு குடும்பத்திற்கு அதில் வரும் வருமானம் கொண்டே அமோகமாக/ ஆனந்தமாக வாழலாம் என்று செய்து காட்டியவர். மேலும் பிறரின் அனுபவங்களை தபால் கார்டு மூலம் பெற்று தொகுத்து வைத்தவர். அது ஒரு பெட்டகம். அதற்கும் ஒரு பெயர் உண்டு. அனைவருக்கும்/எல்லாருக்கும் எல்லாமும் – Pயிeஐமிதீ க்ஷூலிr புயியி. இதில் சூரிய ஒளியைப் பற்றி நுட்பமாக விளக்கியுள்ளார். வேண்டாதவை மக்கும் பொருட்கள் அனைத்தையும் பெற்ற நிலத்திற்கே திருப்பிக் கொடுத்து வெற்றிக் கண்ட இந்தியர் இவர்.

தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் வாழ்பவர் பில்மொல்லிசன். இவரது தத்துவங்களடிப்படையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா – இருநாடுகளிலும் 15 இடங்களில் பெர்மாகல்சர் முறைப் பயிற்சிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரிய பண்ணைகளின் திட்டங்களை அமைக்கும் போது அவைகள் அடுக்கு முறையில் அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

அஃது முதலில் உயரமானது என மரங்கள் அடுத்து சிறு தாவரங்கள் என வளர்க்கப்படுமானால் அவைகள் அனைத்தும் சூரிய ஒளியை நான் முழுக்கப் பெற்று வளரும். குறைந்த இடத்தில் நிறைய பயிர் செய்யலாம். எடுத்துக்காட்டு எனில்: முதலில் கீரை வகைள், பின்னர் அதில் செடி வகைகள், குட்டைச் செடிகள், நெட்டைச் செடிகள் என வரிசையாக்கி கடைசியில் மரங்கள் வளர்க்கும் / அமைக்கும் முறையாகும். இதற்குப் பெயர்தான் – பெர்மாகல்சர் முறையாகும். Perதுழிஐeஐமி புஆrஷ்உற்யிமிற்re என்பதில் முதல் சொல்லில் முதல் பாதியையும் இரண்டாம் சொல்லின் பின் பாதியையும் எடுத்து அமைத்துள்ளார். permaculture பொருள் தற்சார்பு நீடித்த விவசாயம் – சுருக்கமான புதிய பெயர். உலகத்தில் என்றுமே அழியாதது என ஒன்று உண்டு எனில் அது விவசாயம் தான்.


அதிலும் குறிப்பாக இயற்கை வழி விவசாயம் தான். இயற்கை விவசாயத்திற்கு அழிவே இல்லை. அழியாது நின்று உலகையே காப்பாற்றும். இயற்கை என்பது ஓர் அதிசயம். எல்லையற்ற பிரபஞ்சத்தின் இரகசியங்களைப் புரிந்து கொள்வது கடினம்தான். ஆனாலும் பூமியின் மேல் ரகசியம் வளர்கின்றன. பார்க்கையில் உண்மை நமக்குப் புரிகின்றன. கண்கூடாக அனைத்து தாவரங்களிலிருந்தும் பிரிந்து கீழே விழுகின்ற எல்லாப் பொருட்களையும் மண்ணிலுள்ள சிற்றுயிர்கள் / ஜீவராசி அதை உண்வாகச் சிதைத்து சாப்பிடுகின்றன. இதையே நாம் கூர்ந்து பார்த்தால் ஓரளவுக்குப் புரியும். மரத்திலிருந்து பழுத்த இலை, பூ, காய், பழம், கிளை – என எது விழுந்தாலும் ஏன் மனிதனே மடிந்து விழுந்தாலும் அவற்றை எல்லா சிற்றுயிர்களும் சாப்பிட்டுவிடும். அச்செயலை பகலில் அல்ல இரவில் வெளிச்சம் கொண்டு பார்த்தால் மண்புழு, கரையான், வண்டு, நத்தை முதலானவை அதைச்சாப்பிட்டு வாழும். இதில் மனிதனின் குறுக்கீடு எதுவுமே கூடாது.

புத்தகங்களை மூடி வைத்து படித்தவர், படிக்காதவர் பலபாடமாகிய இயற்கையின் செயல்பாட்டைப் படிக்க வேண்டும். ஏட்டுச் சுரைக்காய் உதவாது. பகலில் எனில் தோட்டத்தில் / வயலில் சாணம் தரையில் விழுந்தால் என்ன நடக்கிறது? வண்டுகள் உருண்டைகளாக உருட்டி எடுத்து அதை உருட்டிக் கொண்டே போகும். கோழி – எருவை குப்பைகளைக் கலைக்கும், மண்புழு, கரையான் தின்னும். சில நாள் கழித்துப் பார்த்தால் சாணமிருந்த இடத்தில் சிறு சிறு துவாரங்களிருக்கும் மழைநீர் அந்த ஓட்டை வழியே உட்செல்லும். நமது பண்ணையில் ஏற்படும் கழிவுகள் மலைபோல் சேர்ந்தாலும் நாளாக ஆக சிறைவுறுகின்றன. மேல் மட்டத்தின் கழிவு, கீழ் மட்டத்தின் உயிர்கட்கு உணவு.


நுண்ணுயிர்கட்கு உணவு. கழிவுகள் விரைந்து மக்க வேண்டுமானால் கழிவுகள் மீது மண், சாணம், கோமியம் கலந்த கரைசலில் சிறிது வெல்லம் சேர்த்து தெளித்தால் போதும் மக்குகட்கு ஈரம் மட்டும் எப்போதும் தேவை. இதற்கு மூடாக்கு முறைதான் மெத்தவும் தேவை. இப்போது வாருங்கள் – மேலே சொன்னபடி: நாம் நம் நிலத்தை அமைத்துக் கொண்டால் இயற்கையை நாம் பாதுகாக்கலாம். தவறாமல் நஞ்சில்லா உணவு உற்பத்திக்கும் இடம் உள்ளே ஒதுக்கலாம். உழவன் கடையில் சென்று உணவுப் பொருள் வாங்கவே கூடாது. உழவனுக்கும் வருவாய்தானே முக்கியம், வாழ்வின் முக்கியம் அதையும் திட்டமிட்டே பெருக்கலாம். நீடித்த நிலைத்த வருவாயை ஈட்டலாம். அவை முறையே: இடைவெளி காணுமிடமெல்லாம் கீரைகள், காய்கறிகள் பயிர்க்குவதன் மூலம் வாரவாரம் நூறுகள், ஆயிரம் ரூ என வருவாய் – மல்பரி எனும் பட்டுப் புழு வளர்ப்பில் – மாத வருவாய் பல ஆயிரங்கள் – நெல், பிறதானியங்கள், பருவ வருவாய், ஆண்டு தோறும் வாழையில் வருவாய் – பனையில் நுங்கு வருவாய் – ஊறுகாய்/வடுமாங்காய் மூலம் ஆண்டு தோறும் சில லட்சங்கள், நீடித்த நிலையான வருவாய் – அகர்வும் மூலம் பத்து ஆண்டுகள் வீதம் மூன்று முறை என வேறு எதிலுமேகிட்டாத ஈடு இணையற்ற வருவாய் – இதில் கேடில்லா செல்வம் ஆயுள் மட்டுமின்றி சந்ததியினரும் தொடர்ந்து பெறலாம்.

கொடிய பஞ்சம் வந்தால்: கொடிய பஞ்சம் பற்றாக்குறை என்று முன்பு (தமிழகத்தில்) வந்ததை தமிழ்மக்கள் எதிர் கொண்டார்களே எப்படி? அக்கால மக்களில் 95% உழவர்களே. அறிவார்ந்த அவர்கள் செய்தது பசுவின் மோர், முருங்கைஎன கீரைகள் உண்டே பஞ்சத்தை ஓட்டினர். சரி பிரளயமே வந்ததால் – எல்லாமே அழிவுற்றால் விதைக்கு எங்கு போவாய்? அன்று கோவில் கோபுர கலசத்தின் அடியில் உள்ள அறையில் சிறு தானியங்களின் சேமிப்பிலிருந்து எடுத்து மீண்டும் பயிர் செய்தனர். அவற்றை இடி, மின்னல்களிலிருந்து அக்கலசங்கள் பாதிக்காமல் காத்ததால்தான் கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவே வேண்டாம் என்றது மூதுரை. இங்கு இறை பக்தி என்பது வேறு. எனவே ஒரு சொல் கேளீர் ! இயற்கை உழவனை வாழ வைக்கும். மக்களும் நல்ல உணவு பெற்று நோயின்றி வாழலாம்.


இன்றைய நிலையில் – நீரின்றி எப்படி? இதுகேள்வி அய்யா வயல்/பண்ணைகள் தோறும் உழவன் பனை நட வேண்டும். அதன் ஆணிவேர்கள் 100 அடிக்கும் மேலாக பூமியினுள் புகுந்து குளம் போல் நீர் சேமிப்பிற்கு வழிவகுக்கும் / வகுத்துள்ளது பனையால் நாமும் வயலின் உள்ளே தாழ்வான இடங்களில் சில குழிகள் எடுத்து பைப் மூலம் கூட மழை நீரை வீணாக்காது. உம்புக வழி செய்வோம். கிராமங்கள் தோறும் எல்லார் வயலிலும் இதுபோன்றே செய்தால் / பனை வளர்த்தால் நீர் சேமிப்பில் நாம் உள்ளலாம், உயரலாம். பண்டைய மாமன்னர்கள் வகுத்த ஆறு வழி ஏரி, குளம், குட்டை, கிணறு, கால்வாய் என்று முறைப்படுத்தி நீர் சேமித்து காத்தனர். ஆனால் இன்றைய ஆளும் நிர்வாகம் யாதும் செய்ய போவதில்லை. உழவர்கள் முனைந்து செயல்பட்டால் நீதின்மையால் கேடுகள் நேராதவாறு உலகை நாம் காப்பாற்றலம்/காப்போம். ஏர் பின்னதே உலகம் – என்றாரே தெய்வம் புலவர். அச்சொல் கேளீர்! விரைந்து செயல்பட்டால் இயற்கை நம்மை காக்கும். நாமும் தளர்வின்றி வாழ்வோமாக!


நாள்: 12.10.2013
அ.மீனாட்சிசுந்தரம்
‘பாரம்பரிய விதைகள் மையம்’
கலசப்பாக்கம் – 606751
திருவண்ணாமலை மாவட்டம்
செல்: 9787941249


குறிப்பு:
இந்திய மக்கள் தொகை 1.1 பில்லியனில் 55% (645 மில்லியன் மக்கள்) வறுமையில் வாடுகின்றனர் என்று ஆகஸ் போர்டு பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது. உலக மக்களில் 3ல் ஒருவர் இந்தியர் வறுமையில் உள்ளார். இந்நிலையில் என்ன புரட்சி இனி செய்யவுள்ளது அரசுகள். இயற்கையில் அல்லவா வெல்ல வேண்டும்?

No Responses

  1. Pingback: Nakkeran 12/04/2021

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline