முக்கிய வாழ்வியல் அறங்கள் .இதில் விரய செலவுகள் பற்றி காண்போம்
நண்பர்கள் சந்திப்பில் பேசியது . பயன்படும் என்று கருதி பகிர்கிறேன் .
நாம் நிச்சயம் தவிர்க்கவேண்டிய, அல்லது கட்டுபடுத்தவேண்டிய, அவசியமான சில வாழ்க்கை செலவுகள் மற்றும் இன்றைய காலத்தில் இந்த செலவுகளை தவிர்க்கவே முடியாது, அல்லது மாற்று செயல் மூலம் பயன் பெறுவது பற்றிய கட்டுரை .
- சிலர் மிக பெரிய பெயர் கொண்ட உடைகளை மட்டுமே வாங்கி அணிவேன் என்று கூறி பல மடங்கு பணம் கொடுத்து வாங்கி அணித்து கொள்வது, மற்றோவர்களிடல் பெருமை பட்டு கொள்வது . இதனை குறைத்தல் சேமிப்பு பெருக்கலாம்
- இன்னும் சிலர் காலை ஒரு உடை மாலை ஒரு உடை என்று அணிந்து , நான் மிகவும் சுத்தமாய் இருக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்று கூறி செயல் படுத்துவது .( மிகவும் குறைவான சதவிகிதம் ) .இதிலுள் ஒரு சதவிகிதம் சேமிக்க முடியும்
- வருடத்தில் அனைத்து மாதங்களிலும் , AC யை போட்டு அதிக குளிரில் கம்பளி போட்டு துக்கும் பழக்கம் .நிச்சயம் குளிர்காலங்களில் இயற்கை கற்றை அனுபவிப்பது தவறு இல்லை . கொசு தொல்லைக்கும் வலை அடிதில செலவும் குறைவு பணமும் மீதி ஆகும் .
- பெண்கள் பல பட்டுபுடவைகள் வாங்கி அடுக்கி அலமாரிகளை அலங்காரம் செய்வதும் உண்டு. நண்பரின் உறவினர் ஒருவர் , ஒரு முறை ஒரு நிகழ்வில் பயன் படுத்திய ஒன்றை மறுபடியும் பயன்படுத்தும் பழக்கம் இல்லாதவர்.விலையில் குறைவில்லாத பட்டு புடவைகள் குறைந்தது 30000 வரை விலை கொடுத்து வாங்கியதாம். இந்த செலவுகளையும் குறைக்கலாம்.
- ஏதும் புதிய செல்போன் அறிமுகம் ஆனால் அதனை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவதும் அதிகமான செலவுதானே ? . அதனையும் குறைக்கலாம் .
- சிறிது தூரம் செல்ல வேண்டிய இடங்களுக்கு கூட கார் எடுத்து கொண்டு செல்வது. ஒரு சிரியா இரண்டு சக்கர வாகனம் போதுமே.
- நண்பரின் மகன் , 5 வருடங்களுக்கு முன்பு பெங்களூர் மிக முக்கியமான நகர்புறத்தில் ஒரு வீடு வாங்கி உள்ளார் .விலை 70 லச்சம். கையில் இருந்த அனைத்து சேமிப்பு கொடுத்து தவணையில் வாங்கிய வீடு. சில மடங்களில் அவரின் பணியில் ஏற்பட்ட சிறிய மாற்றம் காரணமாக அவரி வேலையில் இருந்து வெளியேற வேண்டிய நிலைமை. தவணை கட்ட முடியாமல் மிகவும் சிரமம் ஏற்பட்ட சூழ்நிலையில் இன்று விற்க முடியாமல் மிகவும் சிரமபடுவதாக கூறினார்.இதே நண்பர் 5 வருடங்களுக்கு முன்பு மிகவும் பெருமையுடன் பேசி கொண்டே இருப்பார் .தவிர்த்து இருக்கலாம் .
- பார்க்கும் பொருளை அனைத்தையும் தவணை முறையில் வாங்கி குவிப்பது. எப்படி பார்த்தாலும் அதற்க்கு நாம் தானே பணம் கொடுக்கவேண்டும் . வட்டியும் சேர்த்து. [ நண்பர் ஒருவருக்கு Digital Camra வாங்க வேண்டும் என்று ஆசை.நல்ல சம்பளம் தான் , இருந்தும் ,8 வருடங்கள் கழித்து வாங்கினார். வாங்கிய பின்பு அவர் கூறியது இஹனை நான் சில மதங்கள் ஆசையுடன் பயன்படுத்துவேன் என்று நினைக்குறேன். பார்ப்போம். ஆசைக்கு வாங்கி விட்டேன் .நிச்சயம் இது ஒரு வீண் செலவு எண்ணை பொறுத்த மட்டில் ” என்று கூறினார் ]
- அடிகடி உணவு விடுதிக்கு சென்று வருவது. இப்பொழுது சிறிய கிராமத்தில் இருந்து நண்பர்கள் கூடினால் கிளம்பி வெள்ளி இரவுகள் வெளியில் சென்று உணவு உண்டு வருவது வழக்கமாகிவிட்டது. நாமே நமக்காய் சமைத்து சாப்பிடலாம். அடிகடி செல்வதை தவிர்க்கலாம். இதன் மூலம் நல்ல உணவும் கிடைக்கும் . நமது உடல் நலமும் பேணப்படும்.
முன்னோரால் கூற பட்ட பழமொழியை போல ” விரலுக்கு ஏற்ற வீக்கம் “, சிக்கனமாய் செலவு செய்து சேமித்து நாமும் வாழ்வில் பயன் பெறுவோம் .