முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை
ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர் பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சுசாப்பிட்டாங்களாம்.
ஊரில் அரசால் புரசலாக பணக்காரர் பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் கொள்ளஆரம்பித்தார்களாம். இதை மறைக்க ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து வடை பாயசத்துடன் சுவையான விருந்து ஒன்றை அந்த பணக்காரர் வைத்தாராம். “இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும் இவரா கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடியிருப்பார், இருக்கவே இருக்காது” என்று பேசிக்கொண்டார்களாம்.
இதுதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை!