- கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
- சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
- அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
- அந்தி மழை அழுதாலும் விடாது.
- உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
- எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
- உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்?
- எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா.
- காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
- குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
- குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
- மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
- அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
- ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
- களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
- மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
- மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.
- மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
- ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைபபூ சக்கரை.
- கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்.