இயற்கையான முறையில காடுகளில் ஏற்படும் காட்டுத்தீயை ( forest fire ) கட்டுப்படுத்துவது எப்படி?
சாதாரணமாக கிராமங்களில் மக்கள் நிறைய ஆடுகள், மாடுகள் வளர்க்க விருப்பம் கொண்டவர்கள். ஆடுகளை ஏழைகளின் பணப்பெட்டி என்று கூறுவதும் உண்டு. பணம் தேவைப்படும் பொழுது ஒரு ஆடு அல்லது ஆடுகளை விற்பதன் மூலம் அந்த குறிப்பிட்ட விவசாயிக்கு தேவையான பணம் கிடைத்து விடுகிறது.
இவ்வாறு வளர்க்கப்படும் ஆடுகளை கொண்டு காடுகளில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் அல்லது கட்டுப்படுத்த முடியும்.காட்டுத்தீ ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் காடுகளில் இருக்கும் சிறு மற்றும் குறு செடிகளின் காய்ந்த இலைகள் மற்றும் சரிவுகள் முதலியவை மிக முக்கியமான காரணங்களாகும்.
பொதுவாக ஆடுகள் காய்ந்த இலைகளையும் பச்சை இலைகளையும் சாப்பிடும் தன்மை கொண்டது. அவன் காரணமாக எளிதில் தீப்பற்றக் கூடிய சிறு குச்சிகள் அனைத்தையும் ஆடுகள் தின்று விடுவதால் காட்டுத்தீயை அதிக அளவில் குறைக்க முடியும் இது பற்றி வெளி நாடுகளில், இந்த முறையை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிகின்றது ஆடுகள் வளர்ப்பதன் மூலம் நிச்சயம் காடுகளில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் இந்தியாவில் குறிப்பாக தமிழகக் காடுகளில் , காடுகளின் ஓரங்களிலும் அவர்கள் கால்நடைகளை காடுகளுக்குள் சென்று மேய்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதன் காரணமாகவே காய்ந்த சருகுகள் ,புற்கள் அதன் மூலமாக ஏற்படும் காட்டுத்தீ அதிக அளவில் அதிக அளவில் பரவி அதிகமான சேதங்களை காடுகளுக்கு ஏற்படுத்துகிறது என்று நாம் நினைக்கிறோம்.
எனவே இந்த கருத்தை அரசு கவனத்தில் கொண்டு அதற்குண்டான சரியான நடைமுறைகளை ஏற்படுத்தி, காடுகளுக்கு அருகில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பு அனுமதி அளித்து . இதுபோல் ஏற்படும் தீயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் .
இது பற்றிய விரிவான ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு காணொளியையும் இணைத்துள்ளேன். இந்த காணொளியில் வெளிநாடுகளில் இருக்கும் புல்தரைகள் மற்றும் சாலைகளின் ஓரங்களில் இருக்கும் பொருட்களையும் உயிரியல் முறையில் கட்டுப்படுத்த முடிகிறது என்றும் காண முடிகிறது.
இதனால் நாம் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பொருட்களை பயன்படுத்தி இயந்திரங்களின் மூலம் இயந்திரங்களை பயன்படுத்தி செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் உயிரியல் முறைப்படி ஆடுகளை பயன்படுத்தி பொருட்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதன் மூலம் நன்மைகளும்,நமக்கு சுவையான ஆட்டு இறைச்சியின் மூலம் கணிசமான அளவு வருமானமும் கிடைக்கிறது. இந்த முறையைப் பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் வழியாக பயன்படுத்தி இயந்திரங்கள் அதனால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றத்தினால் ஏற்படும் எந்தவிதமான சுற்றுச்சூழல் கெடுதல் இல்லாமல் இயற்கையான முறையில் நமக்கு தேவையான விடயங்களை செயல்படுத்த முடியும்.