600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை

600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் வளர்க்க காரணம்

 

1379615_10200570470656581_647124037_n

தனக்கு ஏற்பட்ட விசகடிக்கு மருந்து கிடைக்காததால் உண்டான தேடல் இன்று ஒரு மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது அதுதான் செ.சி.ப மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி மையம், கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம். இயற்கையாகவே மரம் வளர்ப்பு மூலிகை செடி வளர்ப்பில் ஆர்வமுடையவர்

 

திரு.செ.சி.பவானந்தம்(9629601855), தனது வீட்டின் அருகிலேயே மூலிகை செடி மற்றும் மரங்களை ஆர்வமுடன் வளர்த்து வந்த பவானந்தம் அவர்களை கி.பி 2000 மாவது ஆண்டு தனது தாயாரின் அஸ்தி கரைக்க கடற்கரை சென்றபோது பாம்பு கடித்து விட்டது, விசகடிக்கு சிறியநங்கை பொடி கடற்கரை பகுதி மக்களிடம் கேட்டபோது யாரும் கொடுக்க முன்வரவில்லை பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். குணமடைந்தவர் மூலிகை செடிகளை தேடி பயணிக்க ஆரம்பித்தார் வெற்றியும் கண்டார்.

இன்று அவரது பண்ணையில் 600க்கு மேலான மூலிகை செடி மற்றும் மரங்கள் உள்ளன 1000 மூலிகைக்கும் மேல் வளர்ப்பதே தனது விருப்பமாகக்கொண்டுள்ளார்.

மூலிகைகளின் பயனை தான்மட்டும் உணர்ந்தால் போதாது என்று பள்ளிமாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் மூலிகை செடிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தனது தலையாயகடமை என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு பாடம் எடுத்துவருகிறார்.

திரு.பவானந்தம் அவர்களது பண்ணையில் உள்ள மூலிகைகள் சிலவற்றின்

இருக்கும் மூலிகை பெயர்கள்:

சிறியநங்கை, சக்திசாரணை, நாகமல்லி, நாகநந்தி, கற்பூரவள்ளி, ரணகள்ளி, சர்பகந்தி, சித்தரத்தை, நத்தைசூரி, இன்சுலின் செடி, சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்), அத்தி, அரசு, ஆடாதோடை, அசோகமரம், அரைரூட், அகில், செவ்அகில், அருகம்புல், அரிவாள்மனை பூண்டு, அவுரி, ஆடுதீண்டாபாளை, ஆவாரை, இஞ்சி, உத்திராட்சம், ஊமத்தைகசகசா, கண்டங்கத்திரி, கச்சாகுறிஞ்சான், கற்பூரவள்ளி, கடுகு, கடுக்காய், கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், காசுக்கட்டி, கிராம்பு, கீழாநெல்லி, குங்கிலியம், குடசப்பாலை, குப்பை மேனி, கோரைக் கிழங்கு, சந்தனம், சாதிக்காய், சீதா, சுண்டை, செம்பருத்தி தண்ணீர்விட்டான் கிழங்கு, தவசு முருங்கை, தழுதாழை, தாழை, தாளிசபத்திரி, தான்றிக்காய், திப்பிலி, துத்தி, தும்பை, துளசி, தூதுவளை, தேற்றான்கொட்டை, நஞ்சறுப்பான், நந்தியாவட்டை, நன்னாரி, நாயுருவி, நாவல், நித்யகல்யாணி, நிலவேம்பு, நிலபனை, அய்யன்பனை நிலாவிரை, நீர்முள்ளி, நுணா, நெருஞ்சி, நெல்லி, நொச்சி, பப்பாளி, பிரண்டை, பிரின்சி, புதினா, பேரரத்தை, பொடுதலை, மஞ்சள், மணத்தக்காளி, மருதாணி, மல்லிகை, மிளகு, முடக்கறுத்தான், முட்சங்கன், முருக்கன், மூக்கிரட்டை, வசம்பு, வல்லாரை, வாதநாராயணன், வெட்டுக்காய் பூண்டு, பூனைகாலி, வெள்ளெருக்கு, வெற்றிலை, வேம்பு, கும்பகொடளி, குண்டுமணி(கருப்பு, சிவப்பு, மஞ்சள், சாம்பல்), ஆலமரம், மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா மற்றும் பலவிதமான மூலிகைகள்

 

மூலிகை குறிப்புகள்

திரு.பவானந்தம் அவர்கள் பகிர்ந்த

முலிகை குறிப்புகள்:

ஆடாதோடை – காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும் சித்தரத்தை நெஞ்சுவலி போக்கும் சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்) – சர்க்கரைக் கொல்லி வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை வெளியேற்றி இருமலைக் கட்டுப் படுத்தவும், உணவுக் குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. இலை பித்தம் பெருக்கும், தும்மலுண்டாக்கும்.நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல் போக்கும். சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும்.

இது சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலையை மென்று துப்பிவிட்டு சக்கரையை வாயில் போட்டால் இனிக்காது மண் போன்று இருக்கும்.

நாகமல்லி பாம்பு விஷம் போக்கும் 7 வகை பால்மரம்: அத்தி, இத்தி, ஆல், அரசு, மா, பலா, கிலா

மருத்துவ மரங்கள்:

வேம்பு, கும்பகொடளி, ஆலமரம், மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா, இலவங்கம்

செ.சி.ப மூலிகை பண்ணை ஆராய்சி மையம், 79,காமராசர் சாலை, கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் – 614 624 9629601855

 

Tags:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

54 Comments

  1. Ramya 30/01/2014
  2. R.Dhandapani 17/02/2014
    • Pannaiyar 19/02/2014
  3. Samy 08/02/2017
  4. An Jenshika 10/02/2017
  5. கௌதம் 02/05/2017
    • sekar 30/04/2019
  6. Nalini 14/07/2017
    • sudhagar 20/09/2017
  7. Natarajan Rajangam 09/11/2017
  8. Suvetha 07/12/2017
    • john 01/08/2018
      • Pannaiyar 04/09/2018
  9. மேனகா 24/01/2018
  10. Mohan 03/05/2018
  11. செந்தில் 09/05/2018
  12. Ramaraj Jayaraman 10/09/2018
  13. விஜய் 24/11/2018
  14. madhu 30/11/2018
  15. S.P.MUTHU THANDAVAN 01/01/2019
  16. தட்சணாமூர்த்தி 02/01/2019
  17. S. G. Jayaraman 06/01/2019
  18. Subramani Sankar 10/02/2019
  19. Tamilselvan 18/02/2019
  20. Manuel Devasagayam 12/03/2019
  21. சந்தோஷ் 20/03/2019
    • Pannaiyar 20/03/2019
  22. K. ஸ்ரீதர் 03/05/2019
  23. GOVINDASAMY G 20/07/2019
  24. Sivaraman 30/07/2019
  25. SathishKumar A 14/09/2019
  26. Padma 14/01/2020
  27. Balu k 07/02/2020
  28. Balu k 07/02/2020
  29. Avudaiyappan.E. 18/03/2020
  30. VICKNESWARAN 11/05/2020
  31. சி.சங்கரலிங்கம் 27/09/2020
  32. krishnakhumar 30/11/2020
  33. T A Kulothungan 25/01/2021
  34. Venkadesh 09/02/2021
  35. சாமிநாதன் 12/03/2021
  36. நாச்சிமுத்து 20/05/2021
  37. Gopalakannan 27/05/2021
  38. Anbazhagan 30/05/2021
  39. Jakir 30/05/2021
  40. Srikanth 09/06/2021
  41. M Balu 9994187493 Sankarankoil tenkasidt 22/08/2021
  42. Ramesh Kumar 15/09/2021
  43. முத்துசெல்வி 10/02/2022
  44. SURYA 09/10/2022

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline