உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!!

உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!!

செய்முறை மிகவும் எளிது.. கிடைக்கும் பயன்களோ அளப்பரியன…!

பானத்தின் பெயர்: அற்புத பானம்

தேவையான பொருட்கள்: காரட் – 1, பீட்ரூட்-1, ஆப்பிள் – 1, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு -1.

செய்முறை:

தோல் நீக்கிய இஞ்சித்துண்டு,மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும்.

உத்தரவதமாகக் கிட்டும் நன்மைகள்:

* புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது

* கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது

* வயிற்றுப் புண்ணை குணமாக்குகிறது

* நுரையீரலைப் பலப்படுத்துகிறது

* இதயத் தாக்குதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வருவதைத் தடுக்கிறது

* நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது

* பார்வைத் திறனை அதிகரிக்கிறது. களைப்படைந்த கண்களுக்கும் , உலர் கண்களுக்கும் நன்மை பயக்கிறது.

* தசை வலி மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் தருகிறது

* உடலில் சேரும் நச்சுத் தன்மையை முறிக்கிறது.

* மலச்சிக்கலை எவ்வித சிக்கலுமின்றி குணப்படுத்துகிறது

* சருமத்திற்கு பளபளப்பினைக் கூட்டுகிறது

* அஜீரணம், தொண்டைப் புண் ஆகியவற்றால் ஏற்படும் சுவாச துர்நாற்றத்தை நிவர்த்தி செய்கிறது

* பெண்களுக்கான மாத விடாய் வலியினைக் குணமாக்குகிறது

* பக்க விளைவுகள் ஏதுமில்லை

* சத்து மிகுந்தது – எளிதில் உடலில் சேரக் கூடியது

* எடைக் குறைப்பிற்கு உதவுகிறது

* இரண்டு வார கால உபயோகத்திலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

அருந்தும் விதம்

– காலையில் வெறும் வயிறில் அருந்தவும்.

– சாறு பிழிந்த உடனேயே அருந்துவது மிகுந்த நன்மை தரும்

– அருந்திய பின் ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம்

– அதிகப் பலன் பெற காலை ஒரு முறை, மாலை 5 மணிக்கு முன்பு ஒரு முறை என இரண்டு வேளைகள் அருந்தலாம்

குறைந்த செலவில் நிறைந்த பலன் களை வாரி வழங்கும் அற்புத பானத்தை நீங்கள் உடனே அருந்தத் துவங்குங்கள் – அளப்பரிய நன்மைகளைப் பெறுங்கள்.

2 Comments

  1. Dr.S.SENTHILKUMAR 22/11/2018
  2. Dr.S.SENTHILKUMAR 22/11/2018

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline