( அ) நெல் வயலில் மீன் வளர்ப்பு சத்தியமா ?
சாத்தியம் . கண்டிப்பாக இயற்கை முறையில் செய்தால் மட்டுமே . இல்லையெனில் மீன்கள் வாழ முடியாது.ரசாயன உரம் விஷம் என்பது நமக்கு தெரிந்து ஏற்றுகொண்ட ஒரு விஷயம் .
( ஆ ) எப்படி மீன் வளர்ப்பது ?
நெல் வயலில் நீரின் அளவு 10 செ மீ முதல் 15 செ மீ எப்பொழுதும் இருக்க வேண்டும் . குறைந்தால் மீன்கள் வாழ ஏதுவான உயரம் இருக்காது .
இல்லையெனில் மீன் வளர்க்கும் வயலில் ஓரங்களில் ஒரு மீட்டர் அழமான பள்ளம் எடுத்து வளர்க்கலாம் .
( இ )மீன் வளர்க்கும் நெல் வயலில் அசாலா வளர்க்கலாமா ?
வளர்க்கலாம் .அசாலா வளர்ப்பதால் மீனுக்கு நல்ல உணவாகவும் , காற்றில் இருக்கும் தழைச்சத்தை இழுத்து பயிருக்கும் கொடுக்கும்.
( ஈ ) என்ன வகையான மீன்கள் வளர்க்கலாம் ?
கெண்டை , வெள்ளிகெண்டை ,புல் கெண்டை ,ரோகு, கட்லா