கிளைரிசிடியா ( கிளேரியா ) என்ற இயற்கை அடியுரம்
இன்றைய நமது விவசாயிகள் அடியுரம் போட டி.ஏ.பி. கிடைக்கலையேனு தவிக்கிறார்கள்..!!
அவர்களுக்கு அரசாங்கம் டி.ஏ.பி ஐ இறக்குமதி செய்து கொடுத்துவிட்டு விவசாயிகள் நலத்தை காத்துவிட்தாக ஒதுங்கி கொள்கிறது..
ஆனா டி.ஏ.பி. தேவையே இல்லங்கறதுதான் உண்மை.கொள்ளைகாடு,வாய்க்கா, வரப்புனு தன் பாட்டுக்கு விளைஞ்சி கிடக்கற கிளேரியா (கிளைரிசிடியா) மட்டுமே போதும்.
15 வருடங்களுக்கு முன்புவரை எங்கள் பகுதியில் புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடி
இதை மட்டுந்தான் அடியுரமா பயன்படுத்தினார்கள் விளைச்சலும் அமோகமா இருந்தது..
நாற்றங்காலுக்கு ரெண்டு உழவு ஒட்டி, கிளேரியா இலை சிறு குச்சிகளோடு பரப்பி விட்டுட்டுட்டு, பிறகு, ரெண்டு உழவு ஓட்டி, ஒரு வாரம் கழிச்சி விதை விதைக்கலாம் தொளியானது தைல பதத்தில் இருக்கும்..
காரணம் இந்த கிளேரியா மிக வேகமாக மட்கி மண்ணில் கரைந்து மண்ணை வளப்படுத்தும் இயல்புடையது..
சாகுபடி நிலத்துலயும் இதே மாதிரி உழவு ஓட்டி, கிளேரியாவை பரப்பி, மறுபடியும் ரெண்டு உழவு ஓட்டி, பிறகு 10 நாள் கழிச்சி நடவுசெய்தால் இலை பசுமையா இருக்கும். பூச்சி, நோய், களையே இருக்காது..!?
தழைச்சத்தும் நிறைய கிடைக்கும்..
இந்த மரத்தை வளர்ப்பது பெரிய கடினமான காரியம் அல்ல மரத்தின் சிறு கம்பை வெட்டி வந்து மாட்டு சாணம் தடவி அரையடி ஆழத்தில் நட்டுவைத்தாலே போதும் மரத்துக்கு கேரன்டி..
மரத்தின் மொத்த இலைகளையும் கம்புகளோடு வெட்டிகொண்டு போய் வயலில் போடுவார்கள் சில மாதங்களில்
மரம் மறுபடியும் முழு அளவில் வளர்ந்து விடும் இயல்புடையது…
இப்படிப்பட்ட ஒரு தாவரத்தின் அருமையை நாம் ஏன் மறந்தோம்.??!! இது ஒரு அருமையான உரச்செடி..!!
இதை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தணும்.
நன்றி
Muthu Sivakumar