புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree
பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும். புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் தீரும். புளியம் பிஞ்சுகளைச் சிறுசிறு துண்டுகளாக்கி உப்பில் ஊறவைத்து உண்பதுண்டு.இதில் kudampuli என்பது வேறு வகையானது.
புளியம் பழங்களின் சுவை மரத்தின் வகைக்கு ஏற்பவும், விளையும் நிலப்பகுதிக்கு ஏற்பவும் இனிப்பாகவோ, புளிப்பாகவோ இருக்கும். புளி விதைப் பொடியைத் துணித்தொழிற்சாலையில் பயன்படுத்துவர்.
ஜாம், ஜெல்லி, மார்மலேட் முதலியவற்றிற்குரிய ஜெல்லோஸ் தயாரிக்க இது உதவுகிறது. விதை புரதம் நிறைந்தது. இப்புரதத்தில் புரோலமின், குளுட்டெலின், ஆல்புமின் ஆகியவை உள்ளன.
புளிய விதை எண்ணெயைக் கொண்டு வர்ணங்கள் வார்னிஷ் இவற்றைத் தயாரிக்கலாம். விளக்கு எரிக்கலாம்.
புளியம் பருப்பிலிருந்து தயாரித்த பசையைக் கொண்டு பலகைகள் ஒட்டப்படுகின்றன. சிமெண்டைப் போல இது கெட்டியாக ஒட்டும். கசப்பான விதைத்தோல் வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பைப் போக்கும். விதையிலிருந்து அரைத்த பசையைக் கொப்புளங்களுக்குத் தடவலாம். கொட்டையினால் கழிச்சல், புண், நீர்க்கடுப்பு, வெள்ளை ஆகியவை போகும்.
புளியைக் கொண்டு பித்தளை, செம்பு பாத்திரங்களையும், இசைக் கருவிகளையும் துலக்கினால் அழுக்கு நீங்கி பளபளப்பான தோற்றம் கிட்டும். வெள்ளி நகை, பாத்திரங்கள் ஆகியவற்றிற்கும் வணிகர்கள் புளியைப் பயன்படுத்துவர்.
வலி நிவாரணி :
உடலில் கை மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கங்கள் குறைய, புளிய இலைகளை சூட்டில் வதக்கி ஒரு துணியில் வைத்து, அவ்விடங்களில் ஒத்தடம் கொடுத்து, அதன்பின் வீக்கங்களின் மேல் வதக்கிய புளிய இலைகளை கட்டிவரலாம். கால்களில் , கைகளில் தண்ணீர் படும் இடங்களில் உள்ள காயங்கள் எளிதில் ஆறாது, அந்தக் காயங்களை ஆற்ற, புளிய இலைகள், வேப்பிலைகள் இரண்டையும் நீரில் கொதிக்க விட்டு, அந்த நீரை காயங்களின் மேல் நன்கு ஊற்றி சுத்தம் செய்ய, அவை விரைவில் ஆறி தழும்பு விட்டுவிடும்.
புளிய இலை வயிற்றை சுத்தபடுத்தி கிருமிநாசிகளை அளிக்கிறது.
ரத்தம் சுத்தமாக :
மலேரியா போன்ற கொசுக்களால் ஏற்படும் விஷ சுரங்கள் விலக, புளிய இலைகளை நன்கு காய்ச்சி, பனை வெல்லம் சேர்த்து பருகிவர, காய்ச்சல்களின் வீரியம் குறையும், இரத்தம் சுத்தமாகும்.
வயிற்றுப் பூச்சிகளுக்கு :
காபிக்கு டிகாக்சன் தயார் செய்யும்போது, சிறிது புளிய இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை ஊற்றி டிகாக்சன் செய்ய, காயங்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும், இந்த டிகாக்சனில் காபி பருக, குழந்தைகளின் வயிற்று பூச்சிகள் அழிந்து, குழந்தைகள் நன்கு பசியெடுத்து சாப்பிடுவர். கொழுந்தான புளிய இலைகளை வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து, கூட்டு போல செய்து சாப்பிட, உடல் வலுவாகும்.
கண் பாதிப்பு குறைய :
புளிய இலைகளைப்போல, அதன் பூக்களும் நலம் தருபவை, புளியம் பூவை துவையலாக செய்து சாப்பிட, தலைச்சுற்றல் மயக்கம் சரியாகும். கண் சிவப்பு மறைய, புளியம் பூக்களை அரைத்து கண்களைச் சுற்றி பற்று போட்டுவர வேண்டும்.
புளியம் பழம் : சத்துக்கள் :
நன்கு பழுத்து சதைப் பற்றுடன், சற்றே இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுள்ள புளியம் காய்களே, வெயிலில் நன்கு காயவைத்தபின், சமையலில் நாம் உபயோகிக்கும் புளியாக கிடைக்கிறது. புளியில் வைட்டமின், கால்சியம், இரும்பு மற்றும் தாதுச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
புளியம் பழத்தின் நன்மைகள் :
புளியின் பொதுவான மருத்துவ குணங்கள், மலச் சிக்கலை சரிசெய்யும், உடல் சூட்டை சீர்செய்து, கண் எரிச்சலை போக்கி, உடலை நலமாக்கும். சமையலில் இன்றியமையாத ஒரு பொருளாக, புளி விளங்குகிறது. புளி சேர்க்காத சாம்பார், குழம்பு, மற்றும் இரசம் என்பது, தமிழகத்தில் வெகு அரிதான ஒன்று. புளியை நீரில் சுட வைத்து, உப்பிட்டு, அதை இரத்தக் கட்டுகளின் மேல் பூசிவர, இரத்தக் கட்டுகள் யாவும் குணமாகும்.
வாய்ப்புண் குணமாக :
தேள் கொட்டிய விஷம் இறங்க, வலி போக, புளியை சுண்ணாம்பு கலந்து, கடித்த இடத்தில் இட வேண்டும்.
வாய்ப் புண்கள் குணமாக, புளி கலந்த நீரில் அவ்வப்போது, வாயை கொப்புளித்து வரலாம்.
அளவுக்கு மீறி மது அருந்தியவர்கள் சிலர், அதிக ஆவேசப்பட்டு, சுற்றியுள்ளவர்களை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள், மீதி சிலர், மது போதை தலைக்கேறி, தன்னிலை மறந்து மயங்கிக் கிடப்பர், இந்த மோசமான நிலையிலிருந்து இவர்களைத் தெளிய வைக்க, புளியை கரைத்து அந்த நீரை பருக வைக்க, இயல்பு நிலைக்கு திரும்புவர்.
புளியங் கொட்டை புளியங் கொட்டை புளியங் கொட்டையில் அரிசியில் உள்ளது போன்ற மாவுச்சத்தும், ஆல்புமின் எனும் தாதுவும் மற்றும் எண்ணைத் தன்மையும் உள்ளன.
புளியங் கொட்டைகளை தூளாக்கி, பாலில் சிறிது இட்டு, பனங்கற்கண்டு கலந்து பருகிவர, உயிர்த்தாது வளமாகும்.
புரதச் சத்துக்கள் :
உடலில் புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள், புளியங் கொட்டைகளை வறுத்தோ வேக வைத்தோ உணவில் விரும்பும் வகையில் சேர்த்துவர, புரதக் குறைபாடுகள் நீங்கி, உடல் நலம் பெறலாம்.
புளியமரம் ஆங்கில பெயர் tamarind tree