சுவையில் கொள்ளைகொண்ட கிச்சலி சம்பா அரிசி
பொதுவாக வெள்ளை அரிசியையும் சன்ன ரகமாகவும் சாப்பிட நாம் பழகிவிட்டோம். சத்து மிகுந்த மோட்டா ரக அரிசியைத் தவிர்த்துவிட்டுப் பாலிஷ் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருகிறோம். இது நம்முடைய ஆரோக்கியத்துக்குப் பலனளிக்காது.அதேநேரம் வெள்ளை அரிசியாகவும், சன்ன ரகமாகவும் சாப்பிடச் சுவையாகவும் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற ரகமாகக் கிச்சலி சம்பா உள்ளது.
நன்மைகள்
கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைச் சாப்பிட்டால் தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகும். இந்த வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகளின் நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரிக்கும். பால் சுரக்கும் திறன் அதிகரிக்கும்.
அதுமட்டுமில்லாமல், அனைத்து வகையான பலகாரங்கள் செய்வதற்கும் ஏற்ற ரகம் kichili-samba rice . சமீபகாலமாகத் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவளிக்க, இந்தக் கிச்சலி சம்பா அரிசியைப் பயன்படுத்துகிறார்கள்.
விளைச்சல் மற்றும் அறுவடை
இயற்கையில் எந்தவித நச்சும் இல்லாமல் ஒரு வழியா மழை, வெள்ளம், மயில் ,மாடு , எலி, சிட்டுகுருவி, இவைகள் எல்லாம் சாப்பிட்ட மீதி இருப்பதோ அமோக விளச்சல் தான்
பார்க் கும்போதே மகிழ்ச்சியாக உள்ளது.இன்னும் 20வது நாட்களுக்குள் அறுவடை செய்துவிடலாம்.
விதை நெல்லாகவும் , பச்சைஅரிசியாகவும்,புழுங்கல் அரிசியாகவும் விற்பனைக்கு உள்ளது.
தொடபுக்கு
தேவைபடும் நண்பர்கள் கீழேஉள்ள வாட்ஸ்ஆப் என்னில் முன்பதிவு செய்து கொள்ளவும்.
நன்றி.
சாந்திகுமார்,
மறைமலை நகர்
98849 12051