Acharyam Niraintha Amazon Kadugal ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்
நூலாசிரியர் குன்றில் குமார் கூறும் கருத்துக்கள், அதிசயம். ஆனால், உண்மை என்ற நிலையில் விளக்கம் பெறுகின்றன. அமேசான் காடுகளில் காணப்படும் ஒரு வகை மரம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி நம்ப முடியாத அதிசயங்களும், வியப்பும், அமேசான் காடுகளில் ஏராளமாக உள்ளன. ‘அமேசான்’ என்றால் மரங்களை அழிக்க வல்லவன் என்று அப்பகுதிமக்கள் மொழியில் அர்த்தமாம்.
தென் அமெரிக்காவில், பிரேசில், பெரு, பொலிவியா, கானா, ஈக்வெடார், கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகளில் விரிந்து பரந்து கிடக்கிறது அமேசான் காடுகள். உலகிலேயே மிகப்பெரிய மழைக்காடு. வருடம், 365 நாளும் மழை பொழிகிறது. இக்காடுகளில், 100 சதவீதம் ஆக்சிஜனைப் பெற முடிகிறது என்பது மற்றொரு அதிசயம். உலகில் உள்ள மொத்த ஆக்சிஜனில், 20 சதவீதம் இங்கு கிடைக்கிறது. அமேசான் மழைக்காடுகளில், பெரு நாட்டின் பகுதியில் மர்ம நதி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. நதிகளில் மர்ம நதியா? விசித்திரம் தான்.
பெரு நாட்டில் பாயும் அமேசான் நதியில், 64 கி.மீ., நீளத்திற்கு மட்டும் நதியின் நீர், சுடுநீராகக் கொதிக்கிறது (பக்.26). உலகின் மிகப்பெரிய நதிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது அமேசான்.