நூல் அறிமுகம் – அலையாத்தி காடுகள்: Mangrove Forest 

அலையாத்தி காடுகள்: Mangrove Forest – முனைவர் க.கதிரேசன்,D.Sc., – கௌரவ பேராசிரியர்

அலையாத்தி காடுகள் 4,107 தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக பறவைகள், மீன்கள், மற்றும் பூச்சி இனங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

நூல் அறிமுகம் - அலையாத்தி காடுகள்: Mangrove Forest 

உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் சுந்தரவனக் காடுகள். இங்கு மட்டும்தான் புலிகள் காணப்படுகின்றன. உலகில் அருகி வரும் உயிரினங்கள் இங்கு உள்ளன என்பதும் தனி சிறப்பு.

இந்தியாவில் 4,921 சதுர கிலோமீட்டர் பரப்பில் அலையாத்திக் காடுகள் உள்ளன. அவற்றில் 66 விழுக்காடு இரு இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஒன்று மிகவும் ஈரமான குளிர்ந்த சுந்தரவனக் காடுகள் இன்னொன்று மிகவும் வெப்பமான உலர்ந்த குஜராத் காடுகள்.உலகளவில் அலை ஆத்திக் காடுகள் ஆண்டொன்றிக்கு 1 விழுக்காடு அழிந்து வருகிறது. ஆனால் இந்தியாவில்1.9 விழுக்காடு அக்காடுகள் பெருகி வருகின்றன.

அலை ஆத்திக் காடுகளைப் பற்றிய ஆய்வில் இந்தியா மூன்றாவது பெரிய நாடு என்ற பெரியபெருமையை பெற்றுள்ளது. தலைசிறந்த 10 அலையாத்திக் காடுகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளில் இரண்டு இந்தியாவில் அதுவும் எங்கள் மையத்திலிருந்து வந்திருக்கிறது என்பது சிறப்பு.

2004 சுனாமி ஆழி பேரைலைக்கு பிறகு அலை ஆதிக்காடுகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது. உலகின் 80 விழுக்காடுகள் மீன்களை அள்ளி தருகின்ற அலை ஆத்திக் காடுகளை பற்றிய சிறப்பு புரிந்துள்ளது. கிணற்றடி நீரை உப்பாகாமல் பாதுகாத்துப் பருகத் தரும் அலை ஆத்திக்காடுகளை பற்றிய சிந்தனை பெருகி உள்ளது.

அலை ஆத்திக் காடுகளின் தனிச்சிறப்பை மக்கள் இன்னும் அறிய வேண்டும். அக்காடுகள் பாதுகாக்கப் படவேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும் என்ற நோக்கில் முனைவர் மாசிலாமணி செல்வம் இந்த நூலை எழுதியுள்ளார்.

பயனுள்ள நூல், பயிற்றுவிக்கும் நூல் .படிக்க வேண்டிய நூல்   பாராட்ட பட வேண்டிய நூல்

புத்தக, வாங்க அமேசான் இந்தியா பதிபில கிடைகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline