முடக்கத்தான் தோசை செய்முறை:
தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – அரை கிலோ, உளுந்து & 100 கிராம், வெந்தயம் & 2 ஸ்பூன், முடக்கத்தான் கீரை & 4 கப்.
முதல் நாளே அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஊற வைத்து தோசைமாவுக்கு அரைப்பதுபோல மைய அரைத்து வைக்கவும். நன்றாகக் கழுவி, சுத்தம் செய்த முடக்கத்தான் கீரையை மிக்ஸியில் கூழாக அரைக்கவும். அதை ஏற்கெனவே அரைத்து வைத்த மாவில் கலக்-கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைக்-கவும். மறுநாள் தோசையாக ஊற்றி எடுக்க வேண்டும். கீரை கூடுதலாகச் சேர்த்தால் மிகவும் நல்லது.
இதற்கு தொட்டு சாப்பிட கொத்தமல்லிச் சட்னி நன்றாக இருக்கும்.
கொத்தமல்லிச் சட்னி செய்முறை:
மிளகாய் 8, ஒரு கைப்பிடி கொத்தமல்லி, உரித்த பூண்டு நான்கைந்து ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்த பின், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சூடான தோசையில் இந்தச் சட்னியை வைத்து அதன் மீது நல்லெண்ணெ ஊற்றிச் சாப்பிட்டால் சுவை சொக்கவைக்கும்; சத்துக்களும் உடலில் சேரும்.