katla FIsh – கெண்டை மீன்

katla fish

கெண்டை மீன் வளர்ப்பு மற்றும்பராமரிப்பு

 

வளர்க்க தகுந்த கெண்டை மீன்களின் வகைகள் :

  • தோப்பா கெண்டை
  • தம்பட கெண்டை
  • புல் கெண்டை
  • சாதா கெண்டை
  • மிர்கல் ரகங்கள்
  • ரோகு

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த கெண்டை மீன் வகைகள் :

  • வெள்ளிக் கெண்டை  தாயகம்  சீனா
  • புல் கெண்டை  தாயகம் சீனா
  • சாதாரண கெண்டை  தாயகம் தாய்லாந்து

இந்த வகை மீன்களின் உணவு பழக்கம் :

பொதுவாக அனைத்து வகையான் katla மீன்களும், பொதுவாக மட்கிய பொருள்கள் உணவாக எடுக்கும் பழக்கம் கொண்டவை .

புழு, பூச்சிகள், குளத்தடியில் உள்ள சிறு தாவரங்கள், விலங்கின நுண்ணுயிரினங்கள், மட்கிய பொருள்கள் போன்றவைகளை சாதா கெண்டை வகை உண்ணும் .

விலங்கின நுண்ணுயிர் மிதவைகள் போன்றவற்றை உண்ணும் பழக்கம் கொண்டவை தோப்பா கெண்டை , தம்பட கெண்டை வகை மீன்கள் .புல் கெண்டை மீன்கள் நீர்த் தாவரங்களையும் கரைகளில் இருக்கும் புல்களையும் உண்ணும்.

இதில் மிகவும் வேகமான வளர்ச்சி உடைய ரகம் நமது நாட்டின் இந்திய  Katla fish , Rogu , மிர்கல் ரகங்கள் ஆகும் .

 

catla catla fish

 

catla fish வளர்க்க குளத்தின் அமைப்பும் அளவும் :

2500 சதுர அடி சென்ட் நிலத்தில், எட்டு அடி ஆழம் கொண்ட குளம் வெட்டவேண்டும் . இதில் தேவையான அளவு களிமண்  கொட்டி தண்ணீர் வடியாமல் இருக்கும் படி அமைக்க வேண்டும்.

இந்த குளத்தில் 4 முதல் 5 அடி உயரம் வரை நல்ல நீரை தேக்க வேண்டும் . இந்த katla fish வகைகள் நன்னீர் மீன் வகையை சேர்ந்தது ஆகும் .5 அடி வரை நீரை தேக்கி வைப்பதன் மூலம் நீரின் வெப்பமாகும் அளவை குறைக்க முடியும் . இதனால் மீன்கள் குளிச்சியான சூழிநிலையில் வளரும் . இதன் காரணமாகவே குளத்தின்  நீர் இருக்கும் ஆழம் 6 அடி வரை இருக்க வேண்டும்

இந்த குளத்தில் 1500 முதல் 2000 மீன் குஞ்சுகள் விடமுடியும். catla  catla வகை மீன்களை கலந்து வளர்ப்பது மிக அதிகமான வருமானம் கொடுக்கும் .இந்த மீன்குஞ்சுகளில் வயது இரண்டு  மாதம் அல்லது அதற்கும் சிறிது அதிகமாக இருப்பது மிகவும் அவசியம் .

தாமரை அல்லது அல்லி போன்ற நீர்தாவரங்களை இந்த குளங்களில் வளர்ப்பதன் மூலம் மீன்களுக்கு தேவையான நிழலான சூழ்நிலையும் , நீர் வெப்பம் அடைவதும் மிகவும் குறையும் .இவ்வாறு அமைக்கும் குளத்தின் அருகில் மரங்கள் இருப்பதும் நல்ல பயண கொடுக்கும் .

இதில் பாதி அளவு  மீன்கள் இறந்து போகும் வாய்ப்புகள் உள்ளது . இருந்தாலும் மீதி இருக்கும் மீன்கள் மூலம் தேவையா வருமானம் கிடைத்து விடும் .

உணவு முறை

கடலைப் பிண்ணாக்கு , கிழங்கு மாவு போன்றவைகளை கொடுக்கலாம். மேலும் இதிலிருந்து உற்பத்தி ஆகும் புழுக்கள் மற்றும் நூண்ணுயிரிகளை உண்டு கொள்ளும் . மேலும் குளத்தில் கரையில் வளரும் புல் போன்றவற்றையும் உண்டு வளரும் .மேலும் பண்ணை , மாமிச கழிவுகள் ( வேக வைத்து ) , புழுப்பூச்சிகள், சாணம்,போன்றவற்றயும் உண்ணும் பழக்கம் கொண்டவை.இதனால் சில நாட்கள் இடைவெளியில் மாட்டு சாணமும் கறந்து குளத்தில் கலப்பதன் மூலம் நூண்ணுயிரி பெருக்கம் ஏற்படும் .மீன்களுக்கு தேவையான உணவு கிடைக்கும் .

எடை மற்றும் வளர்ச்சி  katla fish

இந்த வகை மீன்கள் ஒரே ஆண்டில் 1 – 1 ½ கிலோ எடை வரை வளரும் திறனுடையது.

 

katla fish nutrition

PRINCIPLE NUTRIENT VALUE
Energy (Calories) 100 Kcals/Calories
Energy (Kilojoules) 420 KJ
Water 73.7 g
Nitrogen 3.12 g
Protein 19.5 g
Fat 2.4 g
Sodium 50 mg
Potassium 150 mg
Calcium 530 mg
Magnesium N mg
Phosphorus 240 mg
Iron 0.90 mg
Copper 0.12 mg

One Response

  1. M Appusamy 02/05/2022

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline