நமது நாட்டில் பல விடயங்கள் பழமொழிகளின் வாயிலாக நமது முன்னோர்கள் கூறி சென்று உள்ளனர். பல பெரிய சிக்கலான அனைத்தும் சிறிய வார்த்தை கோர்வையில் அடக்கி சென்று உள்ளனர். மேலும் பல மருத்துவ , வாழ்வியல் சார்ந்தவையும் உண்டு . இன்று ஒரு இடத்தில கீழே இருக்கும் பழமொழியை படித்தேன். இதன் பொறு விளக்கம் சற்று குழப்பம் உள்ளது .
” சுவாமி இல்லை என்றால் சாணியை பார் , மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார் , பேதி இல்லை என்றால் (நேர்) வாளத்தைப் பார் ”
விளக்கம் தேடிக்கொண்டே உள்ளேன் . தெரிந்த நண்பர்கள் தங்களின் கருத்துகளை பகிரவும் .
பழமொழி: சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்.
பொருள்: கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்; மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.
விளக்கம்: சுவாமியையும் சாணியையும் சேர்த்துச் சொன்னது, பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது. இந்த வழக்கம் முன்னாட்களில் சிற்றூர்களிலும், இப்போதுகூட சில வழிபாடுகளிலும் கடைப்பிடக்கப்படுவாதத் தெரிகிறது.
மருந்து என்றது வெடிமருந்தைக் குறிப்பது; பாணம் என்றால் வாணவேடிக்கைகளில் பயன்படும் ராக்கெட் வாணம்: ’பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு.நகர.24). வானம் என்றது உலந்த விதைகளைக் குறிக்கிறது.
(https://www.tamilbrahmins.com/printthread.php?t=9310&pp=10)
அருமையான விளக்கம். நன்றிகள்