பசித்த பின்பு புசி என்று முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். உணவை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை சில அறிகுறிகள் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு முன்பு மீண்டும சாப்பிட்டால் ´ஆமம்´ என்ற நஞ்சு வயிற்றில் உருவாகி விடக்கூடும் என்கிறது ஆயுர்வேத மருந்துவம். இந்த நஞ்சு நாளடைவில் உடல் முழுவதும் பரவி நோய்களை உருவாக்கி விடவும் வாய்ப்பு உள்ளது. உணவு செரிக்காத நிலையில் உணவில் சுவை, மணம் கலந்து ஏப்பம் வெளிவரும். வெளியிடும் ஏப்பம் சுத்தமாக இருக்க வேண்டும். அதாவது எந்த சுவையும் இல்லாமல் ஏப்பம் வந்த பிறகு உணவு உண்ணுவது தான் சரியான அறிகுறி ஆகும். சாப்பிடும போது இதயம், முகம் மற்றும் ஐம்புலன்கள் தெளிவுற்று இருப்பதும் முக்கியம். சிறுநீர், மலம் ஆகியவை முறையாக கழித்து இருக்க வேண்டும். வயிற்றில் பசி தோன்றி இருக்க வேண்டும். எனவே இந்த அறிகுறிகள் தோன்றிய பின்பு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆயுள், பலம் ஆகியவையும் வளரும். எண்ணெய் பசை உள்ளதாகவும், எளிதில் ஜீரணிக்க கூடியதுமான உணவுகளை சற்று சூடான நிலையில் உட்கொள்ளலாம்.