நமது வாழ்வும் சுய உரிமையும்
நாம் இந்த உலகில் வாழ மிக அவசியமான சில விடயங்கள் என நான் நினைப்பது உன்ன ஆரோகியமான உணவு , இருக்க பாதுகாப்பான இடம் , உடுக்க உடை , நல்ல காற்றும் நீரும். இவை தவிர்த்து இந்த உலகில் மிக அவசியம் என்று கருதும் ஏதும் உள்ளதா என்று கண்டால் அப்படி ஒன்றும் இல்லை என்ற உணர்வே மேலோங்கி உள்ளது . இவை தவிர்த்த அனைத்தும் அடுத்தவர் காண நாம் வாழ்கையை வாழ்ந்து கொண்டு உள்ளோம். பல லச்சங்களில் உறைவிடம் கட்டும் நாம் அதில் எத்துனை காலம் நிம்மதியான உறக்கம் கொள்ள இயல்கிறது.
மேலும் துயில் கொள்ளும் நேரம் சிந்தனை குறைவது இல்லை .அப்படி என்ன சிந்தனை செய்கிறோம் என்று கவனிக்க, அதிருந்து போகும் நிலமையை உணர முடிகிறது. நமது சிந்தனை இப்படியும் இருக்கலாம் எதிர் காலம் , கடமை , குடும்பத்தின் எதிர்காலம் ,புதிய வீடு , புதிய மோட்டார் வண்டிகள் , வசதியான மோட்டார் கார்கள் , கைபேசிகள், உயர்த்த உடைகள் , வாரிசுகள் நன்கு வாழ அவர்களுக்கான தேவைகள். இப்படி முழுக்க முழுக்க சிந்திக்கும் நாம் இழப்பது நமது தூக்கத்தை மட்டுமே. இதில் நாம் மற்ற முடியாத பல விடயங்கள் உண்டு. அப்படியே உணவும், உறைவிடமும் இருந்து விட்டால் ஒரு விலங்கின் வாழ்வையும் ,மனிதமும் கொண்ட வாழ்க்கை வாழும் பொழுது என்ன நடக்கும்.
பேசுவோம் ..வாருங்கள் .
மிகவும் அற்புதமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்