தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்

 

தாய்ப்பால் சுரக்க உணவுகள்

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாய்ப்பால், சில நேரங்களில் போதுமான அளவு இருக்காது. அவ்வாறு தாய்ப்பால் குறைவாக சுரப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் மனஅழுத்தம், தூக்கமின்மை, உடல் வறட்சி போன்றவை முக்கியமானவை. அவ்வாறு தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால் அதில் இயற்கையாக எந்த ஒரு மருந்துகளையும் சாப்பிடாமல், சாப்பிடும் ஒரு சில உணவுகளை உண்டாலே தாய்ப்பால் அதிகமாகும். இவ்வாறு அத்தகைய உணவுகளை உண்பதால் தாய்ப்பால் அதிகமாவதோடு, தாயின் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் வெந்தயம் :

 

வெந்தயத்தில் அதிகமான அளவு இரும்புச்சத்து, வைட்டமின், கால்சியம் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கின்றன. இவற்றை சாப்பிட்டால் உடலில் இருக்கும் தாய்ப்பாலின் அளவு அதிமாகும். அதற்காக இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடலில் வறட்சி ஏற்பட்டுவிடும். இதனை அப்படியே சாப்பிடுவதை விட, சமைக்கும் போது உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.

துளசி :

துளசி ஒரு சிறந்த மூலிகைப் செடி. அதை அனைத்து மருந்துகளிலும் பயன்படுத்திருப்பார்கள். அத்தகைய துளசியை சாப்பிட்டால் தாய்ப்பாலும் அதிகரிக்கும். மேலும் துளசியில் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. வேண்டுமென்றால் இத்தகைய துளசியை சூப் சாப்பிடும் போது சிறிது சேர்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் அதனை அப்படியே வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

காய்கள் :

காய்கறிகளில் சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டாலும் தாய்ப்பால் அதிகமாகும். ஏனெனில் அதில் வைட்டமின், கனிமச்சத்து போன்றவை உள்ளது. அதுவும் இதனை சமைத்து சாப்பிடும் போது, குறைந்த அளவு காரத்தை சேர்த்து சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அது எளிதில் செரிமானமடையாமல் இருக்கும்.

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் கொழுப்பு பொருட்கள் :

கொழுப்பு நிறைந்துள்ள பொருட்களான நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டாலும், தாய்ப்பால் அதிகரிக்கும். இவை உணவில் சேர்த்தால் உடலுக்கு நிறைய எனர்ஜிகள் கிடைக்கும். மேலும் அந்த பொருட்களை தோசை, சப்பாத்தி மற்றும் பல உணவுகளில் சிறிது சேர்த்து உண்ணலாம்.

பூண்டு :

நமது முன்னோர்கள் சொல்வது போல் பூண்டை பாலில் சேர்த்து சாப்பிட்டாலும் தாய்ப்பால் அதிமாக சுரக்கும். மேலும் அதனை அப்படி சாப்பிட பிடிக்காதவர்கள், தினமும் உண்ணும் உணவுகளில் சேர்த்து சாப்பிட வேண்டும்.

நட்ஸ் :

பாதாம் மற்றும் முந்திரி போன்றவைகளும் தாப்பாலை அதிகரிப்பவை. ஏனென்றால் அதில் புரோட்டீன், வைட்டமின் மற்றம் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. ஆகவே அதனை மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்.

நார்ச்சத்துள்ள உணவுகள் :

கீரைகள் மற்றும் சிவப்பு காய்களில் அதிகமாக நார்ச்சத்துக்கள் இருக்கும். அதிலும் பசலைக்கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. அதற்கு தான் மருத்துவர்கள் தினமும் ஒரு காய்களையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தாயிடம் சொல்கின்றனர்.

எனவே இந்த உணவுகளையெல்லாம் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், தாய்ப்பால் எளிதில் அதிகரிக்கும். மேலும் அந்த பாலைக் குடிக்கும் குழந்தைக்கு எந்த ஒரு நோயும் வராமல் நன்கு ஆரோக்கியத்தோடு இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline