- செம்மறியாடுகளுக்கு வெள்ளாடு வகைகளுக்கு அமைப்பது போல விலை அதிகம் செலவு செய்து எந்த விதமான பெரும் கொட்டகை அமைக்க வேண்டியது இல்லை .
- குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்தே பராமரித்து கொள்ள இயலும்.
- செம்மறி ஆட்டு பண்ணை அமைக்க மிகவும் குறைந்த அடிப்படை செலவுகள் போதுமானது .
- சிறிய அளவில் தொடங்கி அதிலிருந்து செம்மறியாடு எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.
- செம்மறியாடு நமக்கு இறைச்சியை கொடுக்கிறது. மேலும் சில வகை செம்மறி ஆடுகள் நாம் உடுத்த தேவையான உல்லன் நூல் உருவாக்க தேவையான ரோமத்தையும் தருகிறது.
- இவை பெரும்பாலும் வேருடன் உண்டு விடுவதால் நிலத்தில் களைகள் கட்டுப்படுத்த படுகிறது .
- மேய்ச்சல் முறையில் பல வகையான செடிகளை உண்டு வளருகின்றன.அதனால் நமக்கு இன்றல்ல இறைச்சி கிடைக்கிறது .இதன் காரணமானாக நமது நாட்டில் பலருக்கு ஆட்டுக்கறி விரும்பி உண்பதால் வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைக்கிறது .
- இவ்வாறு வளர்த்தப்பதால் நமக்கு பல நன்மைகளுடன் வருமானம் தருகிறது.
- நிலத்திற்கு தேவையான உரமும் கிடக்கிறது .ஆட்டு கிடை போடுவதால் நிலமும் நல்ல வளமடைகிறது .
- அறுவடை காலங்களில் சிதறும் தானியங்கள் நாம் எடுக்க முடியாமல் சென்றாலும் இந்த வகை செம்மறி ஆடுகள் கொண்டுள்ள உதட்டு அமைப்பின் மூலம் அதனை உண்டு விடுகிறது .அதற்க்கு தீவனமும் ஆச்சு , குடவே நல்ல உரமும் ஆச்சு .
- செம்மறியாட்டுக் குட்டி வளர ஒரு வருடம் அதாவது 12 மாதம் ஆகும்
தமிழகத்தில் இருக்கும் செம்மறி( செம்புளி )ஆடுகள்
மெட்ராஸ் சிவப்பு செம்மறி ஆடு
திருச்சி கருப்பு செம்மறி ஆடு
கெங்கரி செம்மறி ஆடு
வேம்பூர் செம்மறி ஆடு
நீலகிரி செம்மறி ஆடு
மேச்சேரி செம்மறி ஆடு
கீழக்கரசல் செம்மறி ஆடு
ராமநாதபுர வெள்ளை செம்மறி ஆடு
கோயமுத்தூர் செம்மறி ஆடு ( அல்லது ) குறும்பாடு
நன்றி ஐயா
எறப்பு ஏற்பட்டு உடனே இறந்து போகின்றன செம்மறியாடு.
அதற்கு எதாவது எளிய மருத்துவம் கூறுங்கள்? ஐயா