போலியோ என்னும் கொடிய நோய்

போலியோ என்னும் கொடிய நோய்

 

 

போலியோ என்னும் கொடிய நோய்

 

போன நூற்றாண்டில் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான பேரை முடமாயது போலியோ என்னும் கொடிய நோய். இதனால் ஒட்டு மொத்த சமூகத்தின் செயல்பாடுகளும் முடங்கியே போச்சு.

குறிப்பா நம்ம இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஆரோக்கியத்துக்கே ஓப்பன் சவால் விட்டது. இந்த நிலைமை ஆண்டுதோறும் அதிகரிச்சுக் கிட்டே வந்தது.

அதுனாலே, இந்த நோய்க்கு பாடைக் கட்ட பலவேறு மெடிக்கல் டீம் களத்தில் இறங்கியது. முக்கியமா, அமெரிக்கா போலியோவுக்கு எதிராக தடுப்பு மருத்துவத்தைக் கண்டுபிடிப்பதற்கு அதிக நிதியை ஒதுக்கி உதவியது. அது வீண்போகவில்லை.

இதுக்கிடையிலேதான் 1952ல், ஜோனஸ் சால்க் (Jonas Salk) அப்படீங்கற அமெரிக்க டாக்டர் இந்த நோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடிச்சிட்டார்.

ஆனாக்க போலியோ கிருமிகளில் மூன்று துணை இனங்கள் உண்டு. அவற்றைக் கொன்று, வீரியமிழக்கச் செய்து, குரங்கின் சிறுநீரகத் திசுக்களில் வளர்த்து தடுப்பூசியைக் கண்டுபிடித்தார்.

இன்னொரு சிக்கல் என்னன்னா அவருடைய காலத்தில் உயிருள்ள கிருமிகளை வைத்துத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முறைதான் நடைமுறையில் இருந்தது. அதனால் அவரால் பரிசோதனைக்காக தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் ஆறு குழந்தைகள் இறந்துவிட்டனர். மூன்று குழந்தைகளுக்கு போலியோ வந்து கால்கள் முடமாயிற்று. எனவே, பரிசோதனைக்கு நோயாளிகள் கிடைப்பது சிரமமாக இருந்தது.

இதனால் சால்க், தான் கண்டுபிடித்த தடுப்பூசியை தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் முதலில் போட்டுக்கொண்டார். இதன் பலனால் பொதுமக்களுக்கு நம்பிக்கை வந்து 161 குழந்தைகள் அவரிடம் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். இவர்களுடைய ரத்தத்தில் போலியோவைத் தடுக்கக்கூடிய எதிர் அணுக்கள் உற்பத்தியானதை நிரூபித்தார். எனவே, இவருடைய கண்டுபிடிப்பை மருத்துவ உலகம் ஏற்றுக்கொண்டது. அதன் பிறகுதான் இந்த நோயின் தாக்குதல் உலக அளவில் குறையத் தொடங்கிச்சு

இதுக்கிடையிலே நோட் பண்ண ஒரு விஷயம் :இந்த கண்டுப் பிடிப்பில் தனது தனிப்பட்ட வளத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை. ஆம்.. இத்தடுப்பூசிக்கான கண்டுபிடிப்பு உரிமம் யாரிடம் உள்ளது என தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சால்க்கிடம் கேட்கப்பட்ட போது, அவர் “ஆக்கவுரிமை எதுவும் கிடையாது. சூரியனுக்கு நீங்கள் ஆக்கவுரிமை கோர முடியுமா?” அப்படீன்னு கேட்டாராக்கும்

Thanks
Anthaiyar

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline