சிறுதானியம் பற்றிய விவசாய கட்டுரை

தமிழகத்தில்  சிறுதானியம் சாகுபடி மற்றும் வகைகள்

தமிழகத்தில் அதிகம் பயிர் செய்யப்படும் சிறுதானிய வகைகள் சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு, கேழ்வரகு, கம்பு, சோளம். பொதுவாக இவை அனைத்தும் அதிகம் மானவாரி பயிர் சாகுபடியில் விளைகிறது .

பொதுவாக வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் இருக்கும் மழை அளவை கொண்டே இந்த இயற்கை முறை மானவாரி சாகுபடி செய்ய படுகிறது.இதில் 90,000 ஹெக்டேர் அளவு நிலத்தில் கேழ்வரகு மட்டுமே தனியாக அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

 

சிறுதானியம் பற்றிய விவசாய கட்டுரை

நிலம் தயார் செய்தல் :

நிலத்தில், 2 சால் முதல் 4 சால் வரை புழுதி உழவு ஓட்டி நிலத்தைத் தயார் செய்ய வேண்டும். இந்தக் கோடைகால புழுதி உழவால், களைகள் கட்டுப்படுவதோடு, மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவை வெப்பத்தில் அழிக்கப்பட்டுவிடும். இந்த பூச்சிகளால் ஏற்படும் குலை நோய் மற்றும் பூச்சித்தாக்குதல், பூஞ்சணத் தாக்குதல் போன்றவை திக அளவில் கட்டுப்படுத்தப்படும். சித்திரையில் செய்யும் கோடை உழவுக்கு அடுத்துக் கிடைக்கும் மழையில் , மழைநீர் மண்ணுக்குள் சேகரமாகி விடும். அதனால் சிறிய லல்வில் பெய்யும் மழையால் மண் ஈரப்பதத்துடன் இருக்கும்.

சிறுதானியம் விவசாய செய்ய ஏற்ற மாதங்கள்

மானாவாரி நிலத்திற்கு என்ற மாதங்கள் – ஜூன்-ஜூலை அல்லது செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் சிறுதானியங்களை விதைக்கலாம்.

இறவைப்பாசன நிலத்தில் வருடத்தின் அனைத்து மாதங்களிலும் விதைக்கலாம்.

விதை மற்றும் விதை நேர்த்தி

மானாவாரி நிலத்தில் விதைக்க ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவை. இறவைப்பாசன நிலத்தில் விதைக்க 2 கிலோ விதை போதுமானது

இந்த சிறுதானிய விதைகளை , ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற விகிதத்தில் சேர்த்து நன்கு ஆறிய வடிகஞ்சி ஊற்றிப் பிசைந்து விதை நேர்த்தி செய்து நிலத்தில் விதைக்க வேண்டும்.

சிறுதானியம் பற்றிய விவசாய கட்டுரை

அதே போல மானாவாரியில் ஏக்கருக்கு 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியைத் தொழுவுரத்தோடு கலந்து தூவிவிட்டால் குலை நோய் கட்டுப்படும். (இறவையில் பயிர் செய்பவர்கள் தொழுவுரத்தோடு சூடோனோஸைக் கலந்து கொடுக்கலாம்). ஏக்கருக்கு 2 மூட்டை வேப்பம் பிண்ணாக்கைத் தூவி விதைத்தால், பூச்சித் தாக்குதல் கட்டுப்படும்.

இறவைப்பாசன சிறுதானிய பயிர்கள்

கேழ்வரகு மற்றும் கம்பு ஆகியவைதான் அதிகமாக இறவைப்பாசனத்தில் சாகுபடி செய்யப்படுகின்றன. சாமை, தினை, வரகு, குதிரைவாலி போன்ற பயிர்களை நாற்று விட்டு நடவு செய்தால் இரண்டு மடங்கு கூடுதல் மகசூல் கிடைக்கும்.இது நேரடி விதைப்பில் கிடைக்கும் அளவை விட அதிகம் . ஒரு ஏக்கர் பரப்பில் நடவு செய்ய… 8 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். மேட்டுப்பாத்திகள் அமைத்து விதைகளைத் தூவினால் 15 நாள்களிலிருந்து 20 நாள்களில் நாற்றுகள் தயாராகிவிடும். வரிசைக்கு வரிசை 30 சென்டி மீட்டர் செடிக்குச் செடி 10 சென்டி மீட்டர் என்ற இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்

எங்கே கிடைக்கும் சிறுதானிய விதைகள்

திருவண்ணாமலையில் இருக்கும் அத்தியந்தல் இருக்கும் சிறுதானிய மகத்துவ மையத்தில், தர சான்றளிக்கப்பட்ட சிறுதானிய விதைகள் கிடைகிறது . விலை கிலோ 70 ரூபாய்

தொடர்பு  எண்

தொலைபேசி: 04175 298001.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline