கருணைக்கிழங்கு சாகுபடி முறைகள், பயன்கள் முதல் குழம்பு செய்வது வரை

கருணைக்கிழங்கு

சுமார் 600  க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் உள்ளன. இது ஆசியா மற்றும் அப்பிரிக்கா நாடுகளுள் அதிகம் உள்ளது .இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய்  வெள்ளை , சிவப்பு ,கருப்பு போன்ற நிறங்களிலும் ,இனிப்பு முதல் ,காரம், கசப்பு,  கடுமையான புளிப்பு மற்றும் சுவை இல்லாத வகைகளும் உள்ளது. மேலும் உண்ணக்கூடிய மற்றும் விஷ தன்மை  கொண்டவைகளும்  உள்ளது.Yam என்பது  தான் கருணை கிழங்கின் English பெயர்.

இதனை இந்தியா , சீனா ,FIJI தீவுகள்,nigeria,Ghanaபோன்றநாடுகளில்அதிகம்காணபடுகிறது.உலகஅளவில்உற்பத்தியில்முதல்இடம்பிடிப்பது nigeria நாடுஆகும்.இங்குதான்உலகின்பயன்படும்  yam  உற்பத்தியில்   45%  விளைவிக்க பட்டது .

 

கருணை கிழங்கு

கருணைக்கிழங்கு வகைகள்

கருணைக்கிழகில் இரண்டு வகைகள் உள்ளது . இதனோ  காரும் கருணை , காராக் கருணை என்று அழைக்கபடுகிறது . இந்த இரண்டு வகைகளு உணவாக பயன் படுத்த கூடியதுவே . அதாவது இரண்டு உன்ன கூடிய வகையைய சார்ந்த கருணை கிழங்குகள் ஆகும் .  மேலும் இதில் காரும் கருணையைப் பிடிகருணை என்றும்,காராக் கருணை வகையை  சேனைக்கிழங்கு என்றும் கூறுவர்.

 

 என்ன வகையில்  கருணைக்கிழங்கு சாகுபடி செய்யலாம்

 

சாகுபடி செய்ய உகந்த மாதங்கள்

ஜூன் – ஜூலை மற்றும் பிப்ரவரி – மார்ச் மாதங்கள்

நிலம் தயார் செய்தல்

முதலில் நிலத்தை நன்றாக உழுது, பின் வயலில் அரை அடிக்கு தண்ணீர் தேக்கி, தழைச்சத்தாக பசுந்தாள் பயிர்கள் சாகுபடிசெய்து அந்த செடியை மிதித்து மட்க செய்ய வேண்டும் .

பின்பு ஒரு ஏக்கருக்கு ,   மக்கிய இலைகள், ஆடு ,எருமை , பசுமாட்டு சாணம் போன்றவற்றுடன் தொழு உரம் ஒரு டன் இட்டு, ஆழ புழுதி உழவு செய்து பரம்படிக்கும் போது நிலதிருக்கு தேவையான அடியுரம் கிடைக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் நிலம் நல்ல முறையில் சாகுபடி செய்ய பண்பட மண் வளமுடன் இருக்கும் .

ஒரு ஏக்கருக்கு 30 முதல்  35 ஆயிரம் விதை கிழங்கு தேவை படும் . இதனை  வாங்கி, பாதுகாப்பாக ஈரமில்லாத, காற்று புகாத அறையில்வைத்து இருக்கவேண்டும் .பின்பு விதை கிழங்குகளில் முளை கட்டியவுடன்,  நிலத்தில் அரை அடிக்கு ஒரு விதை கிழங்கு என்று  நடவு செய்ய வேண்டும் .

இதில் ஊடுபயிர் சாகுபடி செய்து அதிக வருமானமும் பெற முடியும். இதில் முண்டு மாத பயிர்களான  வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்களை  பயிரிடலாம்.

குறைவான நீர்பாசன வசதி கொண்ட நிலங்களில் சொட்டு நீர் பாசனமுறை மூலம் பயிர் செய்யலாம் . இந்த வகை நிலங்களுக்கு கருணை ஒரு மிக சிறந்த ஒன்றாகும் . இது ஒன்பது மாதம் வயது கொண்ட பயிர் ஆகும் .

இது பயிரிட்ட நாளில்  இருந்து ஒரு மாதம் கழித்து முளைகுருத்து நிலத்தில் தெரியும். இப்படி முளைக்கும் பருவத்தில் குறைந்தது 5 முதல் 6 நாட்கள் ஒருமுறை மன்ணின தன்மை பொருத்து நீர் பாசனம் செய்வது நன்மை பயக்கும் . இப்படி மண்ணிண் ஈரப்பதம் காரணமாக களைகள் வரும் அதனை களை எடுத்து பராமரிக்கவேண்டும் .

கருணைக்கிழங்கு சாகுபடி முறைகள், பயன்கள் முதல்  குழம்பு செய்வது வரை

ஒரு மாதத்திற்கு ஒரு முறை இயற்கை உரம் ஐந்து மூட்டை, கடலை புண்ணாக்கு, மூன்று மூட்டை வேப்பம் புண்ணாக்கு  இடவேண்டும் .இதன் காரணமா பயிருக்கு தேவையான  சத்துக்கள் நிலத்தில் அதிகரிக்கும். மேலும்  மண்புழு உரம் கிடைத்தால் ஒவொவொரு செடியின் வேர்  பகுதியில்  30 கிராம் வீதம் கொடுத்தல் நன்கு வளர்ச்சியில் மாற்றம்  தெரியும் . இதன் மூலம் கிழங்கின் அளவும் எடையும் அதிகரிக்கும் .இவ்வாறு கொடுக்கும் பொழுது  வேர்பகுதில் மண்ணை வெட்டி ,பின்பு  மண் அணைக்க வேண்டும் .

9  மாதம்  கடந்த பின்பு பக்குவம் பார்த்து அறுவடை செய்யலாம். இது குறிப்பாக ஒரு ஏக்கருக்கு 6 முதல் 7டன் வரை கிடைக்கும் .

கருணைகிழங்கு செயற்கை முறையில் பயிரிட தொழு உரத்துடன், தழைச்சத்து 20 கிலோ, மணிச்சத்து 30 கிலோ மற்றும் சாம்பல்சத்து 60 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும். பின்னர் 45 செ.மீ இடைவெளியில் பார்சால் அமைக்க வேண்டும்.

பயன்கள் / நன்மைகள்

காரும் கருணையின் நன்மைகள்

ஜீரண மண்டல உறுப்புகளின்  நன்கு வேலை செய்து சீரண சக்தியைத் துரிதப்படுத்தும். மேலும் சீரண மண்டலத்தை அதிகமான பலத்தை கொடுக்க குடியாது. நமது உடலில் ஏற்படும் அதிக  வேப்பம் காரணமா ஏற்படும் உடல் உஷ்ண நோய்களில் இருந்து பாதுகாக்கும் வல்லமி கொண்டது . இதனால் நமது உடலில்  மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலை சரிசெய்யும்,  காய்ச்சல்  இருந்தாலும் குணமாகும்.

வெள்ளைப்பாடு என்ற பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோய்க்குக் கைகண்ட மருந்தாகும் .சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் மூல நோய்க்கு கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது.  மருந்தாகும் .

இதில்  புளிக்குழம்பு /வறுவல் /பொரியல் பல வகையில் உணவிருக்கு பயன் படுத்தலாம்.

 

கருணைகிழங்கு சாப்பிட்டால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது ?

இதனை இதற்கான பக்குவத்தில் சமைக்காவிட்டால் நாம் உணவில் சேர்த்து உண்ணும்போது நாக்கை அரிக்கும் உணர்வை கொடுக்கும் . எனவே சமைக்கும் பொழுது மிக சிறந்த கைபக்குவத்துடன் அனுபவத்துடனும்  சமைக்க வேண்டும் .

கருணைகிழங்கு நமைச்சல் அரிப்பு

கருணைகிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் அரிப்ப தடுக்க .நன்றாக வேக வைக்க வேண்டும் . பின்பு அதன் தோலை உரித்து, சிறிது புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்கிவிடும். மேலும் நாக்கில் சாப்பிடும் பொழுது ஏற்படும் அரிப்பும் இருக்காது.

மேலும் அரிசி கழுவிய நீரில்  வேக வைப்பதும் உண்டு. இதனாலும் காரல், நமைச்சல் மிகவும் அதிகம்  மட்டுப்படும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline