அரிய வகை கூந்த பனை மரம்

அரிய வகை கூந்த பனை மரம்

 

ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம்,

 

pannaiyar_panai

ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம், பண்டைய காலத்தில் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்து பெறப்பட்டன. இந்த தாழிப்பனை மரங்களில் ஒன்று செம்பரம்பாக்கம் அருகே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மரத்தில் இதுவரை இல்லாத வகையில் உலகத்திலேயே மிகப்பெரிய பூங்கொத்து பூத்துள்ளதும். அரிய வகையான தாழிப்பனை குறித்து, வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பனை குடும்பத்தில் மொத்தம் 21 வகையான மரங்கள் உள்ளன. இவற்றில், மிகவும் அரிதான மரம் தாழிப்பனை (கோரிபா அம்ப்ராக்ரி பெரா). சாதாரண பனை மரத்தைப் போல் இல்லாமல் இந்த மரத்தின் மட்டை நீளமாக இருக்கும். சங்க காலத்தில் தென்னிந்தியாவில் தாழிப்பனை மரம் பரவலாக காணப்பட்டது.

குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இந்த மரத்தை காண முடிந்தது. சாதாரண பனை மரம் வருடத்திற்கு ஒரு முறை காய் காய்க்கும். ஆனால், அரிய வகையான தாழிப்பனை வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டைய காலத்தில் சுவடிகள் எழுத இந்த மரத்தில் இருந்து பெறப்படும் ஓலைகளைத்தான் பயன்படுத்தினர்.

இம்மரத்தின் ஓலைகளை பக்குவப்படுத்தி, சுவடிகள் எழுதப்பட்டன. தாழிப்பனை மரம் நன்கு வளர்ந்து 65 முதல் 70 ஆண்டுகளில் பூ பூக்கும். ஒரு முறை பூத்த பின், அந்த மரம் காய்ந்து விடும். பண்டைய காலத்தில் இம்மரத்தில் பூக்கிறது என்பது தெரிந்தவுடன், பூவின் காம்பை வெட்டி அதிலிருந்து கள் இறக்குவர்.காரணம், வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூப்பதால், அனைத்து சத்துகளும் கள்ளில் கிடைக்கிறது.

மருத்துவ குணம் கொண்ட இந்த கள்ளை குடித்தால் தீராத நோய்கள் நீங்கும். காலப்போக்கில் தாழிப்பனை இனம் மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது. தற்போது, தென்னிந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இம்மரம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் தாழிப்பனை இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline