வேலி பருத்தி என்கிற உத்தாமணி pergularia daemia
கற்ப முறைகளில் கற்ப மூலிகைகள் வகையை சேர்ந்தது இந்த மூலிகைகளில் ஒன்று தான் இந்த வேலிப்பருத்தி .இதனை உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி என்றும் இரு வேறு பெயர்களில் அழைக்க படுகிறது .
இதன் வேர், கொடி, இலை, பால் என்று அனைத்தும் மருத்துவ குணங்களை கொணட்து . அகத்தியர் மாமுனி அவர்கள் எழுதிய மருத்துவ நூலான பரிபூரண நூலில் ஆரோக்கியத்திற்கு மிக அற்புதமான மருந்து என்றும் குறிப்பிட்டு உள்ளார் .
இந்த மூலிகை அதிகம் தமிழகத்தில் மிக எளிதாக வேலிகளில் படர்ந்து இருக்கும். இது ஒரு கொடி வகை தாவரம். இதன் இலையை கிள்ளி எடுத்தால் ,கிள்ளிய இடத்தில பால் வரும் .
pergularia daemia images