மூலிகைகள் பூண்டு

மூலிகைகள் பூண்டு

 

மூலிகைகள் பூண்டு

 

பூண்டை பற்றி 3200 பதிப்பிக்கபட்ட மருத்துவ ஆய்வுகள் நிகழ்த்தபட்டுள்ளன. சுருக்கமாக அவை சொல்லும் செய்தி “உலகில் எல்லாரும் தினம் 1 அல்லது 2 பூண்டுகள் சாப்பிட்டால் மாரடைப்பு மரணங்கள் 25% குறையும்” என்பதுதான். ஸ்டாடின் சாப்பிட்டால் 1% கூட மாரடைப்பு மரணம் குறையாது. ஆனால் சமைத்த பூண்டில் பலன் இல்லை. பச்சையாக அல்லது பொடியாக சாப்பிட்டால் தான் பலன். மஞ்சளின் மகிமை கியுர்கியுமினில் உள்ளதுபோல் பூண்டின் மகிமை அதில் உள்ள அலிசினில் உள்ளது.

பூண்டு ரத்த அழுத்தத்தை 10 புள்ளிகள வரை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்ரன. டயஸ்டாலிக், சிஸ்டாலிக் இரண்டு வித பிரஷர்களையும் பூண்டு குறைக்கிறது

பூண்டு டி.என்.ஏ ஆக்சைடைசேஷனால் பாதிப்படைவதை தடுக்கிறது

ஆஸ்பிரின் நம் ரத்தத்தை மெலிய செய்கிறது. இது ரத்தம் கட்டியாகி மாரடைப்பு வருவதை தடுக்கிறது. இதை செய்யகூடிய சக்தி படைத்தது பூன்டு.

பூண்டு ட்ரைகிளிசரைடு மற்றும் மொத்த கொலஸ்டிரால் இரண்டையும் குறைக்கும். எல்டிஎல், எச்டிஎல்லை குறைப்பது இல்லை.

இதயத்தில் உருவாகும் பிளேக் மாரடைப்புக்கு காரணம். ஆய்வு ஒன்றில் பூண்டு சாப்பிட்டவர்களுக்கு சபபிடாதவர்களை விட பிளேக் உருவாவது மும்மடங்கு குறைவு என கண்டுபிடித்தார்கள்.

இதயத்துக்கு ரத்தத்தை கொன்டு செல்லும் என்டொதெலியம் எனும் நரம்புகளின் லைனிங்கை பூண்டு விரிவாக்குகிறது. இதனால் இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்ட அளவு அதிகரிக்கும்.

ரஷ்யாவில் நிகழ்ந்த ஆய்வு ஒன்றில் பூண்டு மாரடைப்பை 40% குறைத்தது.

பூண்டின் கான்சர் எதிர்ப்பு தன்மையை பற்றி 600 ஆய்வுகள் நிகழ்த்தபட்டுள்ளன,

பூண்டு சாப்பிட்டவர்களுக்கு கலோன் கான்சர் வருவது 41% குறைகிறது

வயிற்று கான்சர் வருவதை பூண்டு 47% குறைக்கிறது

நுரையீரல் கான்சர் வருவதை 22% தடுக்கிறது

பிரெயின் கான்சர் வருவதை 34% தடுக்கிறது

விமான பயணத்தில் வரும் இன்ஃபெக்ஷனை தடுக்க பூண்டு உள்ள ஸ்ப்ரே பயன்படுத்தபடுகிறது

குளிர்காலத்தில் பூன்டு சபபிட்டால் சளிபிடிப்பது பாதியாக குரையும்

ஆய்வு ஒன்றில் சுகர் உள்ளவர்களுக்கு தினம் ஒரு பூண்டு கொடுக்கபட்டதில் சராசரியாக 138 இருந்த சுகர் ஒரு மாதத்தில் 113 ஆக குறைந்தது

பூண்டு தோலுக்கு செல்லும் ரத்த ஒட்டத்தை அதிகரித்து தோலை இளமையாக வைக்கிறது

இத்தனை நன்மையும் கிடைக்க சபபிடவேண்டியது தினம் ஒரே ஒரு பூண்டு மட்டுமே. ஆனால் பச்சையாக சாப்பிடணும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline