பனிபாறை ,பனிக்கட்டிகள் floating iceberg ஏன் நீரில் மிதக்கிறது ?
சிறிய அளவின் எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.ஒரு சிறிய இரும்புத் துண்டை நீரில் போட்டால் அது உடனே நீருக்குள் மூழ்கி விடும்.இதற்குக் காரணம் நீருக்குள் போட்டவுடன் அந்த இரும்புத் துண்டு அந்த அளவுக்கு ஏற்ற நீரை வெளியேற்றுகிறது.
நீரின் அடர்த்தி அந்த இரும்புத் துண்டுன் அடர்த்தியைவிடக் குறைவாக இருப்பதால்தான் இரும்பு துண்டு நீருக்குள் மூழ்கி விடுகிறது.
நீர் கட்டியில் , நீர் ஐஸ் கட்டியாகிறது .இப்படி கட்டியாகும் போது ஹைட்ரஜன் பாண்டிங் என்ற நிலை ஏற்படுகிறது.இதனால் ஐஸ் கட்டியின் எடைகுறைந்து விடுகிறது்.இது நீரில் விழுந்தவுடன் அது வெளியேற்றும் நீரின் அடர்த்தி ஐஸ் கட்டியின் அடர்த்தியைவிட அதிகமாகி விடுகிறது.
இதனால் தான் ஐஸ் கட்டி நீரில் மிதக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.