விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்!

போபால் விபத்தும் அக்னிஹோத்ர ஆராய்ச்சியும்

வேதம் கூறும் யக்ஞத்தை மேலை நாடுகள் விஞ்ஞான பூர்வமாக ஆர்வத்துடன் ஆராய ஆரம்பித்து வெகு காலமாயிற்று. அந்த ஆராய்ச்சி முடிவுகள் அவர்களை வியக்க வைத்தன. ஆனால் வெளி உலகிற்கு அதிகமாகத் தெரியாத இந்த ஆராய்ச்சி முடிவுகள் இந்தியாவில் 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி நடந்த கோர விபத்தினால் வெளி வந்து பிரபலமாகி அக்னிஹோத்ரத்தின் மகிமையை அதிகமாகப் பரப்பின.

யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து கசிந்த MIC விஷ வாயு அந்த டிசம்பர் இரவில் ஏராளமானோரை பலி வாங்கியது.

ஆனால் சோஹன்லால் குஷ்வாஹா என்பவர் தன் வீட்டில் வாந்தி எடுக்க ஆரம்பித்த போது அவர் மனைவி உடனடியாக அக்னி ஹோத்ரம் செய்யச் சொன்னார். சோஹன்லால் அக்னிஹோத்ரம் செய்யவே அவர் வாந்தி நின்றது. விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. இருபதே நிமிடங்களில் சுற்றுப்புறம் முழுவதும் விஷம் அகன்றது!HAW

எம்.எல்.ரதோர் என்பவர்  ஐந்து வருடங்களாக அக்னிஹோத்ரம் செய்து வருபவர். அவரும் அதே நள்ளிரவில் எழுந்த ஓலக்குரல்களையும் அழுகுரல்களையும் கேட்டு யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கசிந்த நச்சு வாயுவினால் ஏராளமானோர் இறந்ததைக் கேட்டார். உடனே த்ரயம்பக் யக்ஞத்தை ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம். அவர் வீட்டில் விஷப் புகை நுழையவில்லை; அனைத்து குடும்ப உறுப்பினர்களும் எந்த விதமான விஷ பாதிப்புமின்றி நலமுற இருந்தனர்.

 

வர்ஜீனியா ஆராய்ச்சி 

யூனியன் கார்பைடு நிறுவனம் இந்த ‘ஹோம எபெக்டைப்’ பற்றிக் கேள்விப்பட்டது. வெஸ்ட் வர்ஜீனியாவில் உள்ள அதன் தலைமையகத்தில் இதைப் பற்றி ஆராய உத்தரவிட்டதோடு லட்சக்கணக்கான டாலர்களையும் ஆராய்ச்சிக்காகத் தந்து உதவியது.

விஞ்ஞானிகள் அக்னிஹோத்ரத்தின் நல் விளைவுகளை ஆராய ஆரம்பித்தனர்.

ஏற்கனவே அக்னிஹோத்ரம் பற்றி விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்த பாரி ரத்னரின் முடிவுகளை இந்த விஞ்ஞானிகளும் உறுதிப் படுத்தினர்.

அக்னிஹோத்ர பயன்கள்

ரத்னர் அக்னிஹோத்ரத்தின் பயன்களாக பல விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார்:

ரணமாகி இருக்கும் வளி மண்டலத்தை அக்னிஹோத்ரம் சீராக்குகிறது.

வளிமண்டலத்திற்கு உறுதியான ஊட்டச்சத்தை அக்னிஹோத்ரம் அள்ளித் தருகிறது.

அக்னிஹோத்ரம் தாவரங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்குகிறது; பறவைகளைச் சந்தோஷமடையச் செய்கிறது.இயற்கையில் உள்ள ஆக்ஸிஜன் மறு சுழற்சிச் சுழலை லயத்துடன் இருக்கச் செய்ய உதவுகிறது. நீர் நிலைகளில் சூரிய ஒளியை நன்றாக உறிஞ்ச வழி வகை செய்கிறது.அக்னிஹோத்ரத்தால் நல்ல மருந்துகளைத் தயாரிக்க முடிகிறது.அக்னிஹோத்ரத்தால் நல்ல பயிர்களை விளைவிக்க முடிகிறது. அக்னிஹோத்ரம் விஷத்தை முறிக்கும் அருமருந்தாக இருக்கிறது!

1-More-than-1500-people-from-different-communities-and-various-walks-of-life-perform-Vedic-Agnihotram-in-Kozhikode-on-Sunday-ahead-of-KVRFs-Feb-13-19-Somayagam-680x453

வேதம் கூறும் விஞ்ஞானம்

 வேதம் கூறும் பயோ எனர்ஜி விஞ்ஞானம் பிரபஞ்சத்தில் கோடானுகோடி சூரிய மண்டலங்கள் உள்ளது என்றும் அதில் நமது சூரிய மண்டலத்தில் உள்ள பூமியைப் போல அரிதான ஒன்று இல்லை என்றும் கூறி மனிதனின் பிராண சக்தியை வளர்ப்பது யக்ஞங்களே ஆகும் என்று கூறுகிறது.

 

பல நாடுகளிலும் பரவி வரும் அக்னிஹோத்ரம்

ரத்னர் மேற்கு ஜெர்மனியில் ஆறு வருடங்களாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பல்வேறு வியாதிகளை அக்னிஹோத்ரம் குணமாக்க வல்லது என்பதை உறுதி செய்வதாகக் கூறினார்.

இஸ்ரேலில்

இஸ்ரேலில் ஹோமா தெராபி மிகவும் பிரபலமானது. நாஜெவ் பாலைவனத்தில் அராடிற்கு தெற்கே  60 மைல்கள் தொலைவில் உள்ள மொஷாவில் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் அக்னிஹோத்ர வகுப்புகள் நடைபெறுகின்றன.

டென்மார்க் தலை நகரில் அக்னிஹோத்ர மையம் ஒன்று உண்டு.

 

அமெரிக்காவில் 

பிலடெல்பியாவில் அக்னிஹோத்ர மகிமை பற்றி நாடகம் நிகழ்த்திய •ப்ரென் ரோஸன் சாயர் “எப்போதும் கோபமாய் இருப்பவர் மறுபடியும் சந்தோஷத்துடன் இருக்கிறார்” என அக்னிஹோத்ரத்தின் பயனையே தன் நாடகத் தலைப்பாக வைத்தார்.

 

அமெரிக்காவில் மேரிலாண்ட் அருகே உள்ள பால்டிமோரில் தினமும் அக்னிஹோத்ரம் நடைபெற்று வருகிறது. ஒய்ட் ஹவுஸிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தான் பால்டிமோர் என்பது குறிப்பிடத் தகுந்த விஷயம்!

வாஷிங்டன் அருகே வர்ஜினியாவில் அக்னிதேவன் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு ஆண்டிற்குப் பலமுறை யக்ஞங்கள் நடத்தப்படுகிறது. வர்ஜினியா சுற்றுப்புறச்சூழல் மாசு இல்லாத இடம் என்ற பெயரைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்தது!

இந்த ஆலயம் 1973 செப்டம்பர் 22ம் தேதி அமைக்கப்பட்டது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது அக்னிஹோத்ரம் நடைபெறுவதோடு இங்கு தொடர்ந்து பூரண மவுனம் அனுஷ்டிக்கப்படுகிறது!

சிலியில் 

இதே போல சிலியில் ஆன்டெஸ் மலையில் அக்னிதேவன் ஆலயம் இருக்கிறது.இங்கும் தினசரி அக்னிஹோத்ரம் நடைபெறுகிறது. இங்கு குடியிருப்போர் மன அழுத்தம் இல்லாமலும் எந்த வித வியாதிகளும் இல்லாமல் சந்தோஷத்துடன் இருப்பதாகக் கூறுவது வியப்பை ஏற்படுத்தும்!

பல விதமான வியாதிகளுடன் இருக்கும் மிருகங்கள் கூட இங்கு கொண்டு வரப்படுகின்றன; பூரண குணமடைகின்றன. இங்கு சிலகாலம் முன்னர் ஒரு பெரும் பனிப்புயல் அடித்தது. பலர் மாண்டனர். ஆனால் தினசரி அக்னிஹோத்ரம் செய்யும் குடும்பத்தில் யாருமே இறக்கவில்லை. அனைவரும் அதிசயித்தனர்.

போலந்தில் 

போலந்தில் உள்ள விஞ்ஞானிகள் ஒன்று கூடி அக்னிஹோத்ரத்தை ஆராய்ந்து அதன் பயன்களை நேரடியாகக் கண்டு 17 மையங்களைத் தொடங்கினர். தொடர்ந்து அக்னிஹோத்ரம் செய்து வருகின்றனர்!

ஜெர்மனியில் 

ஜெர்மனியில் அக்னிஹோத்ரம் பற்றி மிக விரிவான விஞ்ஞான ஆராய்ச்சி செய்யப்பட்டது.அமில மழையால் பாதிக்கப்பட்ட காடுகளில் அக்னிஹோத்ரத்தின் விளைவாக மீண்டும் பசுந்துளிர் தளிர்ப்பதைப் பார்த்து அவர்கள் பரவசமானார்கள்!

 

டாக்டர் மத்தியாஸ் பெர்பிஞ்சர் ஜெர்மனியில் செய்த ஆராய்ச்சிகள் மிக பிரபலமானவை அதிசயமானவை. அக்னிஹோத்ரம் செய்வதற்கு முன்னரும் செய்த பின்னரும் செய்தவரின் கையை கிர்லியன் போட்டோகிராபி முறைப்படி அவர் போட்டோ எடுத்து அதில் அக்னிஹோத்ரம் செய்து முடித்தவுடன் அவரது கையில் பிராண சக்தி கூடியுள்ளதைக் காண்பித்தார். சுற்றுப்புறச் சூழல் எப்படி ஆற்றல் வாய்ந்தவையாக அக்னிஹோத்திரத்தினால் மாறுகின்றன என்பதையும் அவர் விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தார்.

மந்திரம் மூலம் தீ 

காளிநாத் பந்த் சிதோர் என்பவர் தினசரி அக்னிஹோத்ரம் மற்றும் யக்ஞங்களைச் செய்பவர்.

அக்னிமீளே புரோஹிதம் என்ற மந்திரத்தை மும்முறை  சொன்னவுடன் ஹோமகுண்டத்தில் உள்ள சமித்துகளில் தீ தோன்றி பரவ வைத்தார். இது போல தீக்குச்சி இல்லாமல் மந்திரம் மூலமாகவே அவர் பலமுறை அக்னியைத் தோற்றுவித்துள்ளார்.

அக்னிஹோத்ர நாடு 

அக்னிஹோத்ரத்தின் பயனை வெளி நாட்டு விஞ்ஞானிகள் அனைவரும் கண்டு வியப்பதைக் கண்ட நமது அரசாங்கமும் நம் விஞ்ஞானிகளை இதை ஆராயப் பணித்துள்ளது. அவர்களும் இதன் பயனை உணர்ந்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

நாளுக்கு நாள் பல பயன்களைச் சுட்டிக் காட்டும் இந்த  ஆராய்ச்சிகள் நமது ரிஷிகளின் ஆற்றலையும் சமூக அக்கறையையும் லோக ஹிதத்தில் அவர்களுக்குள்ள ஆர்வத்தையும் பறைசாற்றுவதாக உள்ளன.

அக்னிஹோத்ரம் செய்ய சில நிமிடங்களே ஆகும்; சில ரூபாய்களே செலவாகும் என்பது இதன் எளிமையைக் குறிக்கிறது. நேரமும் செலவும் குறைவு. பலனோ மிகப் பெரிது!

அக்னிஹோத்ர நாடு நமதே என்னும் போது மனம் மிகவும் மகிழ்கிறதல்லவா!

Thanks to : tamilandvedas

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline