வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் பயன்கள்.

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!

 

1522092_663131777078607_1669407713_n

இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.

அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.

அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.

ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline