கோழிகளுக்கு நீர் மேலாண்மை விளக்கங்களும்
நாம் விவசாயம் செய்யும்பொழுது அதனுடன் சேர்த்து கால்நடைகள் , கோழிகள் வளர்ப்பதும் உண்டு . வெப்பமான நேரங்களில் எவ்வாறு அவற்றை பாதுகாப்பது என்று பார்ப்போம் .
கோழிகளின் முக்கிய உணவு :
தண்ணீர் தான்
எப்பொழுது எல்லாம் தண்ணீர் தேவை
- உணவு உண்டவுடன்
- அதிக வெயில் நேரத்தில் ஏற்படும் ,அதிக உடல் வெப்பத்தை குறைக்க
- முட்டை இட்டவுடன்
- இரவில் வெளிச்சம் குறையும் முன்
- காலை வெளிச்சம் வந்தவுடன்
எந்தவிதனமான குடிநீரை கோழிகளுக்கு கொடுக்கலாம்
- சுத்தமான நீரை கொடுக்க வேண்டும்
- வெயில் காலத்தில் மண் பத்திரத்தில் தண்ணீரை வைக்கலாம். இதன் மூலம் வெப்பத்தினால் ஏற்படும் வெப்பஅழற்சி நோயில் இருந்து கோழிகளை பாதுகாக்க முடியும் .
- சிறிது ஐஸ் கட்டிகள் கலந்தும் வைக்கலாம் .இதன் மூலம் உடலில் அதிகரிக்கும் வெப்பத்தின் அளவை குறைத்து கொலைகளில் உடல் நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது .
தண்ணீர் மூலம் பரவும் கோழிகளுக்காண நோய்கள்
- ரத்தக் கழிச்சல்,
- சால்மனெல்லோசிஸ்,
- கோவிபேசில்லோசிஸ்.
தண்ணீர் கொடுக்கும் பொழுது கவனிக்கவேண்டியவை
கீழ்கண்ட விடயங்களில் கவனமாக இருக்கவேண்டும் .
- பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்திய பாத்திரங்கள்
- பெயிண்ட் அடிக்கப்பட்ட பாத்திரங்கள்
- துரு பிடித்த இரும்பு
- சுகாதாரமற்ற பத்திரங்கள்
நன்றி
டாக்டர்.வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை