வறட்சியில் வளரும் மொச்சை சாகுபடி

மொச்சை சாகுபடி வறட்சியில் கை கொடுக்கும்

 

மொச்சை  வறட்சியான   நிலங்களில் விவசாயம் செய்ய மிகவும் உகந்த பயிர் ஆகும். இது Rajma Beans என்றும் , மொச்சை பயறு in english bean என்றும் அழைக்க படுகிறது . தமிழில் mochai kottai , mochiai payaru  என்ற பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறது .

 

வெள்ளை மொச்சை

மொச்சை வகைகள்

  • வெள்ளை மொச்சை
  • கருப்பு மொச்சை என்னும் மர மொச்சை

சாகுபடி செய்ய உகந்த பட்டம் , ஆடி பட்டம் மானாவாரியாக பயிர் செய்யலாம் .இதற்கான நிலத்தை ஆணி மாதம் உழவு செய்து விடவேண்டும் .இந்த நிலத்தில் 5 முதல் 7 உழவு வரை செய்து நிலத்தை தயார் செய்ய வேணும்.

கடைசி உழவாக மண்ணை நன்கு துளாக்கும்  டோடவடோர் கொண்டு உழவு செய்தால் மண் கட்டிகள் இல்லாமல் மிருதுவாக இருக்கும். இதன் மூலம் களைகள் கட்டுப்படும். மேலும் நோய் தாக்கும் பூசிகள் முட்டைகள் அழிக்க பட்டு விடும் .

இருந்தும் காய் புழு தாக்குதல் இறக்கும் நேரங்களில் கவனித்து நோய்கட்டுபட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் .

விதை நேர்த்தி :

விதைப்பு செய்ய விதைகளை  20  மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து விதைப்பு செய்யவேண்டும் . இதன் மூலம் விதியின் மேல் பகுதி நன்கு ஊறி மிருதுவாக இருக்கும்.அதனால் விதையின் முளைப்பு திறன் அதிகம் இருக்கும் .விதைத்த பின்பு முளைப்பு வெளிப்பட 10 நாட்கள் வரை ஆகும்.

நீர் பாசனம் :

இடை உழவு செய்வதன் மூலம் களைகளை கட்டுபடுத்த முடியும் .மாதம் ஒருமுறை நீர் பாசனம் செய்யலாம் அல்லது  மழை கிடைத்தால் மிகவும் சிறந்தது .நீர் பாசனம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

 

பூச்சி / நோய் கட்டுப்பாடு:

 

நன்கு படர்ந்த கொடியானது 75  நாட்களில் பூ வைக்க ஆரம்பிக்கும் .அந்த சமயம் கவனமாக பார்த்து வளர்சியுக்கி தெளிக்கவேண்டும். அதே போன்று காய் புழு தாக்குதல் கட்டுபடுத்தவும் இயற்கை பூச்சி விரட்டிகள் பயன் படுத்தவேண்டும் .

 

அறுவடை

விதைத்த 5 வது மாதம் முதல் தொடர்ந்து முன்று மாதங்கள்,அதாவது ஒரு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மார்கழி, தை, மாசி ஆகிய மூன்று மாதங்கள் ‘நெத்தை’ அறுவடை செய்யலாம் .

 

 

One Response

  1. Janagiraman 24/08/2022

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline