மேக்ரோ என்றால் என்ன? பகுதி -12

நமது க்ரூப்ல பாதாமுக்கு ஒரு Flag ship மரியாதை இருக்கு. ஏன்னா, பாதாம்ல நல்ல ஃபேட் இருக்கு, ப்ரோட்டீன் இருக்கு, மெக்னீசியம் இருக்கு, இரும்புச்சத்து இருக்கு, பொட்டாசியம் இருக்கு, கால்சியம் இருக்கு, நான் இல்லைன்னு சொல்லலை.

ஆனால், எடைக்குறைப்புக்கு எந்த அளவு பாதாம் உபயோகமா இருக்குன்னு ஒரு கண்ணோட்டம் விடுவது மிகவும் அவசியம்.

சிம்ப்பிள். என்னுடைய பாயிண்ட் ரெண்டே ரெண்டு தான். ஒன்னு அதிலிருக்கும் கார்ப். 100 கிராம் பாதாம்ல 22 கிராம் கார்ப் இருக்கு. என்ன தான் ஃபைபர் 12 கிராம் இருக்கு, ஆக நெட் கார்ப் 10 கிராம் தானே என்று எடுத்துக்கிட்டாலும், எத்தனை பேர் உடம்புக்கு நெட் கார்ப் கால்குலேஷன் ஒத்து வருதுன்னு சரியா கணிச்சு சொல்ல முடியாது.

அடுத்த பாயிண்ட் ஃபேட். 100 கிராம் பாதாம்ல 49 கிராம் ஃபேட் இருக்கு. அதாவது நீங்க ஒரு நாள் சாப்பிட வேண்டிய ஃபேட்டின் அளவில் 60 லிருந்து 70 சதவீதம் வரை பாதாமே எடுத்துக்கிடுது. இதைத் தவிர்த்து நீங்க சாப்பிடும் 3 முட்டைகள், 300 கிராம் அசைவம், அவகாடோ, ஆலிவ், ஹால்ஃப் அண்ட் ஹால்ஃப், முழுக்கொழுப்புத் தயிர், முழுக்கொழுப்பு பால், முழுக்கொழுப்பு சீஸ், முழுக்கொழுப்பு பனீர், பட்டர் டீ, க்ரீம் காபி, புல்லட் ப்ரூஃப் காபி, இரு நேரம் சமையலுக்கு உபயோகிக்கும் குறைந்த பட்ச அளவான 50 கிராம் வெண்ணெய் / நெய் / தேங்காய் எண்ணெய் / நல்லெண்ணெய் இதையெல்லாம் கணக்கில் எடுக்கும்போது மொத்த ஃபேட் கணக்கு எகிறும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

ஆகவே, ஒரு நேர உணவா நீங்க பாதாம் எடுக்கிறீங்களா, அப்படி எடுத்தும் உங்களுக்கு சீரான உடல் எடை இழப்பு இருக்கா, மகராஜனா தொடர்ந்து எடுங்க. எனக்கு ஆட்சேபணையே இல்லை.

ஆனா, க்ரூப்ல 100 பாதாம் சாப்பிட்டாகணும்னு சொல்லிட்டாங்களே என்பதனால் கஷ்டப்பட்டு வாய் வலிக்க வலிக்க சாப்பிட்டும், எடை குறைவு நடக்கவில்லையா, நீங்க பாதாமை ஒரு நேர உணவா எடுப்பதைப் பற்றி நிச்சயம் யோசிக்கணும்.

இப்படி நான் சொல்லிவிட்டேனே என்பதனால் பாதாமை நிறுத்தி விட்டு, உங்கள் மொத்த ப்ரோட்டீன் கணக்கு டேலியாகலைன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை. பாதாம் இல்லாமல் மீதி ப்ரோட்டீன் முட்டைகளிலிருந்தும் அசைவத்திலிருந்தும், பனீர், சீஸிலிருந்தும் கிடைத்தால் மிகவும் சந்தோஷம்.

இதை வாசிக்கும் வெஜிடேரியன் நண்பர்கள் தான் கவனமா இருக்கணும். பாதாமை நிறுத்தி விட்டால் மீதி ப்ரோட்டீன் சீஸிலிருந்தும், பனீரிலிருந்தும், தயிர், பால் இவற்றிலிருந்து தான் கிடைக்கணும். உங்களுக்கு தேவையான ப்ரோட்டீன் எப்பொழுதும் எடுக்க வேண்டும் என்பதில் கவனமா இருங்க. பாதாமும் எடுத்தால் தான் ப்ரோட்டீன் கணக்கு டேலியாகிறது என்றால், வேறெந்த வழிகளிலெல்லாம் ஓரளவு ஃபேட் இண்டேக்கை குறைக்கலாம் என்பது பற்றி யோசிக்கலாம். உதாரணமாக தேவைக்கு அதிகமாக பட்டர் விட்டு சமைப்பது, பட்டரை அப்படியே டீயாக குடிப்பது இது போன்று.

பாதாம் வேண்டாம், வால்நட் சாப்பிடுகிறேனே என்றால் அதன் கதை இன்னும் மோசம். 100 கிராம் வால்நட்டில் 65 கிராம் ஃபேட் இருக்கிறது.

எடைக்குறைப்பு தேவை இல்லையா, தினமும் பாதாமை நெய்யில் வதக்கி, 100 என்ன 150 கூட சாப்பிடலாம். மெயிண்ட்டனஸ் டயட்க்கு பாதாம் ஒரு நல்ல உணவு.

எடை குறைதல் ஆகவில்லை என்று கவலைப்படும் எல்லாரும் உங்கள் ஒரு நாளின் மொத்த ஃபேட் இன்புட் 70 கிராமிலிருந்து 100 கிராமுக்குள் இருக்கிறதா என்று கண்காணித்தல் நலம். அதற்கு மேல் கூடினால், தேவையான அளவு ஃபேட், டயட் மூலமாகவே கிடைத்து விடுவதால், பாடி ஃபேட் கரைவது கடினம்.

நினைவு படுத்திக்கொள்ளுங்கள் இது ஹை ஃபேட் டயட் தான். ஆனால், அந்த “ஹை ஃபேட்” டயட் மூலமாக மட்டுமே கிடைக்க வேண்டும் என்பது தவறான புரிதல். இந்த டயட்டில் மொத்தமாக எரிக்கப்படும் ஃபேட் தான் கணக்கு. அது தான் ஹை ஃபேட். மொத்தமாக எரிக்கப்படும் ஃபேட் = டயட் மூலமாக கிடைக்கும் ஃபேட் + உடம்பிலிருந்து எரிக்கப்படும் பாடி ஃபேட்.

வாழ்க (அளவான) கொழுப்புடன்!

 

நன்றி :  எல்லா புகழும்  ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமதிருக்கு மட்டுமே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline