மழை நீர் சேகரிப்பு ..

 

(1) குடிநீர் :: மேல்தளம் மொட்டை மாடி என்பர் தொடர் மழை பொழியும் பொது சுத்தமாமாக பெருக்கி பிறகு மழைநீர் சுத்தமாக இருக்கிறதா என்று கவனித்து தொடர் மழையில் மழைநீர் வெளியேற்றும் குழாய் வழியாக கீழே இருக்கும் தரை (sump) தொட்டியில் நிரப்பி இரண்டு அல்லது மூன்று நாள் கழித்து சுத்தமாக தெளிந்தப் பின் மேல் (Sintex or Aquatech) தொட்டியில் நிரப்பி காற்றுப் புகாவண்ணம் பாதுகாக்க வென்றும், இம்மழைநீரை சுடவைத்து ஆறியபின் வடிகட்டி ஆண்டுமுழுதும் குடிக்கலாம்.

எங்களிடம் இருப்பதும் Aquatech 3 Nos 760 lts (3 x 750 = 2215 liters) ஆண்டு முழுவதும் குடிப்பது மழைநீரே. வெளியில் வாங்கும் குடிநீரைவிட சுவையாகவும் சுத்தமாகவும் இருக்கும். சுமார் 15 வருடங்களாவே மழைநீர்தான் குடிநீர்.

(2) காற்றுப் புகாமல் இருக்க .Sintex or Aquatech தொட்டிகளில் மேல்மூடியை மூடும் முன் பெரிய பாலிதீன் பைகளையேகூட இரண்டு அல்லது மூன்று முழுவதும் மூடும்படி வைத்து அதன் மேல், மேல்மூடியை வைத்து சிறிது பாரம் வைக்கவேண்டும். அப்போதுதான் காற்றுப்புக வழி இருக்காது.காற்றுப் புகுந்தால் சிறிது மீன் வாசனை வரும். மதம் ஒருமுறையேனும் திறந்து சரி செய்யவேண்டும். மழைநீரில் எந்த மருந்தும் கலக்கக்கூடாது. கலந்தால் கெட்டுவிடும்.

அதிகநாள் கவனிக்காமல் இருந்தால் பாலிதீன் பையின் சுற்றுவட்டத்தில் சிறு பூசிகள் தாங்கும். அழித்துவிடவேண்டும். மழை நீர் தூசியோ, கலங்களோ இருந்தால் தெளியும்வரை தரைத் தொட்டியில் இருக்க வேண்டும். ஆதலால்தான் மேல்தளத்தை மழைபொழியும் போதே சுத்தப்படுத்தவேண்டும். நான் மழை அங்கியை போட்டுகொண்டோ அல்லது குடையை பிடித்துகொண்டோ பலமுறை சுத்தம் செய்வேன். மேல் மாடியில் மழைநீர் அழுக்கு மழைநீராக இருந்தால் வெளியேறிவிடும். அதன் பிறகே கீழே இறக்குவேன். மேல்தளம் பாசிபிடித்து இருந்தாலும் கெடுதல் இல்லை, சேகரிக்கும் நீரில் பாசியும் தூசியும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு செய்தால் ஆண்டுமுழுவதும் காசில்லா, மாசில்லா சுத்தமான, சுவையான குடிநீர் கிடைக்கும். இரவில் மழைநீர் சேகரித்த தொட்டியை திருந்தால் கொசு உள்ளே சென்றுவிடும், அதிகநேரம் திருந்திருந்தால் தூசி உள்ளே படிந்துவிடும்.

One Response

  1. அழகிரி 17/04/2014

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline