தமிழில் பழமொழிகள் பலவிதம் அதில் சில இங்கே
தமிழ் பழமொழிகள் (tamil proverbs) கூறும் கருத்துக்களும் , பொருள் விளக்கங்களும் மிகவும் இனிக்கும் .மேலும் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை மிகவும் எளிய முறையில் விளங்கும் .அதில் இருக்கும் உண்மையான கருத்துக்கள் பலவிதமான உண்மைகளை எடுத்துரைக்கும்தன்மை கொண்டவை .அப்படியான சில பழமொழிகளை பகிர்ந்து கொள்கிறேன் .உங்களுக்கும் மனதில் விளங்கும் பலமோகிலான காரணத்தையும் விளக்கத்தையும் பகிரவும் .இதனால் பலருக்கும் இந்த பழமொழிகள் சொல்லும், பொருளும் இனிது விளங்கும்
proverbs in tamil – பழமொழிகள்
- பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
- பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
- எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
- நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.
- பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
- இஞ்சி இலாபம் மஞ்சளில்.
- அகல உழுகிறதை விட ஆழ உழு.
- எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
- ஏரி நிறைந்தால் கரை கசியும்.
- சுண்டைக்காய் காற்பணம், சுமை கூலி முக்காற்பணம்.
- செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
- சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.
- நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
- அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
- கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.
- கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.
- இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
- உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
- ஏருழுகிறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்.
- கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
இறைக்க ஊறும் மணற்கேணி ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்