”எங்கள் வீட்டில் மழை நீரை சேகரித்து, குடிநீராகப் பயன்படுத்த விரும்புகிறோம். எத்தனை ஆண்டுகளுக்கு அந்த நீரைப் பயன்படுத்தலாம்?”
”மழை நீர் மட்டும்தான் மனிதனுக்கான நீர். என்னதான், விலை உயர்ந்த ‘மினரல் வாட்ட’ராக இருந்தாலும், அது மழை நீருக்கு ஈடாகாது. சுற்றுச்சூழல் கெட்டுப்போயுள்ள இந்தக் காலத்தில், மழை நீரை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. எனவே, சில நுட்பங்களைப் பின்பற்றி வடிகட்டிப் பயன்படுத்தலாம்.
வழக்கமாக மொட்டை மாடியில் இருந்து மழை நீர் கீழே செல்ல குழாய் இருக்கும். அந்தக் குழாய் வரும் பகுதியில் உள்ள ஜன்னலின் மேற்புறத்தில் மழை மற்றும் வெயிலுக்காக வைக்கப்படும் தடுப்பின் (சன் ஃஷேட்) மீது, குழாயுடன் கூடிய சிறிய பிளாஸ்டிக் வடிதொட்டியை வைத்துவிட வேண்டும். இந்த வடிதொட்டி, மொட்டைமாடியின் பரப்பளவில் 5 சதவிகிதம் அளவு கொண்டதாக இருக்க வேண்டும். ஜன்னலின் மேற்புரத் தடுப்பு, இந்தத் தொட்டியைத் தாங்கும் அளவுக்கு இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம்!
தொட்டியின் அடியில் கோழி வலையைப் போட்டு அதன் மீது இரண்டு அடுக்காக கொசு வலையைப் பரப்ப வேண்டும். அதன் மீது மூங்கில், தேங்காய் சிரட்டை ஆகியவற்றை எரித்து, கிடைத்த கரியைப் போட்டு, அவல் ஜல்லியைப் பரப்ப வேண்டும். அதன் மீது, இரண்டு அடுக்குக் கொசுவலையைப் பரப்பி மூன்று அங்குல உயரத்துக்கு நன்றாக சலித்த மணலை நிரவினால், மழை நீர் வடிகட்டி தயார். இத்தொட்டியின் கீழ் உள்ள குழாயில் வெளி வரும் சுத்திகரிக்கப்பட்ட மழை நீரைச் சேகரித்து வைத்துப் பயன்படுத்தலாம்.
மழை நீர் சேகரிக்கும்மழை பெய்யும் மழை அளவு பொறுத்து வாங்க வேண்டும் . ‘பிளாஸ்டிக் டேங்க்’ கருப்பு நிறம் எனில், அதில் உள்ள நீரை அதிகபட்சம் ஓர் ஆண்டு வரைதான் பயன்படுத்த வேண்டும். காரணம், கருப்பு நிறம், வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டே இருக்கும். அதனால், அதில் உள்ள மழை நீரின் தன்மையும் மாறி விடும். வெள்ளை நிற டேங்க்காக இருந்தால், 8 ஆண்டுகள் வரைகூட கெட்டுப் போகாது.
மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள டேங்க் போதுமானது. ஒரு முறை இந்த அமைப்பை நிறுவிவிட்டால், 100 ஆண்டுகளுக்குப் பலன் கொடுக்கும். ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட வெள்ளை நிற டேங்க் அமைக்க, 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.”
மழைமானி பயன் படுத்தி மழையின் அளவை கணீடு செய்து வருவது மிகவும் பயன் தரும். மழைமானி in english Pluviometer என்று அழைக்க படுகிறது
”திருநெல்வேலியில, ‘செப்பறை வளபூமி பசுமை உலகம்’னு அமைப்பு ஒண்ணு, இருக்கு. இவங்க, மரம் வளர்க்கறதுக்கான பயிற்சியை தமிழ்நாடு முழுக்க கொடுத்துட்டு இருக்காங்க. விதை போட்டாலோ, நாத்து உருவாக்கி நட்டாலோ அது மரமாகுறதுக்கு ரொம்ப நாள் ஆகும்ல. இவங்க மரத்தோட கிளையை வெட்டி வெச்சு, அதை தொண்ணூறு நாள்ல முளைக்க வெக்கிற தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுக்கறாங்க. ஆலமரம், அத்தி, வாகை மரம், உசிலை, பூவரசு மாதிரியான மரங்களை இப்படி வளர்க்க முடியுமாம்!’