சீமைக்கருவேலம் மரம்-seemai-karuvelam-maram

இந்த வேலிகாத்தான்  மரத்தால் பயன்கள் உண்டா ?

உண்டு நிறையவே உண்டு . சீமைக்கருவேலம் மரம் என்னும் உயிர் வெளி மரம்.இதனை வேலிகாத்தான் என்றும் அழைப்பது உண்டு .

வேலிகாத்தான் ஏன் இந்த பெயர் என்றல் இது விவசாய நிலைகளுக்கு மிக பொருத்தமான உயிர் வேலி .மிக சிறந்த விறகு. இன்றும் பல பெரிய விறகு கொண்டு சமைக்கும் சமையல் கூடங்களில் இது தான் எரிபொருளாக பயன் படுத்த படுகிறது .இன்னும் பல வீடுகளில் இந்த விறகு தான் பிரதான எரிபொருள்.இன்று கிடைக்கும் அடுப்புகரி பெருபாலும் இந்த சீமை கருவேல மரம் தான் மூலதனம் .

அப்படி என்ன பெருசா பயன்படுது

வேலிகாத்தான் ஏன் இந்த பெயர் என்றல் இது விவசாய நிலைகளுக்கு மிக பொருத்தமான உயிர் வேலி .
மிக சிறந்த விறகு. இன்றும் பல பெரிய விறகு கொண்டு சமைக்கும் சமையல் கூடங்களில் இது தான் எரிபொருளாக பயன் படுத்த படுகிறது .இன்னும் பல வீடுகளில் இந்த விறகு தான் பிரதான எரிபொருள்.

இன்று கிடைக்கும் அடுப்புகரி பெருபாலும் இந்த சீமை கருவேல மரம் தான் மூலதனம் .

எதுவும் வளர்க்க இயலாத நிலங்களில் கூட இந்த மரம் செழித்து வளரும்.இன்றும் பலர் வறண்ட காடுகளில் இந்த மரம் வளர்த்து வருடம் ஒரு முறை ஒரு கணிசமான வருமானம் பெறுகின்றனர்.இதன் கட்டைகரி இன்று ஒரு டன் ( 1000 kg ) 10000 மேல் விலை போகிறது. வேறு ஏதேனும் இந்த விலை க்கு விலை போகிறதா என்று தெரிய வில்லை .

இந்த மரமும் மற்ற மரங்களை போலவே கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகிறது .இந்த மரங்களை பயன் படுத்தியும் மின்சாரம் தயாரிக்கலாம். இதுவும் மற்ற மரங்களை விடவும் நன்றாக எரியும் .

 

semmai karuvam maram

பாலைவன பிரதேசத்து பசுமை மாற்றிகள்

பல பாலைவன  நாடுகளில் இது தான் பாலைவன நிலங்களையும் சோலையாக பூத்து குலுங்குகிறது.

கால்நடை வளர்ப்பில் பயன்

ஆடுவளர்ப்பு , மாடுவளர்ப்பு மேய்ச்சல் முறையில் இருக்கும் பொழுது இந்த வகை சீமைகருவேல மரங்கள் நல்ல நிழல் மற்றும் உணவு ஆகும் . விரைவில் வளர கூடியதும் ஆகும்.இதுலயும் பூ பிஞ்சு ,காய் என்று மற்ற மரங்களை போலவே உள்ளது . இதிலும் தேன் , மற்ற பூச்சிகளுக்கு தேவையான உணவும் கிடக்கிறது.

நாட்டு கோழி முதல் நாட்டு மாடு வரை இது சிறந்த உணவாக பயன் படுகிறது . மேலும் வராங்க பகுதிகளில் அவைகளுக்கு நல்ல நிழல் தரும் மரமாகவும் உள்ளது. ஏன் மனிதர்களும் பல இடங்களில் இளைபாருவதும் உண்டு.

தமிழகத்தில் பல சேவல் சண்டைகள் ( seval sandai )  பல இடங்களில் மறைமுகமாக இந்த சீமைகருவேல காடுகளில் தானே நடந்தது.

இந்த மரத்தை கொண்டு செய்யும் மர சாமான்கள் மிகவும் வலிமையானவை.

சிறிது பார்வையை மாற்றி பார்ப்பதும் தவறேதும் இல்லையே .

நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline