10,000 ஆண்டுகளில் நம் டி.என்.ஏ எனப்படும் மரபணு மாறியிருக்கும்…அதனால் நான் ஏன் இன்னும் 10,000 ஆன்டுக்கு முந்தைய உனவையே சாப்பிடவேண்டும் என்றால்
மரபணு மாற்றம் என்பது எத்தனை பெரிய விசயம் என்பது நமக்கு புரிபடவில்லை என பொருள்.
உதாரணமாக எஸ்கிமோ, வெள்ளையர், கருப்பர், மங்கோலியர், இந்தியர்….இவர்களிடையே நீலக்கண், சுருட்டை முடி, கட்டை குரல், கூட்டை உயரம், மஞ்சள் நிறம் இப்படி பல வேறுபாடுகள் உண்டு.
ஆனால் உலகில் உள்ள எந்த இரு மனிதர்களையும் எடுத்தால் அவர்களுக்கிடையே ஜீன் வித்தியாசம் 0.1% தாண்டாது. அதாவது 99.9% நம் அனைவர் ஜீன்களும் ஒரே மாதிரிதான் இருக்கும்.
அதே சிம்பன்சிக்கும் நமக்கும் ஜீன் வித்தியாசம் 2% மட்டுமே…அதாவது சிம்பன்சி 98% மனிதன், அல்லது மனிதன் என்பவன் 98% சிம்பன்ஸி
நம் ஜீன் 2% மாறினால் நாம் சிம்பன்ஸி மாதிரி அடையாளமே தெரியாத இன்னொரு உயிரினம் ஆகிவிடுவோம்.
ஆக மரபணு மாறிவிட்டது என அத்தனை எளிதில் சொல்லி எக்ஸ்கேப் ஆகமுடியாது..உங்கள் மரபணுவை பொறுத்தவரை நீங்கள் சைபிரிய குகையில் கையில் கல் ஈட்டியுடன் அமர்ந்திருக்கும் காட்டுவாசிதான்…உங்கள் உடல் அடுத்துவரவிருக்கும் குளிர்கால பஞ்சத்தை சமாளிக்க உங்கள் தொப்பையில் கொழுப்பை எனெர்ஜியாக சேர்த்து வைத்துகொன்டிருக்கிறது…நீங்கள் கணிணியுகத்துக்கு வந்ததாக நினைத்துகொன்டாலும் மரபணு இன்னமும் கற்காலத்தில் தான் இருக்கிறது. அது கணிணியுகத்துக்கு வந்து சேர சிலகோடி ஆண்டுகள் ஆகும்
அதனால் அது இருக்கும் காலகட்ட உனவையும், வாழ்க்கைமுறையையும் (விருந்து/விரதம்) பின்பற்றினால் தான் அது ஆரோக்கியமாக இருக்கும்.
நன்றி : எல்லா புகழும் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமதிருக்கு மட்டுமே