மதிப்பூட்டிய பாதாம்பால் விற்பனை

மதிப்பூட்டிய பாதாம்பால் விற்பனை

பாலை எளிய முறையில் மதிப்புக்கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல்
வைத்திருக்கலாம். இதிலிருந்து பாதாம் பால் தயாரிக்கலாம். பாதாம் பாலில் பத்து
வகையான நறுமண பால் தயாரிக்கலாம்.
1. பாதாம் பால்,
2. பிஸ்தா மில்க்,
3. ரோஸ் மில்க்,
4. ஸ்ட்ராபெரி மில்க்,
5. ஏலக்காய் மில்க்,
6. வென்னிலா மில்க்,
7. பைன் ஆப்பிள் மில்க்,
8. ஜிகர்தண்டா மில்க்,
9. சாக்லேட் மில்க்,
10. காபி மில்க் தயாரித்து கடையில் விற்பனை செய்வதன் மூலம் குறைந்த
முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே அதிக லாபம் சம்பாதிக்கலாம்.
பாலை கெடாமல் வைத்திருக்க எந்தவிதமான ரசாயன கெமிக்கல் மற்றும் லிக்விட்
பிரிசர்வேட்டிவ் கிளாஸ்-2, மற்ற கெமிக்கல் எதுவும் கலக்காமல் பாலை எளிய
முறையில் மதிப்பு கூட்டும் முயற்சியால் பாலில் பாதாம்பால் தயாரித்து
வீட்டிலிருந்தே கடைக்கு விற்பனை செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.
ஒரு பாட்டில் பாதாம்பால் தயாரிக்க பாட்டில், பால், சர்க்கரை, எசன்ஸ், மூடி,
லேபிள் அனைத்து மூலப்பொருட்களும் சேர்த்து ஒரு பாட்டிலுக்கு ரூ.5 அடக்கவிலை
ஆகும். நாம் கடைக்கு ஒரு பாட்டில் ரூ.10 விற்பனை செய்ய வேண்டும். பாட்டிலின்
மேல் லேபிளில் எம்.ஆர்.பி. ரூ.15 அச்சிட்டு கடைக்கு விற்பனை செய்ய வேண்டும்.
கடைக் காரர் ஒரு பாட்டில் ரூ.13 விற்பனை செய்து ரூ.3 லாபம் அடைவார். தினமும்
100 பாதாம்பால் பாட்டில் விற்பனை செய்தால், மாதம் ரூ.1000 லாபம்
சம்பாதிக்கலாம்.
இதே முறையில் பாக்கெட் பாலிலிருந்து மற்றும் பசுமாடு, எருமை மாடு
வைத்திருப்பவர்களும் பாதாம்பால் தயாரிக்கலாம். 1 லிட்டர் பாலில் வெண்ணெய்
எடுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி 50கிராம் வெண்ணெய் எடுக்கலாம். அதே
பாலில் பாதாம்பால் தயாரித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். 5 லிட்டர் பாலில்
கால் கிலோ வெண்ணெய் நமக்கு கிடைக்கும். வெண்ணெயின் மதிப்பு ரூ.60. வெண்ணெய்
எடுத்த பாலில் பாதாம்பால் தயாரித்தால் பாலின் விலை ஒரு லிட்டர் ரூ.10 அடக்க
விலை ஆகும்.
இந்த வகையான பாதாம்பால் எளிய முறையில் இயந்திரத்தின் உதவி இல்லாமல் கையால்
சோடா மூடி போடும் சிறிய இயந்திரத்தை பயன்படுத்தி குறைந்த முதலீட்டில்
தயாரிக்கலாம். சோடா மூடி இயந்திரத்தின் விலை ரூ.2000. வீட்டில் உள்ளவர்கள்
மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1000 பாட்டில் தயாரிக்கலாம்.
மற்றொரு முறை முழுவதும் இயந்திரத்தை பயன்படுத்தி பாதாம்பால் தயாரிக்கலாம்.
இதில் இரண்டு வகைகள் உள்ளது.
1. வெர்டிகல் டைப் – இதன் மூலம் ஒரு நாளைக்கு 2000 பாதாம்பால் பாட்டில்
தயாரிக்கலாம். வேலை ஆட்கள் 6 பேர் தேவைப்படும். இதன் விலை 2 லட்சம் முதலீடு
செய்ய வேண்டும். 2. ஹரிஜான்டல் டைப் – இதன் இயந்திரத்தின் விலை 4 லட்சம். இதன்
மூலம் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பாதாம் பாட்டில் தயாரிக்கலாம். வேலையாட்கள் 10
பேர் தேவைப்படும். இதன் இரண்டுக்கும் இடம் 1000 சதுர அடி தேவைப்படும்.
தொடர்புக்கு: பி.சந்திரமோகன், 94892 56025.
-கே.சத்தியபிரபா, உடுமலைப்பேட்டை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline