பெண்கள் இளமையாக தோன்ற பல வகையான வழிகள் உள்ளன. மிகுந்த செலவு செய்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. முக அழகும், உடல் அழகும் ஒப்பனைகள் மூலம் பெற்றுவிட முடியாது. அதற்க்கு நம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப்பொருட்கள் மூலமே அடையலாம். சில பெண்களை கண்கூடாக பார்த்து 10,15 வயது இளைமயாக எவ்வாறு தோன்றுகிறார்கள் என்று அதிசயப்பட்டிருக்கலாம். இந்த அற்புத நிவாரணியை வழங்கிய பெண்மணி சொல்கிறார் அவருடைய பார்வை -3ல் இருந்து -1ஆக குறைந்து, சருமம் மிருதுவாகவும், உடல் கட்டாகவும், தன்னுடைய முடி அடர்த்தியாக விட்டதாகவும், முடி உதிர்தல் முற்றிலும் நின்று விட்டதாக சொல்கிறார்.
அந்த அதிசய, அற்புத மருந்து செய்ய என்ன தேவை என்று பார்ப்போம்:
100 மில்லி பிளாக்ஸ்சீட் எண்ணை (Flax Seed Oul)
2 நடுத்தர எலுமிச்சை பழம்
1 பெரிய பூண்டு
0.5 கிலோ தேன்
சுத்தம் செய்த பூண்டு, 1 எலுமிச்சை தோலுடன் முழுதாகவும், ஒரு எலுமிச்சை பழத்தின் ஜூஸும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் சேர்த்து கலக்கி, மேலாக பிளாக்ஸ் சீட் எண்ணையை ஊற்றி நன்றாக கிளறவும். ஒரு கண்ணாடி ஜாடியில் இட்டு கெட்டியாக மூடி பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். தினமும் ஒரு டேபிள்ஸபூன் சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிடவும்.
இந்த மருந்து எவ்வாறு உடலை இளமையாக்குகின்றது ?
பிளாக்ஸ்சீட் எண்ணை இயற்கையான தாவர ஹார்மோன்களை கொண்டது. இதில் லினொலிக் (ஒமேகா 3), ஓலிக் ஆசிட் (ஒமேகா 9), பால்மிட்டிக் கொழுப்பு எண்ணை ஆகியவற்றைக் கொண்டது. இதில் பாதிக்கும் மேலாக அடங்கியுள்ள கொழுப்பு ஆல்பாலினொலிக் ஆசிட்டை (ஒமேகா 3) கொண்டது. இது மீனில் காணப்படும் ஒமேகா 3யைவிட இரண்டுமடங்கு கூடுதலாகாகவும், தாவரவகைகளில் ஒமேகா அதிகமாகவும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதும் இந்த பிளாக்ஸ்சீட் எண்ணை. இவை எலுமிச்சையுடன் சேரும்பொழுது ஈரலையும், பித்தநாளங்களையும் சுத்தமாக்குகின்றது. நம்முடைய ஈரல் இளமையை காக்க முக்கிய பங்காற்றுகின்றது.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஒரு அற்புத ஆன்ட்ஆக்ஸிடன்ட்டாக செயலாற்றுகின்றது. அத்துடன் பூண்டுடன் சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இரத்தநாளங்களை சுத்தமாக்குகின்றது. தேன் உடலுக்கு ஊட்டமளித்து, உடலின் உறுப்புகளை சுத்தமாக்கி இளமையாக்குகின்றது.
இந்த தளத்தினை சில வாரங்களுக்கு முன்தான் முதன்முதலாக கவனிக்க நேர்ந்தது. மிக மிக அருமை. அனைத்து தரப்பினருக்கும் உபயோகமான தகவல்களை வழங்கி வருகிறீர்கள். நான் பார்த்து படித்த தளங்களிலே மிகவும் சிறப்பானது சிலதுதான் அதில் உங்களுடையதும் ஒன்று.
பார்த்த முதல் நாளிலேயே, அனைத்து பதிவுகளையும் (விவசாய செய்முறை தவிர்த்து) படித்து முடித்துவிட்டேன். தினமும் வந்து பார்த்து, புதிய தகவல்களையும் படித்துக்கொண்டிருக்கிறேன்.
பலரின் சார்பாக கோடானு கோடி நன்றிகள். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
இந்த பதிவு சம்மந்தப்பட்ட கேள்விகள்
1. இந்த சஞ்சீவினியை பெண்கள் மட்டும் தான் உபயோகப்படுத்த வேண்டுமா
2. பிளாக்ஸ்சீட் எண்ணையைப்பற்றி இதுவரை நான் கேள்விப்பட்டது கிடையாது. எங்கு கிடைக்கும். நான் திருச்சியில் வசிக்கிறேன்.
3. 1 பெரிய பூண்டு என்பது எண்ணிக்கையை குறிக்கிறது என்பது சரியா. (சுமார் 10-15 பற்கள் உள்ள 1 பூண்டு)
உங்கள் பதிலை எதிர்பார்த்து
ஸ்ரீநிவாசன்.
வணக்கம் ,
பலதகவல்கள் நான் படித்ததில் இருந்து பகிர்வது உண்டு. விவசாயம் சார்தவை நிச்சயம் செயல் முறையில் பார்த்து பதிவது உண்டு .மற்ற அனைத்தும் பயன் படும் என்று எண்ணி பகிர்வது உண்டு .
Felx Seeds வட மாநிலங்களில் கிடைக்குறது .விலை சற்று அதிகம் .