புளியமரம் ஒரு விவசாயின் இயற்கை உர ஆலை – மறந்துபோன உண்மை:
நம் அனைவருக்கும் புளியமரம் ஒரு பணப்பயிராகவும், ரோட்டோர மரமாகவும்தான் நான் இதுவரை பார்த்தேன்.
PermaCulture (Permanent Agriculture- நிரந்தர வேளாண்மை ) பற்றி படிக்க ஆர்வம் ஏற்ப்பட்டதால், பல தொகுப்புகளையும், இதில் நிலத்தில் தன்மையையும், வளத்தையும் அதிகரிக்கும் செடி, மரங்களையும் பற்றி பல கட்டுரைகளைப் படித்தேன்.
அதிலிருந்துதான், புளியமரம் ஒரு நல்ல நைட்ரஜனை நிலை நிருத்தும் மரம் என்று தெரிய வந்தது. உங்கள் தோட்டத்தில், புளியமரம் மற்ற மரங்களுக்கு இடையூராக இருந்தால், வெட்ட வேண்டாம்.
வருடம் ஒருமுறை கிளைகளை வெட்டிவிடவும் (இலைகள் இல்லாததால், மரம் தனது வேர்களை மண்ணிற்குள் நாம் கிளையை வெட்டியா அளவு துறக்கிறது).
இதனால், இது வேர்களில் சேர்த்து உள்ள சத்தை மண்ணுக்குக் கொடுக்கிறது.
நன்றி.சிவா