பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கு ஏற்படும் முக்கிய நோய்களையும் அதற்க்கான இயற்க்கை மருத்துவ தீர்வு
ஆடு மாடுகளுக்கு சரியான தீவனம் கிடைக்காமல் இருக்கும் போதும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் போதும் கழிசல் நோய் அதிகமாக ஏற்படுகிறது.
கழிசல் நோய்க்கு தீர்வு:
இந்த கழிசல் நோய்க்கு முக்கிய மருந்து துவர்ப்பான பொருள்களில் தான் உள்ளது அதனால் மாதுளம் பிஞ்சு,சப்போட்டா பிஞ்சு, அத்தி,நாவல்,கருவேப்பிலை,ஜாதிக் காய் தோடு, போன்ற எதாவது ஒன்றை 3 நாளைக்கு தொடர்ச்சியாக குடுத்து வந்தால் சரியாகிவிடும்..
வாய்ப்புண்:
ஆடு மற்றும் மாடுகளுக்கு வாய்ப்புண் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று செலவு செய்யாமல் நமது நிலத்தில் கிடைக்கும் மணதக்காளிக் கீரையை சாப்பிட கொடுத்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
உடலில் புண்:
ஆடு மற்றும் மாடுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதாலும் இடறி கிழே விழுவதாலும் உடலில் காயம் ஏற்படும். இதற்க்கு அம்மன் பச்சரிசி செடியின் தண்டை எடுத்து கசக்கினால் வரும் பாலை புண் மேல் தடவி விட்டால் புண் விரைவாக குணம் அடையும்..
நஞ்சுக்கொடி:
ஆடு மற்றும் மாடு கன்று போட்ட பின்பு நஞ்சுக்கொடி விழ அதிக நேரம் எடுத்துக்கொண்டால் இருபது நடுத்தர வெண்டைக்காய்,ஒரு கைப்பிடி எள்ளு, ஒரு கைப்பிடி பனக்கற்கண்டு ஆகியவை எடுத்து சாப்பிட கொடுத்தால் நஞ்சு விரைவில் வெளியேறிவிடும்…
இவை அனைத்தும் நமது முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றிய மருத்துவ முறைகள் ஆகும்.. செலவில்லா வைத்தியம் செய்து நமது நாட்டின் செல்வங்களான ஆடு மற்றும் பசுக்களை பாதுகாப்போம்… நன்றி…
நன்றி : பா ரா