நேரடி நெல் விதைக்கும் கருவி
நெல் சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு கருவியைப் பயன்படுத்தி நெல் விதைப்பு செய்வதில் சில நேரடி பிரச்சனைகள் உள்ளன. எனவே இது சார்ந்த பிரச்சனைகளை குறைப்பதற்காக, கோடை உழவு செய்ய வேண்டும்.அவ்வாறு செய்வதன் மூலம் தேவையற்ற களைகள் மற்றும் பூச்சிகள், பூச்சி கூடுகள், பூச்சி முட்டை போன்றவைகளை கட்டுப்படுத்தி நம்மால் களைய முடியும் .
அப்படி வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் வயலை நன்கு உழுது பின்பு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி களை மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். அதன் பின்பு,நேரடி நெல் விதைப்பு செய்ய வேண்டும் இதன் மூலம் களைகளை கட்டுப்படுத்த பூச்சி மற்றும் பூஞ்சாண தாக்குதலில் இருந்து நேரடி நெல் விதைப்பு செய்த பயிர்களை காப்பாற்ற முடியும். தேவையற்ற களைகள் நிலத்தில் வளரும் பொழுது அதனை ஆட்களைக் கொண்டு களை எடுப்பது மிக நல்லது. மிகவும் எளிதான வழியான கோனோவீடர் என்ற கருவியை கொண்டு குறைந்த கூலியில் களைகளை கட்டுப்படுத்த முடியும். நீர் பாசனம் செய்த பின்பு கோனோவீடர் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும்.
நேரடி நெல் விதைப்பு நிலத்தில் விதைக்கும் பொழுது சிறிது அளவு நீர் இருக்குமாறு பராமரிக்க வேண்டும் நன்கு முளைகட்டிய விதைகளை விதை பெட்டியில் இரண்டு பாகம் நிரப்ப வேண்டும் இதை பின் கதவுகளை நன்கு இறுக்கி மூடி இருக்க வேண்டும் இந்த விதையின் கருவியை முன்னோக்கி நடப்பது போன்று கையில் எடுத்துச் செல்வதன் மூலம் சீரான முறையில் வயலில் விதைக்கப்படும் அவ்வாறு விதைப்பு செய்யும் பொழுது நாம் விதைத்த இடத்தில் இந்த நேரடி நெல் விதைப்புக் கருவியின் சக்கரத்தைக் கொண்டு நாம் பயிரிட வேண்டிய இடத்தை கண்டறிய முடியும். ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை விதை விழும் பகுதியை நன்கு பார்த்து விதை விதைப்பு சரியான முறையிலும் குறிப்பிட்ட இடைவெளி உள்ளதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
நேரடி நெல் விதைப்புக் கருவியின் சில பயன்கள்
ஒரே நாளில் இரண்டு பேர் சேர்ந்து இரண்டரை ஏக்கர் வரை நெல் விதைப்பு செய்ய முடியும். இதன் மூலம் ஆட்களின் கூலி அதிகம் மிச்சப்படுத்த முடியும்.
நேரடி நெல் விதைப்புக் கருவி பயன்படுத்துவதன் காரணமாக நாற்று படிப்பது நாற்றங்கால் நடவு செய்வது இதற்காக ஆகும் ஆட்கூலி போன்றவை இல்லாமல் மிகவும் குறைகிறது.
நேரடி நெல் விதைப்புக் கருவியின் மூலம் நெல்லை நேரடியாக விதைப்பதால் கிடைக்கும் மொத்த அளவில் 25 முதல் 30% வரை விதையின் அளவு குறைகிறது.
நடவு செய்யும் பயிரை விட நேரடி நெல் விதைப்பில் விதைப்பின் மூலம் நெற்பயிர் 10 முதல் 15 நாட்களுக்கு முன்பாகவே அறுவடைக்கு தயாராகி விடுகிறது.
நேரடி நெல் விதைப்பு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யும்பொழுது காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருக்க வேண்டும் இதன் காரணமாக நீர் சேமிப்பு மொத்த பரப்பளவில் 15 முதல் 30 சதவீதம் வரை நமக்கு சேமிக்க முடிகிறது.
ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ஆகும் செலவில் சில ஆயிரங்கள் குறைவதால் நமக்கு கிடைக்கும் லாபமும் அதிகரிக்கிறது.
இந்த விதை கருவியை பயன்படுத்தி நெல் விதைப்பு செய்வதன் காரணமாக ஒரு பயிருக்கும் இன்னொரு பயிருக்கும் இடைப்பட்ட இடைவெளி 20 சென்டிமீட்டர் என்ற ஒரே அளவில் இருக்கும் மேலும் சரியான நெல் பயிர்களில் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.