நாமே தயாரிக்கலாம் இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள்

இயற்கை உரங்கள் , இயற்கை பூச்சி விரட்டிகள்

 

இயற்கை விவசாயத்தில் மிக முக்கிய பங்கு தேவை பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை உயிர் உரங்கலுமே மிக பெரிய பங்காகும் . பஞ்சகவ்யா ,வேப்பங்கொட்டை கரைசல் ,நீம் அஸ்திரம் ,மீன் அமிலம் ,ஜீவாமிர்தம் , கன ஜீவாமிர்தம் மற்றும் EM கரைசல் என்று மிக அதிக உள்ளது. அவைகளின் தயாரிப்பு முறைகள் பற்றிய விரிவான விளக்கங்களை காண்போம் .

இயற்கை உரம் பஞ்சகவ்யா

நமது இடத்திருக்கு உரிய நாட்டு பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி பஞ்சகவ்யா தயாரிக்கப்படுகிறது. கலப்பின மாடுகளை கொண்டு தயாரிக்கவும் முடியும் . பயன்படுத்தும் பொழுது பெரியதாக எந்த மாற்றமும் இல்லை என்பது அனுபவம் . பஞ்சகவ்ய தயாரிக்க 5 கிலோ பசுமாட்டு சாணத்துடன் 500 கிராம் நெய்யைக் கலந்து நன்றாகப் பிசைந்து உருண்டை சேர்த்து 30-50 லிட்டர் அளவு கொண்ட பீப்பாய்க்குள் வைத்து மூடவேண்டும். இந்த கலவை தொடர்ந்து 3 நாட்கள் பீப்பாய்க்குள் இருக்கும். நான்காவது நாள் இதனுடன் மேலும் சில பொருகளை கலக்க , அந்த கலனின் மூடியைத் திறந்து பால், தயிர், இளநீர், பிசைந்த வாழைப்பழம், ஆகிய நான்கு பொருட்களை சேர்த்துக் நன்கு கலக்க வேண்டும். இதனுடன் 3 லிட்டர் தண்ணீரில் சர்க்கரை ( நாட்டு சக்கரை ,வெல்லம் அல்லது கருப்பட்டி ) யை கலந்து தண்ணீராக மாற்றி பீப்பாய்க்குள் ஊற்றவேண்டும்.

 

panchagavya-இயற்கை-உரம்-பண்ணையார்-pannaiyar.jpg

இதில் நாட்டுச் சர்க்கரையை நேரடியாக சேர்க்கக் கூடாதுஅதன் காரணமாக வெ நன்கு தண்ணீரில் கலந்து பயன் படுத்த வேண்டும் . தொடர்ந்து 10-வது நாள் வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகள் பீப்பாய்க்குள் இருக்கும் கரைசலை திறந்து கடிகார முள் சுழலும் திசைப் பக்கம் நன்கு ஒரு சுத்தமான மரத்தை கொண்டு கலக்கி விடவேண்டும். கலவையை கலக்கிய பின் மூடிவைக்கவேண்டியது முக்கியம். 11-வது நாளில் பனைமரத்து கள் சேர்த்து தொடர்ந்து 7 நாட்கள் இருவேளையும் கலக்கி வர வேண்டும். 19-வது நாளில் பஞ்சகவ்யா தயார். இதை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இந்த கரைசலை 6 மாதம் வரை வைத்திருக்கலாம். இதுவும் ஒரு வகையான EM வகை கரைசல் தான் . இதில் நிறைய நன்மை செய்யும் திறன்மிகு நுண்ணுயிர்கள் ( Effective Micro-Organisms ) உள்ளது .

இஞ்சி – பூண்டு கரைசல்

jinger-garlic-soap-chilli-pannaiyar_com
பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்து சிறிதளவு தண்ணீரில் கரைத்து நோய்த்தாக்கம் இருக்கும் அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம்.இதன் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கட்டு படுத்த படும் .இது மிக சிறந்த இயற்கை பூச்சி கொல்லி ஆகும் .

 

 

 

 

அமிர்த கரைசல்

நாட்டு மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவற்றை வஒரு பெரிய ாளியில் எடுத்துக் கொண்டு, அதில் வெல்லம் ( நாட்டு சர்க்கரை , கருப்பட்டி ) மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து 24 மணிநேரம் குளிர்ச்சி இருக்கும் படியான நிழலான இடத்தில் வைக்க வேண்டும் . இதனுடன் நுண்ணுயிரிகளான அசொச்பயிர்லம் மற்றும் அனைத்து விதமன்வற்றையும் கலந்து வைக்கலாம் . இப்போது வளமான அதிக சத்துக்கள் கொண்ட அமிர்த கரைசல் தயார். இதனை 5 நாளைக்கு ஒருமுறை நிலதிருக்கு கொடுக்கலாம். தேவைப்பட்டால் வாரம் ஒருமுறையும் கொடுக்கலாம். இதனை பயன்படுத்த ஒரு பங்கு கரைசலுடன் பத்து பங்கு தண்ணீர் சேர்த்து கரைசலுக்கு கொடுக்கலாம்.

இயற்கை முறை மூலிகை பூச்சி விரட்டி

நமது இடத்தை சுற்றி கிடைக்கும் ஊமத்தை, வேப்பிலை, துளசி, எருக்கஞ்செடி, நொச்சிலை, தும்பை போன்ற மூலிகைகளின் இலைகளை 6 கிலோ எடுத்து எடுத்து ஒரு பெரிய கலனில் போட்டு ,அதில் ஒருலிட்டர் நாட்டு மாட்டு சிறுநீர் சேர்த்து ஒருவாரம் ஊறவைத்து பின்பு நன்கு வடிகட்டிப் பயன்படுத்தலாம். இந்த மூலிகை பூச்சி விரட்டியை 10 லிட்டர் நீருடன் ஒருலிட்டர் என்ற வீதத்தில் கலந்து தெளிக்கலாம். இதில் நல்ல முறையில் பூச்சிகள் கட்டுபடுகின்றது .

தேமோர் கரைசல்

புளித்த மோர் – 5 லிட்டர், தேங்காய்ப்பால் – 1 லிட்டர், தேங்காய் துருவல் – 10 தேங்காய், ஏதேனும் அழுகிய பழங்கள் – 10 கிலோ ( சந்தையில் அதிகம் கிடைக்கும். மாலைநேரத்தில் சென்றால் மிக குறைந்த விலையில் வாங்க முடியும் ) ஆகிய பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். புளித்த மோர் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இதில் எறும்பு வரும் வாய்ப்புகள் அதிகம் .இவற்றுடன் 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில் போட வேண்டும். தினமும் கரைசலை களை மாலைக் கலக்கி வரவேண்டும். ஏழு நாட்களில் இந்த தேமோர்க் கரைசல் தயாராகி விடும். இப்படி தயாரான கரைசலை 8-ம் நாள், 1 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் அனைத்து செடிகளுக்குத் தெளிக்கலாம்.இது பயிர்களுக்கு நல்ல வளாச்சி ஊக்கியாகும் .

அரப்பு மோர் கரைசல்

புளித்த மோர் – 5 லிட்டர், இளநீர் – 1 லிட்டர், அரப்பு இலைகள் – 2 கிலோ வரையில் , 500 கிராம் பழக்கழிவுகள் அல்லது பழக்கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட சாறு ஒரு லிட்டர் அளவு ஆகிய பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்திற்கு வைத்திருக்க வேண்டும். இந்த ஒருவார காலத்தில் இந்த கலவை நன்கு நொதிக்கத் தொடங்கி விடும். இவ்வாறு நொதித்த கரைசலே அரப்பு மோர் கரைசல் ஆகும்.

இயற்கை உரங்கள்

இதில் கடையில் கிடைக்கும் அரப்பு இலைத் தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழக் கலவைகளுக்குப் பதிலாக பழச்சாறு பயன்படுத்த வேண்டும். இந்த நான்கு பொருட்களையும் நன்கு கலந்து நிழலான இடத்தில வைத்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும். ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்.

இயற்கை பூச்சி விரட்டி வேப்பங்கொட்டை கரைசல்

இந்தியாவில் அதிகம் காணப்படும் மரங்களில் மிக முக்கியமான ஒன்று வேப்பம் மரங்கள் .ஐந்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் மிகுந்த கசப்பு தன்மையும் மருத்துவ குணமும் கொண்டவை . இதில் இருக்து கிடைக்கும்
நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ, தண்ணீர் ( சுத்தமான தண்ணீர் ) – 100 லிட்டர், கதி ோப்பு – 200 கிராம், மிகவும் மெல்லிய மஸ்லின் வகை துணி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை (5 கிலோ) நன்கு பவுடராகும் வரை அரைக்க வேண்டும். இரவு முழுவதும் பத்து லிட்டர் சுத்தமான தண்ணீரில் ஊறவைத்து ,ஒரு மரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் பால் நிறம் போன்ற வெண்மையாகும் வரை நன்றாகக் கலக்கி விட வேண்டும். மெல்லிய மஸ்லின் துணியை இரண்டு அடுக்குகள வைத்து கொண்டு கரைசலை வடிகட்டி , இதனும் மேலும் 90 தண்ணீர் கலந்து அதன் அளவை நூறு லிட்டராக ஆக்க வேண்டும். இதனுடன் 1 சதவிகிதம் காதி சோப்பு சேர்க்க வேண்டும். எப்பொழுதும் புதிதாகத் தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும். இந்த கரைசலை மதியம் 3.30 மணிக்குப் பின்பு தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

இயற்கை உரம்  வளர்ச்சியூக்கி

கிராமபுரங்களில் நடக்கும் சந்தை அல்லது கடையில் அழுகும் நிலையில் அல்லது அழுகிய பழங்களை (வாழை, பப்பாளி, சீதா பழம், பரங்கிபழம் ) வாங்கி வந்து நன்றாகப் பிசைந்து அதனுடன் 1 கிலோவிற்கு 1/2 கிலோ என்ற அளவில் நாட்டுச்சக்கரை ( வெல்லம் , கருப்பட்டி ) சேர்த்து நன்றாகக் கலக்கி ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் / பிளாஸ்டிக் வாளியில் மூடி வைக்கவும், 15 நாட்கள் நன்றாக நொதிக்க விட வேண்டும், இடைப்பட்ட நாட்களில் காலையும்., மாலையும் நன்கு கிளறி விட வேண்டும். 15வது நாள் அக்கரைசலை வடிகட்டி 1 லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஸ்பிரே செய்தால் பயிரில் நல்லதொரு வளர்ச்சி கண்கூட காண முடியும் . இவ்வாறு தெளிப்பதன் மூலம் பயிர்களுக்கு இலை வழி ஊட்டம் கிடைக்கும்.

சுக்கு அஸ்திரம்

சுக்குத்தூள் ( உலர்ந்த இஞ்சி ) 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து அடுப்பில் வைத்து மெதுவான நெருப்பில் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். பின்பு குளிர வைக்க வேண்டும். பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரமல்லாத பாத்திரங்களில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். திரவத்தில் மேலே படிந்திருக்கும் ஆடையை அகற்றி விடவேண்டும். நன்கு ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து வயலில் தெளிக்கலாம். இது ஒரு மிகச்சிறந்த இயற்கை பூஞ்சாணக் கொல்லியாகும். இந்த இயற்கை கரைசலை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

இயற்கை பூச்சி விரட்டி நீம் அஸ்திரம்

நாட்டு மாட்டுச்சாணம் 2 கிலோ, நாட்டு மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் வேப்ப இலை 10 கிலோ, இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி இரண்டு நாட்கள் நன்கு ஊற வைக்க வேண்டும். இதனை மூடி போட்டு மூடி வைக்கக் கூடாது, காற்றோட்டம் அவசியம் . இக்கரைசலை காலை மாலை என கடிகாரச்சுற்றுக்கு எதிர்த்திசையில் மூன்று தடவை கலக்கி விடவேண்டும். பின்பு வடிகட்டி வயலில் தெளிக்கலாம். பல வகை கெடுதல் செய்யும் பூச்சிகளுக்கு இது ஒரு நல்ல இயற்கை பூச்சி விரட்டியாகும்.இதில் நாட்டு மாடுகள் பங்கு மிக அதிகம் .

மீன் அமிலம்

உணவுக்குப் பயன்படாத மீன் கழிவுகளுடன் , சிறிது நல்ல மீன்களும் சேர்த்து , இந்த எடைக்கு சம அளவு பனை வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும். இதனை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு காற்று புகாமல் மூடி நிழலான வைக்க வேண்டும். நாற்பது நாட்கள் கழித்து தூர்நாற்றம் இல்லாமல் தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.

மீன்-அமினோ-அமிலம்-இயற்கை-பூச்சி-விரட்டி-பண்ணையார்.jpg

 

இந்த திரவத்திலிருந்து கெட்டை வாடை வீசாமல் , பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். தயார் செய்த மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 180 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இயற்கை உரம்  ஜீவாமிர்தம் தயாரிப்பு

தேவையான பொருள்கள் :

  1. 200லி அளவுள்ள பிளாஸ்டிக் டிரம்
  2. ஒரு மாடு ஒருநாள் கொடுக்கும் சாணம்
  3. மாட்டு கோமயம் கிடைக்கும் மட்டும். (5லி)
  4.  கரும்பு வெல்லம் 2கிலோ.
  5. ஈரிலை தாவர பயறு மாவு 2கிலோ.
  6. உங்கள் வயலின் சத்தான மண் ஒரு கைபிடி அளவு.

ஜீவர்மிர்தம்-கரைசல்-பண்ணையார்.jpg

நாட்டு மாடுகள் மூலம் கிடைக்கும் பசுஞ்சாணம் – 10 கிலோ, நாட்டு பசுங்கோமியம் – 5 முதல் 10 லிட்டர், வெல்லம் – 2 கிலோ (அ) கரும்புச்சாறு – 4 லிட்டர், தானிய மாவு – 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து), காட்டின் மண் – கையளவு, தண்ணீர் – 200 லிட்டர் (குளோரின் கலக்காதது) ஆகிய பொருட்கள் தேவை. 100 லிட்டர் தண்ணீரில் சாணம், கோமியம், வெல்லம் அல்லது கரும்புச்சாறு, தானியமாவு ஆகியவற்றுடன் கையளவு மண் சேர்த்து ஒரு தொட்டியில் இட்டுக் கலக்க வேண்டும். தினமும் 3 முறை 3 நாட்களுக்குத் தவறாமல் கலக்கி விடவேண்டும். ஒரு கிராம் மண்ணில்பல கோடிக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன. இவ்வாறு கலக்கப்பட்ட இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜீவாமிர்தம். தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை, குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இயற்கை உரம் கன ஜீவாமிர்தம்

 

organic-manure-gana-jeevamirtham-pannaiyar-com.jpg
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு நாட்டு மாட்டுச் சிறுநீரை கலக்க வேண்டும். பின்பு உருட்டி நிழலில் காயவைத்து தேவைப்படும் போது உதிர்த்துப் பயன்படுத்தலாம்.இதுஅதிக நாட்கள் வைத்து பயன் படுத்தும் ஒரு உலர்ந்த முறை இயற்கை உரம் ஆகும்

EM கரைசல் பயன் கள்

பயிர்களுக்கோ அல்லது கால்நடைகளுக்கு நாட்களில் பயன் படுத்த வேண்டும் .
அறுபது நாட்கள் தாண்டிய கரைசலை வீட்டில் இருக்கும் Spetic Tank ல் கலந்து  விடுவது மிகவும் நன்மை பயக்கும். தேவை இல்லாத துர் நாற்றத்தை தவிர்க்க முடியும் .

Panjakavya – பஞ்சகவ்யா பற்றிய புத்தகம்

Panjakavya-பஞ்சகவ்யா-books-pannaiyar

 

இந்த புத்தகம் படிக்க விரும்பினால் இங்கு வாங்கி கொள்ளலாம். அல்லது ஏதும் புத்தக கண்காட்சியில் சென்றும் வாங்கலாம்

 

One Response

  1. KVS 17/04/2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline