நல்ல லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு – முனைவர் கு.நாகராசன்
நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக பகுதிநேர வேலையாக நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு கால்நடைகளை வளர்த்து விற்பனை செய்பவர்களும் உண்டு. உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.