தூக்கமின்மையை விரட்ட அற்புத உணவுகள்
தூக்கமின்மை சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உள்ளிட்ட சிறிய தொந்தரவுகளினால் கூட தூக்கம் தடைபடலாம். அது விரைவில் சரியாகி விடும். 30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை துவங்குகிறது.
தூக்கமின்மையை எளிதில் விரட்டியடிக்கக்கூடிய உணவுகளை பார்ப்போம்…
ஓட்ஸ் சூப்:
தேவையான பொருட்கள்:
ஒரு கப் பொடியாக நறுக்கிய குடை மிளகாய்.
வெண்ணெய் 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் அரை டீஸ்பூன்,
பச்சை பிரியாணி இலை சிறிதளவு,
பால் இரண்டு கப்,
பூண்டு இரண்டு பல்
செய்முறை:
சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊறிய ஒரு கப் ஓட்சை மசித்துக் கொள்ளவும். அதில் இரண்டு கப் பால் ஊற்றி கொதிக்க விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, பட்டை, பிரியாணி இலை, குடைமிளகாய் ஆகியவற்றை தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி வேக விடவும். ஓட்ஸ் உடன் சேர்த்து இறுதியில் வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப்பாக அருந்தலாம். ஓட்ஸ் சேர்ப்பதால் செரோட்டின் சுரப்பு அதிகரிக்கும்.
முருங்கைக்காய் பிரைடு ரைஸ்:
முருங்கைக்காய்களை வேக வைத்து அதன் சதை பகுதியை ஒரு கப் அளவுக்கு சேகரிக்கவும்.
இரண்டு வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி சேர்த்து 1 கப் எடுத்துக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன், மிக்சியில் அடித்த தக்காளி கால்கப், ஒரு கப் பாசுமதி அரிசி எடுத்துக் கொள்ளவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய் சிறிதளவு, புதினா கொத்தமல்லி ஒரு கப், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், நெய் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.
மசாலாப் பொருட்களை வதக்கிய பின்னர் காய்கறிகள் சேர்த்து வதக்கி, அரிசியுடன் இரண்டு மடங்கு தண்ணீர் கலந்து குக்கரில் இரண்டு விசில் விடவும்.
கடைசியில் முருங்கைக்காய் விழுது, புதினா, கொத்தமல்லி, நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
கிரீம் புரூட் சாலட்:
புளிக்காத தயிர் ஒரு கப் எடுத்து துணியில் கட்டி இரண்டு மணி நேரம் தொங்க விடவும்.
தண்ணீர் வடிந்து கிரீம் மட்டும் மிச்சம் இருக்கும்.
ஆப்பிள், அன்னாசி, திராட்சை, பப்பாளி, மாதுளை, கொய்யா ஆகியவற்றை பொடியாக நறுக்கி இரண்டு கப் எடுத்துக் கொள்ளவும். இதில் கால் கப் தேன் சேர்க்கவும்.
மிளகுத்தூள் அரை டீஸ்பூன், தயிரில் இருந்து சேகரித்த கிரீம் சேர்த்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிடலாம். மினரல், வைட்டமின் சத்துக்கள் கிடைக்கிறது.