சுய ஒழுக்கம் 18 விதிகள்

நமக்கு நாமே கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:

 

hapiness of life சுய ஒழுக்கம்

 1. எந்தச் சூழ்நிலையிலும் நமது தன்னம்பிக்கையை இழந்து விடாமல், தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
 2.  எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் நாம் செய்யப்போகும் செயலைப் பற்றிய அறிவை புத்தகங்களை  படித்தும், நாம் முடிவு செய்த செயலில் நல்ல அனுபவம் கொண்டவர்களை கண்டுபேசியும் அறிந்து கொள்வது மிக அவசியம்.
 3.  எவ்வளவு  நெருங்கிய நண்பராக இருந்தாலும்  நமது குடும்பம் மட்டுமே அனைத்தையும் விட முக்கியம்.
 4.  எப்பவுமே வீட்டில் இருப்பவர்கள் சொல்லும் வார்த்தைக்கு மரியாதை  கொடுக்க வேண்டும்.
 5.  தேவை  இல்லாத இரவு நேர பொழுதுபோக்குகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. அப்படி வெளியே செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் பொழுது, இரவு 9 மணிக்குள் வீட்டிற்கு வந்து விடுவது நலம்.
 6.  சில நல்ல நண்பர்கள் சின்ன சின்ன தவறுகள் செய்தால் கூட, அதற்கான அந்த நட்பை துண்டித்துக் கொள்வது தவறு. அதேபோல உண்மையான நல்ல நண்பர்கள் கிடைப்பது இன்றைய காலக்கட்டத்தில் மிக மிக கடினம்.
 7.  குடும்பத்தில்  ஏற்படும் சிறுசிறு கணவன்-மனைவி பிரச்சினைகளை ,இருவரும்  அமர்ந்து மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வது மட்டுமே நல்ல விஷயமாக இருக்கும்.
 8.  குழந்தைகள் முன்பு கணவன் மனைவி சண்டை போட்டுக்  கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
 9.  குழந்தைகளுக்கு என்று  ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தை நேரத்தை ஒதுக்கி  குழந்தைகளுடன் தங்களுடைய நேரத்தை செலவழிக்க வேண்டும். இவ்வாறு செலவழிப்பது குழந்தைகளுக்கும், உங்களுக்கும் உண்டான ஒரு நல்ல உறவையும் புரிதலையும் ஏற்படுத்தும்.
 10.  நமது பெற்றோர்களை  நாம் கடைசி வரை பார்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் சந்தோசம் மட்டுமே நமது சந்தோஷம்.நமது பெற்றோர்களுக்கான அவர்களின் குறைந்தபட்ச வசதியை ஆவது நாம் நிச்சயம் செய்து கொடுக்க வேண்டும். அவர்களின் சந்தோசம் மட்டுமே நமது சந்தோஷம்.
 11.  அதேபோல அடுத்தவர்களின் அந்தரங்க வாழ்க்கை, திருமணம், அவர்களுடைய உடல் அமைப்பு, அவர்கள் வீட்டில் உள்ள வசதிகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பற்றிய எந்தவிதமான கிண்டலும் கேலியும் பண்ண கூடாது.அது அவர்களின் மனதை அதிகமாக நோகடித்து விடும். இது ஒரு தவறான ஒரு விஷயம்.
 12.   இரவல் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவ்வாறு இரவல் வாங்கும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் அவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். வாங்கும் பொழுது எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் அவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். முடிந்த அளவு இரவல் வாங்குவதை தவிர்த்து விடுவது மிகவும் நலம்.
 13. நண்பர்களோ உறவினர்களோ மருத்துவமனையில் இருந்தால் , அவர்களை நேரில் சென்று பார்க்கும் பொழுது, சிறிது நேரம் செலவிட்டு பின்பு அங்கிருந்து கிளம்பி வந்து விட வேண்டும். நாம் செல்லும்பொழுது அதிகமாக மக்கள் கூட்டம் இருப்பின், காத்திருந்து பார்த்துவிட்டு வரவேண்டும்.
 14.  உங்களின் அரசியல் பார்வைகளை அடுத்தவர்கள் மேல் திணிப்பது தவறு,அதேபோல அவர்களின் அரசியல் அபிப்பிராயங்களை தவறு என்று பேச வேண்டாம்.
 15. அரசாங்க சேவைகளை பயன்படுத்தும் பொழுது பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு பேருந்து காத்திருப்பு கூடங்களில் இருக்கும் இருக்கைகளை கிளம்பும் முன்பு உடைத்து விட்டு செல்வது மிகவும் தவறு.
 16.  நம்முடைய உடல் நிலை உடல் நலம் மிகவும் முக்கியம். உடல் நிலையிலும் உண்ணும் உணவிலும் கவனமாக இருக்க வேண்டும். 30 வயதை  கடந்த அனைவரும் வருடம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து நமது உடல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.
 17.  அதே மாதிரி இளம் வயதில் அல்லது நல்ல முறையில் சம்பாதிக்கும் காலத்தில் மாதம் மாதம் நிச்சயம் ஒரு தொகையை சேமிப்பாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவும்.
 18. வாகனத்தில் செல்லும் பொழுது போக்குவரத்து விதிகளை நாம் கடைபிடிக்க வேண்டும் மற்றவர்களை பற்றிய எந்தவிதமான கவலையும் இன்றி நாம் போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பது மிக அவசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline